Published:Updated:

வர்த்தகத் துறைமுகமா... பாதுகாப்பு துறைமுகமா? - இனயத்தை மையமிடும் மற்றொரு சர்ச்சை!

இனயம்
பிரீமியம் ஸ்டோரி
இனயம்

சரியான புரிதல் இல்லாமல் 28,000 கோடி ரூபாய்க்கான துறைமுகத் திட்டம் வேண்டாம் எனப் போராட்டம் மூலம் மக்கள் சொல்லிவிட்டார்கள்

வர்த்தகத் துறைமுகமா... பாதுகாப்பு துறைமுகமா? - இனயத்தை மையமிடும் மற்றொரு சர்ச்சை!

சரியான புரிதல் இல்லாமல் 28,000 கோடி ரூபாய்க்கான துறைமுகத் திட்டம் வேண்டாம் எனப் போராட்டம் மூலம் மக்கள் சொல்லிவிட்டார்கள்

Published:Updated:
இனயம்
பிரீமியம் ஸ்டோரி
இனயம்

`குமரி மாவட்டம், இனயத்தில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கப்படும்’ என்பது 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க-வின் வாக்குறுதி. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று எதிர்ப்பு கிளம்பவே, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், அதே இடத்தில் பாதுகாப்புத் துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

இது குறித்து மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் நம்மிடம், “இலங்கை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்த சீனா, நம் எதிர்ப்பையும் மீறி உளவுக் கப்பலை அங்கு நிறுத்தியது. இது கூடங்குளம் அணுமின் நிலையம், குலசேகரப்பட்டினம் இந்திய விண்வெளி ஆய்வு மையம், மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை போன்றவற்றுக்கு ஆபத்து இருப்பதைக் காட்டுகிறது. மூன்று கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலிருந்து 4.5 நாட்டிகல் மைல் தொலைவில் சர்வதேச கடல் பாதை அமைந்துள்ளது. எனவே, இனயத்தில் சரக்குப் பெட்டகத் துறைமுகம் அமைக்கிறார்களோ இல்லையோ, பாதுகாப்பு துறைமுகம் அமைத்தே ஆக வேண்டும்” என்றவர் கோரிக்கையுடன் நிற்காமல், இது குறித்து கருத்தரங்கம் நடத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

வர்த்தகத் துறைமுகமா... பாதுகாப்பு துறைமுகமா? - இனயத்தை மையமிடும் மற்றொரு சர்ச்சை!

‘குமரி மகாசபா அமைப்பு’ தலைவர் ராவின்சனோ, “சரக்குப் பெட்டகத் துறைமுகம் வந்தால், பாதுகாப்பும் தானாகவே வரும். இனயத்தில் வர்த்தகத் துறைமுகமும், கன்னியாகுமரியில் விமான நிலையமும் வேண்டும் என முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைக்கவிருக்கிறோம். குமரி மாவட்டத்தில் ஏர்போர்ட், துறைமுகம் வந்தால் திருவனந்தபுரத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று கேரளாவைச் சேர்ந்தவர்கள், இங்குள்ளவர்களைத் திட்டத்துக்கு எதிராகப் போராடத் தூண்டிவிடுகிறார்கள். திட்டம் வேண்டாம் எனப் போராட இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே துறைமுகத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிவருபவர்களின் பின்னணியில் மத்திய பா.ஜ.க அரசு, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் தூண்டுதல் இருக்கிறது என்றொரு சர்ச்சையும் எழுந்துள்ளது. இதையடுத்து, ‘சரக்குப் பெட்டக மாற்று முனைய எதிர்ப்புக்குழு’ ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதியிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசியபோது, “துறைமுகம் திட்டம் குறித்து இதுவரை மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை. ஆனால், இங்குள்ள சிலர்தான் திடீரென கோரிக்கை வைக்கிறார் கள். துறைமுகம் வந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மக்கள்தொகை நெருக்கமாக இருக்கும் குமரி மாவட்டத்தில் துறைமுகம் எந்தவிதத்தில் வந்தாலும் எதிர்த்து போராடுவோம்” என்றார் உறுதியாக.

ஸ்ரீராம், ராவின்சன், பார்த்தசாரதி, பொன்.ராதாகிருஷ்ணன்
ஸ்ரீராம், ராவின்சன், பார்த்தசாரதி, பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டபோது, “சரியான புரிதல் இல்லாமல் 28,000 கோடி ரூபாய்க்கான துறைமுகத் திட்டம் வேண்டாம் எனப் போராட்டம் மூலம் மக்கள் சொல்லிவிட்டார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களின் விருப்பம் இல்லாமல் எந்தத் திட்டமும் கொண்டுவருவது முறையல்ல. மீண்டும் துறைமுகத் திட்டம் பற்றி விவாதம் எழுந்ததற்கு நான் காரணம் அல்ல. அது சிலருடைய விஷமத்தனமான குற்றச்சாட்டு” என்றார்.