Published:Updated:

திருந்தி வாழ நினைக்கும் ரௌடிகளுக்கு வாய்ப்பு!

சாமுண்டீஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
சாமுண்டீஸ்வரி

காஞ்சிபுரம் எஸ்.பி புதிய வியூகம்

ரெளடிகள் வேட்டை, பாய்ஸ் கிளப், ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவில் பெண்கள் சேர்ப்பு என அடுத்தடுத்து அதிரடிகாட்டும் காஞ்சிபுரம் எஸ்.பி-யான சாமுண்டீஸ்வரி, திருந்தி வாழ நினைக்கும் ரெளடிகளுக்கு வாய்ப்பளித்து அசத்திவருகிறார்.

`நகரேஷு காஞ்சி’ எனப் பெருமையுடன் அழைக்கப்படும் ஆன்மிக பூமி காஞ்சிபுரம். ஆகச்சிறந்த ஆளுமைகள் வாழ்ந்த காஞ்சிபுரம், சமீப காலங்களில் ரெளடிகளின் கூடாரமாய் மாறிப்போனது பெரும்சோகம். சின்னச் சின்ன அடிதடி சண்டைகளில் ஆரம்பித்து பதறவைக்கும் கொலைகள் வரை அடுத்தடுத்து தொடர்ந்த குற்றங்கள், காஞ்சிபுரத்தை உலுக்கியெடுத்தன. அப்படியான குற்றங்கள் நிகழும்போதெல்லாம், ‘போலீஸ் என்ன செய்கிறது?’ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழும். ‘`இதுவரை காஞ்சிபுரத்துக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் ரெளடிகளின் கொட்டத்தை அடக்க பல முயற்சிகள் எடுத்திருந்தாலும், இப்போதைய காஞ்சிபுரம் எஸ்.பி-யாகப் பொறுப் பேற்றிருக்கும் சாமுண்டீஸ்வரியின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கின்றன’’ என்கிறார்கள் காவல்துறை செயல்பாடுகளைக் கண்காணித்துவருகிறவர்கள்.

பாய்ஸ் கிளப் - ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவில் பெண்கள்
பாய்ஸ் கிளப் - ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவில் பெண்கள்

காஞ்சிபுரம் ரெளடி ஸ்ரீதர் தற்கொலைக்குப் பிறகு, அவரின் டிரைவர் தினேஷ் மற்றும் உறவினர் தணிகா ஆகியோரிடையே நடைபெறும் ‘கேங் வார்’, இரு தரப்புகளிலும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திவருகிறது. மாட்டுப்பொங்கல் அன்று சாலைகளில் கத்தியைத் தீட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற ரெளடிகள், கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டினார்கள். ரெளடிகளின் கொட்டத்தை அடக்கினால் மட்டுமே காஞ்சிபுரம் இயல்புநிலைக்குத் திரும்பும் என்ற நிலை ஏற்பட்டது. காஞ்சிபுரம் எஸ்.பி-யான சாமுண்டீஸ்வரியின் தீவிர நடவடிக்கையால் அடுத்த சில தினங்களிலேயே 90-க்கும் மேற்பட்ட ரெளடிகள் கைதுசெய்யப்பட்டு, கம்பி எண்ணிக்கொண்டிருக் கின்றனர். தலைமறைவாக இருக்கும் தணிகா உள்ளிட்ட முக்கிய ரெளடிகளால் அச்சம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அவர்களையும் காவல்துறையினர் கைதுசெய்தால் மட்டுமே காஞ்சிபுரத்தில் நிம்மதி திரும்பும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுகுறித்துப் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், ‘‘‘தங்களுக்குக்கீழ் பெரும்படையைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் ரெளடிகளின் திட்டம். அதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்களை தினேஷ் மற்றும் தணிகாவின் ஆட்கள் போட்டிபோட்டுக் கொண்டு மூளைச்சலவை செய்யத் தொடங்கினர். ஏழ்மையான மாணவர்களை டார்கெட் செய்து அவர்களுடன் பழகி மது, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாக்குகின்றனர். செலவுக்கு அடிக்கடி பணம் கிடைப்பதாலும், பின்விளைவுகள் தெரியாததாலும் அந்தச் சிறுவர்கள் குற்றச்செயல்களில் துணிந்து ஈடுபடுகின்றனர். ரெளடிகள், பள்ளி - கல்லூரி மாணவர்களிடம் நெருக்கமாக இருப்பதை எஸ்.பி-யான சாமுண்டேசஸ்வரி கண்டறிந்துள்ளார். ரெளடிகளுடன் தொடர்பில் இருக்கும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர் களையும் எஸ்.பி அழைத்து அறிவுரை வழங்குகிறார். ‘இனி தவறு செய்ய மாட்டோம்’ என்று அவர்கள் உறுதியளித்த பிறகே, அவர்களை அனுப்பிவைக்கிறார். அவர்களை, தொடர்ந்து கண்காணிக்கவும் செய்கிறார். முக்கிய ரெளடிகளின் பெற்றோரையும் அவர் சந்தித்து அறிவுரை வழங்கிவருகிறார். திருநங்கைகளால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக, அவர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறார். தமிழகத்திலேயே முதன்முறையாக ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவில் பெண்களை இணைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பெண்கள், மாணவிகள் என்று பலதரப்பினரும் ஆட்டோவில் பயணிக்கின்றனர். சில ஆட்டோ ஓட்டுநர்கள் சரியான உடையை அணியாமல், சட்டை பட்டனை அவிழ்த்துவிட்டுக்கொண்டு கரடு முரடான தோற்றத்துடன், பார்ப்பதற்கு ரெளடிகளைப்போல் இருக்கின்றனர். இதனால் ஆட்டோவில் செல்லவே பெண்கள் தயங்குகின்றனர். இதெல்லாம் ஒரு பிரச்னையா என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், அந்த விஷயத்தில்கூட எஸ்.பி கவனம் செலுத்துகிறார். ‘தோற்றத்திலும் நடத்தையிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நடந்துகொள்ள வேண்டும். குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை ஆட்டோவில் ஏற்றக் கூடாது’ என எச்சரித்துள்ளார். குற்றச்செயல்களிலிருந்து காஞ்சிபுரத்தை மீட்பதற்கு வித்தியாசமான பல முயற்சிகளை எடுத்துவருகிறார். இந்த நடவடிக்கைகள் தொய்வில்லாமல் தொடர வேண்டும்’’ என்கிறார்கள்.

சாமுண்டீஸ்வரி
சாமுண்டீஸ்வரி

காஞ்சிபுரம் எஸ்.பி-யான சாமுண்டீஸ்வரியைச் சந்தித்துப் பேசினோம். ‘‘காஞ்சிபுரத்தில் இதுவரை 90 ரெளடிகளுக்குமேல் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அதில் ஆறு பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னும் நிறையபேர் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களையும் விரைவில் பிடித்துவிடுவோம். திருந்தி வாழ நினைக்கும் ரெளடிகளுக்கு வாய்ப்பு அளிக்கிறோம்.

சில தினங்களுக்கு முன்பு ஒரு புடவைக் கடைக்குச் சென்றிருந்தேன். அந்தக் கடையில் வேலை செய்துகொண்டிருந்த ஓர் இளைஞர், ‘நேற்று என்னை எச்சரித்து அனுப்பிவிட்டீங்க மேடம். இப்போ நான் திருந்தி, நிம்மதியா வேலை செய்றேன்’ என்று சொன்னார். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. காஞ்சிபுரம் பகுதிகளில் ஏற்கெனவே நான்கு இடங்களில் ‘பாய்ஸ் கிளப்’ செயல்பட்டு வந்தது. அதிக அளவு குற்றம் நடக்கும் இடங்களைக் கண்டறிந்து தற்போது கூடுதலாக ஏழு இடங்களில் பாய்ஸ் கிளப் தொடங்கி இருக்கிறோம். அங்கு மாணவர்களுக்குத் தேவையான புத்தகம், விளையாட்டுப் பொருள்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை நிறைந்திருக்கும். ரெளடிகள் உருவாகும் ஆரம்பப்புள்ளியைக் கண்டறிந்து, அதை சரிசெய்தாலே சமூகத்தில் பெரும்பாலான குற்றங்கள் குறைந்துவிடும்’’ என்றார் நம்பிக்கையுடன்.