Published:Updated:

பாட்டி மரணம் குறித்த பதிவு: இனவெறி தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த ஜுவாலா கட்டா

ஜுவாலா கட்டா
ஜுவாலா கட்டா

கடந்த ஆண்டு கொரனோ நோய் பரவ ஆரம்பித்ததில் இருந்து, தான் இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாகவும், அதை மனதில் ஏற்றி கொள்ளாமல் முன்னேறி சென்றதாகவும் கூறியுள்ளார்.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, தனது பாட்டியின் மரணம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவு செய்திருந்தார். இந்த சூழ்நிலையில், சமூக வலைத்தளங்களில் தான் இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாக குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா தனது பாட்டி இறந்தது தொடர்பாக ட்விட்டரில் 'சீன புத்தாண்டு தினத்தன்று என் அம்மம்மா காலமாகிவிட்டார். முன்பெல்லாம் என் அம்மா எல்லா மாதமும் அங்கு சென்று வருவார். ஆனால் கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவல் காரணமால செல்ல முடியவில்லை. நம் அன்புக்குரியவர்களுடன் இருப்பது நமக்கு எத்தனை முக்கியம் என்பதை இது உணர்த்தியுள்ளது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்' என்று கருத்து பதிவு செய்திருந்தார்.

ஜுவாலா கட்டா
ஜுவாலா கட்டா

அதன்பின் அந்த ட்வீட்டுக்கு வந்த பதில்களால் அதிர்ச்சியான ஜுவாலா கட்டா, "சமூக வலைத்தளத்தில் நான் எனது பாட்டியில் இறப்பை குறித்து கருத்து பதிவு செய்திருந்தேன், அதில் பதிலளித்தவர்களில் பலர் என்மீது இனவெறி தாக்குதலை மேற்கொண்டனர். இதை பார்த்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன். இங்கே இருப்பவர்களுக்கு மனிதர்கள் மீதான பரிதாபம் எங்கே போயிற்று. கொரோனா வைரஸை ஏன் சீன வைரஸ் என்று குறிப்பிடவில்லை என்றும் என்னிடம் கேட்கின்றனர். எங்கே நமது பாதுகாவலர்கள், இவையெல்லாம் மிக வெட்கக்கேடானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது அடுத்தடுத்த ட்விட்டுகளில் ஜுவாலா கட்டா, கடந்த ஆண்டு கொரோனோ நோய் பரவ ஆரம்பித்ததில் இருந்து, தான் இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாகவும், அதை மனதில் ஏற்றி கொள்ளாமல் முன்னேறி சென்றதாகவும் கூறியுள்ளார்.

ஜுவாலா கட்டா
ஜுவாலா கட்டா

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில்,காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பல ட்விட்டர் பயனர்கள் கட்டாவுக்கு ஆதரவாக ட்விட் செய்துள்ளனர். "நீங்கள் எப்போதும் கடினமாக உழைத்து பதக்கங்களை பெற்று இந்தியாவுக்கு பெருமையை கொண்டு வந்தீர்கள். நான் உங்களுடன் நிற்கிறேன், எனது இரங்கலையும் தெரிவிக்கிறேன், ” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கெளரவ் கோகோய் ட்வீட் செய்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு