Published:Updated:

குளறுபடிகளின் மொத்த உருவம் ‘தமிழக அரசு!’ - கோயம்பேடு பகீர் - 8

கோயம்பேடு பகீர்
பிரீமியம் ஸ்டோரி
கோயம்பேடு பகீர்

ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

குளறுபடிகளின் மொத்த உருவம் ‘தமிழக அரசு!’ - கோயம்பேடு பகீர் - 8

ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

Published:Updated:
கோயம்பேடு பகீர்
பிரீமியம் ஸ்டோரி
கோயம்பேடு பகீர்

ஜி.கௌதம்

சிறு மழைக்கே கிழிந்து தொங்கிவிட்ட திருமழிசை தற்காலிக மார்க்கெட்டை தற்காலிகமாக இழுத்துப் பூட்டிவிட்டு, தார்ச்சாலை போடப்போகிறார்களாம்.

அதற்காக தொகை கேட்டு காத்திருக்கிறார்கள் சி.எம்.டி.ஏ அதிகாரிகள். பெருமழை பெய்ய ஆரம்பித்ததும் திருமழிசையில் ஏரி அளவுக்குத் தண்ணீர் சேருமே... ஒருவேளை காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரிலிருக்கும் `தால்’ ஏரியில் படகு மூலமாகச் சந்தை நடப்பதைப்போல, இங்கேயும் படகுச் சந்தையை உருவாக்கி, ‘உலகிலேயே தண்ணீர் இல்லாத ஊரிலும் படகுச் சந்தை அமைத்த அம்மாவின் அரசு’ என்று மார்தட்டுவார்களோ... அங்கே படகுவிடுவதற்காகவும் தனி பட்ஜெட் கேட்பார்களோ! குளறுபடிகள் இப்படி ஒன்று, இரண்டு அல்ல...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோயம்பேடு மார்க்கெட்தான் தமிழகத்தின் காய்கனி மற்றும் உணவு தானிய விநியோகத்துக்கான தலைமைச் செயலகம். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கடந்த காலங்களில் செய்து தரப்படாத அடிப்படை வசதிகளை மார்ச் மாதத்திலேயே செய்து தந்திருக்க வேண்டும். போதிய அளவு முகக்கவசங்களையும், கையுறைகளையும், கிருமி நாசினிகளையும் வழங்கியிருக்க வேண்டும். முக்கியமாக கோயம்பேடு மார்க்கெட்டில் வணிகம் எப்படி நடைபெறுகிறது என்ற குறைந்தபட்ச புரிந்துணர்வுடன் இந்தப் பிரச்னையை அணுகியிருக்க வேண்டும்.

குளறுபடிகளின் மொத்த உருவம் ‘தமிழக அரசு!’ - கோயம்பேடு பகீர் - 8

வியாபாரிகளில் மொத்தம் மூன்று ரகம். மொத்த விற்பனையாளர்கள் - இவர்களிடம் பொருள்களை வாங்கி விற்கும் சிறு மொத்த விற்பனையாளர்கள் (செமி ஹோல்சேல் விற்பனையாளர்கள்) - இவர்களிடமிருந்து வாங்கி விற்கும் சில்லறை விற்பனையாளர்கள். இந்த மூன்று தரப்பினர்தான் காய்கறிகள், பழங்கள், மலர்கள் மற்றும் உணவுப் பொருள் விநியோகத்தை அடுத்தடுத்து நகர்த்தும் தொடர் ஓட்டக்காரர்கள். ஆரம்பத்திலிருந்தே இந்த விநியோகச் சங்கிலியை அறுத்தெறிவதிலேயே குறியாக இருக்கிறார்கள் அதிகாரிகள். அதனால் லாபம் அடையப்போவது நேரடியாகக் களத்தில் இறங்கப்போகும் கார்ப்பரேட் கம்பெனிகள்தான் என்பது சொல்லாமலேயே புரியும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரக்கு வாகனக் குளறுபடி!

வெளியே இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து சேரும் சரக்கு வாகனங்களை உள்ளே நிறுத்தி, அவற்றிலிருந்து மற்ற வாகனங்களுக்குச் சரக்குகளை மாற்றுவார்கள். கோயம்பேட்டில் வைத்து விற்பனை செய்ய வேண்டிய சரக்குகளை மட்டும் இறக்கி வைத்துக்கொள்வார்கள். இதுதான் நடைமுறை. இதைப் புரிந்துகொள்ளாமல், இறக்கிக்கொள்ள தனி நேரம் - ஏற்றி அனுப்ப தனி நேரம் என ஆணையிட்டார்கள். நாடு முழுவதிலுமிருந்து வரும் சரக்கு வாகனங்கள் அதிகாரிகள் குறிப்பிடும் நேரத்துக்கெல்லாம் வராது. வியாபாரத்தின் தன்மைக்கு ஏற்பவே வரும். தனி நேரம் நிர்ணயித்ததால் நேர விரயமானது. வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதாயிற்று. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடுத்தடுத்த ஊர்களுக்குச் சரக்குகள் செல்வதில் குளறுபடியானது.

ஒரு கட்டத்தில், ‘சிறு மொத்த வியாபாரிகள் கோயம்பேட்டுக்குள் வரக் கூடாது; மொத்த விற்பனையாளர்கள் மட்டுமே வணிகம் செய்யலாம்’ என்றார்கள். ‘வாங்குபவர்களை அனுமதிக்கவில்லையென்றால், விற்பவர்கள் எதற்குக் கடைகளைத் திறந்துவைக்க வேண்டும். நாங்களும் கடைகளை மூடிக்கொள்கிறோம்’ என்றார்கள் மொத்த வியாபாரிகள். `அரசு சொல்வதை வியாபாரிகள் கேட்பதில்லை’ என வணிகர்கள் மீதே பழியைத் திருப்பிவிட்டது தமிழக அரசு.

இரு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு வருகிறார்கள் எனக் கருதி, மார்க்கெட்டுக்குள் இரு சக்கர வாகனங்களை அனுமதிக்கவில்லை. இரு சக்கர வாகனங்களில் வந்து கொள்முதல் செய்யும் உள்ளூர் கடைக்காரர்களும், சில்லறை வியாபாரிகளும் திணறிப்போனார்கள். ‘என்னங்கய்யா... இப்படிப் பண்றீங்களேய்யா!” என்று வியாபாரிகள் புலம்பியதும், மொத்தமாக கேட்டை பப்பரப்பா எனத் திறந்துவைத்தார்கள். தமிழக அரசின் தீவிர லாக்டெளன் அறிவிப்பைக் கேட்டதும், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அலைகடலாக வந்து குவிந்தனர் சென்னை மக்கள். `அப்படி வந்தவர்களால்தான் வணிகர் களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது’ என்கிறார்கள் கோயம்பேடு வியாபாரிகள். மக்கள் கூட்டம் அலை மோதும் என்பதை முன்கூட்டியே யூகிக்கவும், வந்த பின்னர் அவர்களைத் தடுத்து நிறுத்தத் தவறியதும் அரசின் தவறு. அதே அலட்சியங்கள் மாதவரத்திலும் திருமழிசையிலும் தொடர்வது தவறுக்கு மேல் தவறு.

பஞ்சாமிர்தமான பழ வியாபாரம்!

ஏப்ரல் 28-ம் தேதி பழ வணிகர்களை அழைத்துப் பேசினார்கள் அங்காடி நிர்வாகக்குழு அதிகாரிகள். “மொத்த விற்பனையாளர்கள் கோயம்பேட்டிலிருந்தே தங்கள் வியாபாரத்தை போதிய சமூக இடைவெளியுடன் தொடரலாம். அதில் பிரச்னை இல்லை. சிறு மொத்த விற்பனையாளர்களுக்கு மட்டும் மாதவரத்தில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்படும்” என்றார்கள். மே 1-ம் தேதியிலிருந்தே கோயம் பேட்டிலிருந்து மாதவரம் செல்ல ஆரம்பித்தனர் செமி ஹோல்சேல் வியாபாரிகள். திடீரென்று மே 5-ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் மொத்தத் தையும் பூட்டி, வியாபாரிகளின் வயிற்றில் ஈரத்துணி போட்டுவிட்டார்கள் அதிகாரிகள். அவர்கள் ஏற்கெனவே சொல்லியிருந்ததை நம்பி, மாதவரத்தில் கடை கேட்டு விண்ணப்பம் செய்திருக்கவில்லை மொத்த வியாபாரிகள்.

குளறுபடிகளின் மொத்த உருவம் ‘தமிழக அரசு!’ - கோயம்பேடு பகீர் - 8

மொத்த வியாபாரிகள் முடங்கிப்போனதால் அவர்களுக்கு மாநிலம் முழுவதிலுமிருந்து விநியோகம் செய்துவந்த விவசாயிகளும் முடங்கினார்கள். பிறகு, மாதவரத்தில் 200 கடைகளை மட்டும் ஒதுக்கினார்கள். ஆனால், கோயம்பேட்டில் 235 மொத்த வியாபாரிகளுக்கும், 601 சிறு மொத்த வியாபாரிகளுக்குமாக 836 கடைகள் இருந்தன. 636 வியாபாரிகள் எங்கே போவார்கள்? தள்ளுமுள்ளு அதிகமானது. சகோதரர்களாக வணிகம் செய்துவந்த வியாபாரிகளுக்கிடையே நீயா நானா போட்டியும், விரோதமும் குரோதமும் உருவாக்கப்பட்டன. இதற்குத்தானே ஆசைப்பட்டார்கள் அதிகாரிகள்! கடைசியில் ஒருவரும் விற்க முடியாமல் அழுகிப்போய்... குப்பையில் கொட்டி பஞ்சாமிர்தமானது பழ வியாபாரம்!

அதோகதியில் காய்கறி விற்பனையாளர்கள்!

காய்கறி வியாபாரிகளுக்கு வேறுவிதமான விளைவுகள்! விற்க அனுமதி உண்டு. ஆனால், வாங்க வருபவர்களுக்கு அனுமதியில்லை. அதுவும் மொத்த காய்கறி வியாபாரிகளுக்கு மட்டுமே திருமழிசையில் கடைகள் ஒதுக்கப்பட்டன. சிறு மொத்த வியாபாரிகளுக்கு இன்றுவரை இடம் ஒதுக்கித் தரப்படவில்லை. கோயம்பேட்டில் இயங்கிவந்த காய்கறிக் கடைகள் 2,400. திருமழிசையில் ஒதுக்கப்பட்ட கடைகள் வெறும் 200! மற்றவர்கள் வீடுகளிலும் அடுப்பு எரிய வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு இல்லை!

திருமழிசையில் அமைக்கப்பட்டிருக்கும் தகர டப்பா கடைகளும், சேறும் சகதியுமான நிலமும், அடிப்படை வசதிகளில்லாத பாதுகாப்பற்ற சூழலும் காய்கறி வர்த்தகத்தைக் கூறு போட்டுக் கொண்டேயிருக்கிறது. இதேகதிதான் உணவு தானிய வணிகர்களுக்கும். இதுவரை அவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை.

இடைக்காலத் தீர்ப்புதான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. அரசு தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கும்படி நீதிமன்றம் பல முறை கேட்டுவிட்டது. ஆனால், அரசு அதிகாரிகள் இதுவரை விளக்கம் அளிக்கவே இல்லை. வணிகம் செய்ய இன்று வரை இடம் கொடுக்கப்படாததால் ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிறார்கள் உணவு தானிய வணிகர்கள். மலர் அங்காடி வணிகர்கள் 440 பேரும் இன்றளவில் மன்றாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் வியாபாரம் முற்றிலும் நாசம்.

சரி, வணிகர் சங்கப் பிரதிநிதிகள், நொடித்துப் போன வணிகர்கள் இவர்களின் நேரடிக் குரலைக் கேட்போம். அதுவாவது அரசாங்கத்தின் செவி களைச் சென்றடைகிறதா என்று பார்ப்போம்!

தொடர்புக்கு: editorGGowtham@gmail.com

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism