Published:Updated:

`சிவசேனா, சோனியா சேனாவாக மாறிவிட்டது!’ - கொதித்த கங்கனா ரணாவத்

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத் ( www.instagram.com/team_kangana_ranaut )

`தனது கட்டடம் இடிக்கப்பட்டதுபோல், முதல்வர் உத்தவ் தாக்கரேயின் ஆணவமும் இடிக்கப்படும்’ என்று நடிகை கங்கனா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

``பாலாசாகேப் தாக்கரே நிறுவிய கட்சி இப்போது `சோனியா சேனா' ஆகிவிட்டது’’ என்று கூறிய கங்கனா ரணாவத் பிரஹன் மும்பை மாநகராட்சியைக் (பிஎம்சி) கண்டித்து, ``அதை ஒரு குடிமை அமைப்பு என்று அழைப்பது இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும்’’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரணாவத் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிவருகிறார்.

சமீபத்தில், மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல் மாறியிருப்பதாக ட்விட்டரில் கங்கனா வெளியிட்ட கருத்து, பெரும் சர்ச்சையாக உருமாற, சிவசேனா கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், `அச்சமாக இருந்தால் கங்கனா மும்பைக்கு வர வேண்டாம்’ எனப் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு பதிலளித்த கங்கனா, `மும்பை என்பது சிவசேனா கட்சி மட்டுமல்ல. சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும், 9=ம் தேதி நிச்சயம் மும்பைக்கு வருவேன்’ என்று குறிப்பிட்டதோடு மட்டுமன்றி, ஹிமாச்சலப்பிரதேசத்தில் தங்கியிருந்த கங்கனா, மத்திய அரசின் ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்போடு அதைச் செய்தும் காட்டினார்.

இதன் தொடர்ச்சியாக கங்கானாவின் அலுவலக வளாகத்தில் சட்ட விரோத கட்டுமானங்கள் இருப்பதாகக் கூறி, அதை நேற்று மும்பை மாநகராட்சி ஊழியர்கள் இடிக்கத் தொடங்கினர். ஆனால், மும்பை ஹைகோர்ட்டின் தலையீட்டால் இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், `தனது கட்டடம் இடிக்கப்பட்டதுபோல், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் ஆணவமும் இடிக்கப்படும்’ என்று நடிகை கங்கனா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

இந்நிலையில், பால் தாக்கரே கட்சியைக் கட்டியெழுப்பிய சித்தாந்தம், அதிகாரத்துக்காக விற்கப்பட்டதாகத் தன் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கும் கங்கானா ரணாவத், ``ஒருபோதும் கொடுமைப்படுத்துபவருக்கு அடிபணியக் கூடாது, தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னர், சிவசேனா வெட்கமின்றி சோனியா சேனாவாக மாறியது" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

சுஷாந்த் புகைப்படத்துடன் 30,000 மாஸ்க்குகள்... அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறதா பா.ஜ.க?

மேலும், ``மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கை வெளிப்படையாகக் கொலை செய்வது குறித்து உயர் நீதிமன்றம் கூறிய கருத்து குறித்து, ஆடம்பரப் பெண்ணியவாதிகள், பாலிவுட் ஆர்வலர்கள், மெழுகுவர்த்தி அணிவகுப்பு குழுக்கள் என யாரும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதுவும் நல்லதுதான். இப்போதும் என்னைச் சரியாக நிரூபித்ததற்கு நன்றி. நான் அளிக்கும் பதிலடியைப் பெற நீங்கள் அனைவரும் தகுதியானவர்கள்தான்’’ என்று கங்கனா ரணாவத் காட்டமாகக் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு