கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால், அங்கிருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது பற்றியும், மார்க்கெட்டை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பியிருந்த சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் திக்குத் தெரியாமல் திசைமாறிச் சிதறிப்போனது பற்றியும் கடந்த பத்து அத்தியாயங்களாக விவரித்திருந்தேன்.

தவிர, மார்க்கெட்டை இடம் மாற்றியதில் அரசுத் தரப்பு செய்த குளறுபடிகளையும் சுட்டிக்காட்டினேன். எல்லாவற்றுக்கும் மேலாக, மார்க்கெட் மூடப்பட்டதன் பின்னணியில் ரியல் எஸ்டேட் தொழில் அழுத்தங்கள் மற்றும் சில்லறை வணிகத்தில் இறங்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தொடர்புகள் குறித்து வியாபாரிகள் எழுப்பிய சந்தேகங்களையும் கோடிட்டுக்காட்டினேன்.

தொடரின் நிறைவுப்பகுதி இது. நியாயமான தீர்வைச் சொல்ல வேண்டியதும் கடமை எனக் கருதுகிறேன். மார்க்கெட் உருவாக்கப்பட்டபோது திட்டமிடப்பட்ட வரைமுறைகளைத் தேடிப் படித்தபோது, தீர்வு புலப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட்டை நிர்வாகம் செய்ய சி.எம்.டி.ஏ-வின் உறுப்பினர் - செயலரை உள்ளடக்கிய 18 பேர் கொண்ட குழுவைத் தேர்ந்தெடுத்து, `அதுவே அங்காடி நிர்வாகக்குழுவாகச் செயல்படும்’ என்று வரையறுத்திருக்கிறார்கள். அரசுத் தரப்பில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உப தலைவர், மொத்த விற்பனை செய்யும் வணிகர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மூன்று பேர், வணிகர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மூன்று பேர், சி.எம்.டி.ஏ-வின் ஆலோசனையின் பேரில் தேர்ந்தெடுக்கப்படும் அரசுப் பொறுப்பில் இல்லாத இரண்டு பேர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் அல்லது அவர் பரிந்துரைக்கும் ஒரு நபர், சி.எம்.டி.ஏ-வின் முன்னாள் தலைமை திட்ட வடிவமைப்பாளர் அல்லது அவர் பரிந்துரைக்கும் ஒரு நபர், சி.எம்.டி.ஏ-வின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது அவர் பரிந்துரைக்கும் ஒரு நபர், வேளாண்மைத்துறையில் பணியாற்றிய முன்னாள் இயக்குநர் அல்லது அவர் பரிந்துரைக்கும் ஒரு நபர், சி.எம்.டி.ஏ-வின் ஆலோசனைப்படி அரசு நியமிக்கும் இரண்டு அதிகாரிகள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படும் ஓர் அரசு அதிகாரி. இவர்கள் அனைவரையும் சி.எம்.டி.ஏ-வின் உறுப்பினர் - செயலர் வழிநடத்துவார். இதுவே 18 பேர்கொண்ட குழு.

ஆனால், இப்படி ஒரு குழு அமைக்கப்படவே இல்லை. இத்தனை குளறுபடிகளுக்கும் குழப்பங்களுக்கும் காரணம் இதுதான். இப்படி ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தால், அதில் இடம்பெற்றிருக்கும் வேளாண்மைத்துறை சார்ந்த உறுப்பினர், விவசாயப் பொருள்கள் வீணாகும் அபாயத்தைத் தடுக்க ஆலோசனை கூறியிருப்பார். வணிகர்களின் சார்பாக குழுவில் இடம்பெறுபவர்கள் வியாபாரிகளின் குரலை எதிரொலித்திருப்பார்கள்.

ஆனால், பட்டியலில் கடைசியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தலைமை நிர்வாக அதிகாரியை மட்டுமே நியமித்து, அவர் மட்டுமே நிர்வாகம் செய்யும் தனிநபர் குழுவாகவே இயங்கிவருகிறது தற்போதைய அங்காடி நிர்வாகக்குழு. அதற்கு மேல்... பெயரளவில் மட்டுமே உயரதிகாரிகள். அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் தலையீடும் அதிகம். தவறுகள் நடப்பதைத் தடுக்க வழியில்லை. நல்லதை ஆலோசிக்கவும் அல்லதைத் தவிர்க்கவும் வாய்ப்பேயில்லாமல் போய்விட்டது.

அங்காடி நிர்வாகக்குழுவுக்கு உயிர் கொடுத்து, தகுதியான 18 பேரை நியமித்தால்தான் ஜனநாயகம் துளிர்க்கும். அதுவே கோயம்பேடு வணிகர்களையும் பிழைக்க வைக்கும்.

இன்னொரு விஷயம்... சி.எம்.டி.ஏ உறுப்பினர்-செயலர் கார்த்திகேயன், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டை நிரந்தரமாக மூடிவிட்டு, ரியல் எஸ்டேட் செய்துவிடுவார்கள் என்பது கற்பனை யான குற்றச்சாட்டு. கடைகள் அனைத்துமே வியாபாரிகளின் சொந்தப் பெயரில் பட்டாவுடன் தானே இருக்கிறது?’’ என்று கேள்வியெழுப்புகிறார். டெல்டாவில் விவசாயிகளின் நிலங்கள் அவர்கள் சொந்தப் பெயர்களில் இருக்கும்போது, மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டுவந்து அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து நிலத்தைப் பறிக்க முயற்சிகள் நடக்கத்தானே செய்கின்றன. அப்படியிருக்கும் போது, தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சிகள் நடக்கும்போது, கோயம்பேடு வியாபாரிகளின் அச்சமும் புறந்தள்ள முடியாததுதான்!

(நிறைவடைந்தது)

கோயம்பேட்டின் மொத்த நிர்வாகத்தையும் வழிநடத்தும் அரசுத்துறை பொறுப்பிலுள்ள சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் - செயலர் கார்த்திகேயனிடம் பேசினோம். “டெல்லி ஆஸாத்பூர் மார்க்கெட்டிலிருந்து கொரோனா தொற்று பரவியதையடுத்து, மார்க்கெட்டை மூடிவிட்டார்கள். நாட்டின் பல நகரங்களில் இப்படி மிகப்பெரிய மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருக்கின்றன. உள்ளூர் நிலைமையைப் பொறுத்து சிலவற்றை மீண்டும் திறந்தார்கள். மீண்டும் திறந்தவற்றில் சிலவற்றை, மீண்டும் மூடினார்கள். எல்லாமே உள்ளூர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படுபவை. எனவே, நாட்டிலேயே கோயம்பேடு மார்க்கெட் மட்டும்தான் மூடப்பட்டுவிட்டது என்று யாரும் கருத வேண்டாம்.

அடுத்ததாக, கோயம்பேடு கடைகள் அனைத்தும் வியாபாரிகளின் சொந்தக் கடைகள். கொரோனா தொற்றைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, கடைகளை அடைக்க அதிகாரிகள் அறிவுறுத்தினால் கூட அதைக் கடைப்பிடிப்பதில் வியாபாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். ஏற்கெனவே இது குறித்துப் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினோம்.

‘கோயம்பேடு மார்க்கெட்டை நிரந்தரமாக மூடிவிட்டு, ரியல் எஸ்டேட் செய்துவிடுவார்கள்’ என்ற கற்பனையான குற்றச்சாட்டுக்கெல்லாம் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை... கொரோனா பாதிப்பு நிரந்தரமாக இருக்கப்போகிறதா என்ன? குறிப்பாக, கடைகள் அனைத்துமே வியாபாரிகளின் சொந்தப் பெயரில் பட்டாவுடன் இருக்கும்போது இந்த பயமே தேவையில்லாதது. பெரும் நிறுவனங்கள் இந்தத் தொழிலில் உள்ளே நுழைவதற்கும், கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதற்கும் தொடர்பு இல்லை.

கோயம்பேடு வியாபாரிகள் தங்களது வியாபாரத்தைத் தொடர்வதற்கு வசதியாக, சென்னை முழுக்கப் பல்வேறு இடங்களிலும் இட வசதி செய்துகொடுத்துள்ளோம். உணவு தானிய வியாபாரிகள், ‘எங்கள் வியாபாரம் காய்கறி-பழம் போன்றது கிடையாது. நிறைய ஸ்டாக் வாங்கிவைத்து விற்பனை செய்யக்கூடியது. எனவே, விசாலமான நிரந்தர இட வசதி வேண்டும்’ என்கிறார்கள். அவர்கள் கேட்டது போன்ற வசதிகளுடனுள்ள இடங்களையும் காண்பித்தோம். ஆனாலும், ‘இது சரிப்பட்டு வராது’ என்று சொல்லிவிட்டார்கள். வியாபாரிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தையும் வீடியோ பதிவு செய்துவைத்திருக்கிறோம். இப்போதும்கூட மஞ்சம்பாக்கம், சாத்தாங்காடு என இரண்டு இடங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கிறோம்.

தற்போதைய சூழலைப் புரிந்துகொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர்கள் இப்போதும் நல்ல முறையில் ஆங்காங்கே வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சிலர்தான், ‘இப்போதுதான் கோயம்பேடு பகுதியில் பிரச்னை எதுவும் இல்லையே... மார்க்கெட்டைத் திறந்துவிடுங்கள். நாங்கள் இங்கேயே வியாபாரம் செய்கிறோம்’ என்கிறார்கள்.

கொரோனா பாதிப்புகள் குறைந்து, கோயம்பேடு மார்க்கெட்டைத் திறக்கலாம் என அரசு எப்போது முடிவு எடுக்கிறதோ, அப்போது மார்க்கெட் திறக்கப்படும். அப்போதும்கூட ஒட்டுமொத்தமாகக் கடைகளைத் திறந்து விடாமல் குறிப்பிட்ட நாள்களில், குறிப்பிட்ட பிளாக்கிலுள்ள கடைகளைத் திறப்போம். இப்படிக் கட்டுப்பாட்டுடன்கூடிய படிப்படியான நடவடிக்கைகளே மீண்டும் கொரோனா வராமல் நம்மைப் பாதுகாக்கும்” என்றார் விளக்கமாக.

சரி, அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்? கோயம்பேடு வணிக வளாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருக்கிறார் வருவாய்த்துறை டி.ஆர்.ஓ-வான கோவிந்தராஜ்.

“சிலர் நினைப்பதுபோல கோயம்பேடு மார்க்கெட்டை நிரந்தரமாக இழுத்து மூடி, வேறு யாரும் ஆக்கிரமித்துக்கொள்ளவோ, கைமாற்றிவிடவோ முடியாது. ஏனெனில், கோயம்பேட்டிலுள்ள கடைகள் அனைத்தும் வியாபாரிகளின் சொந்தக் கடைகள். `ஆக்கிரமிப்பு’ என்று சொல்லப்படும் கடைகளை அகற்றும் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ளும்போது, ‘இது எங்கள் கடையோடு சேர்ந்ததுதான்’ என்று கடை உரிமையாளர்கள் சொல்கிறார்கள். ஆனாலும், இந்த கொரோனா காலகட்டம் முடிந்து மீண்டும் கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்படும்போது, ஆக்கிரமிப்பு கடைகளே இருக்காது.

ஆரம்பத்தில் மெட்ரோ வாட்டர் நிர்வாகம்தான் மார்க்கெட் முழுவதும் குடிநீர் சப்ளை செய்துகொண்டிருந்தது. பின்னர், `சரியாகத் தண்ணீர் வருவதில்லை’ என்ற புகார் வியாபாரிகளிடமிருந்து வந்ததையடுத்து தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, கடைகளுக்குக் குடிநீர் விநியோகித்துவருகிறோம். கட்டணக் கழிப்பறைகளும் செயல்பட்டுத்தான்வந்தன. இது குறித்த புகார்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை.

மார்க்கெட் மூடப்பட்டுள்ள இந்த நேரத்தில், காய்கறி மார்கெட், பழ மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்தல் உட்பட அனைத்து அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளையும் கவனித்துவருகிறோம். மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை துறை சார்ந்த அதிகாரிகள் அரசுடன் கலந்தாலோசித்துதான் அறிவிப்பார்கள்’’ என்றார்.

கோயம்பேட்டு மார்க்கெட்டை நிர்வகிக்க 18 பேர் கொண்ட குழுவை அமைப்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டோம். “தற்போதைய உறுப்பினர் - செயலர்கூட இதைக் கூடுதல் பொறுப்பாகவே ஏற்றிருக்கிறார். வணிகர்கள் தரப்பில் அநேக சங்கத்தினர் இருப்பதால் இது தொடர்பாக ஒத்துழைக்க வில்லை. தற்போது இந்தக்குழுவை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது. கொரோனா பிரச்னை தீர்ந்தவுடன் முதல் வேலையாகக் குழு அமைக்கப்படும்” என்றார்கள்.