Published:Updated:

``10 மாசமா போராடுறேன்... அதிகாரிங்க மதிக்கிறதில்ல!" - பெண் ஒன்றிய பெருந்தலைவர்

பெண் ஒன்றிய பெருந்தலைவர்

``நான் ஒரு பெண். அதோட, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவள் என்பதால, என்னைப் புறக்கணித்து ஆளும்கட்சிக்கு சாதகமா செயல்படுறாங்க." - ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரன்

``10 மாசமா போராடுறேன்... அதிகாரிங்க மதிக்கிறதில்ல!" - பெண் ஒன்றிய பெருந்தலைவர்

``நான் ஒரு பெண். அதோட, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவள் என்பதால, என்னைப் புறக்கணித்து ஆளும்கட்சிக்கு சாதகமா செயல்படுறாங்க." - ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரன்

Published:Updated:
பெண் ஒன்றிய பெருந்தலைவர்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முன்னாள் தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்தவர். ராஜேந்திரன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துபோக, இவரின் மனைவி மாலா ராஜேந்திரன் தற்போது கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில்தான், ``பதவியேற்ற நாள் முதல், கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் என்னை மதிப்பதில்லை, அரசு நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை.

மாலா ராஜேந்திரன்
மாலா ராஜேந்திரன்

நான் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவள் என்பதால், என்னைத் தொடர்ந்து புறக்கணித்து, அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருகிறார்கள்" என்று தொடர் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். மேலும், இதுபற்றி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுபற்றி பேசிய மாலா ராஜேந்திரன், ``கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவராகி 10 மாசம் ஆச்சு. ஆனாலும், மக்களுடைய பிரச்னைகளை, அடிப்படை வசதிகளை என்னால நிறைவேற்ற முடியல. வட்டார வளர்ச்சி அலுவலகத்துல என்ன நடக்குதுனே தெரியுறதில்ல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிகாரிகள் எந்தத் தகவலும் எனக்குச் சொல்றதில்ல. நான் ஒரு பெண். அதோட, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவள் என்பதால, என்னைப் புறக்கணித்து ஆளும்கட்சிக்கு சாதகமா செயல்படுறாங்க. உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறதுக்கு முன்னாடி எப்படி செயல்பட்டாங்களோ, அதன்படிதான் இப்பவும் செயல்பட்டு வர்றாங்க. மக்கள்கிட்ட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியலை.

புகார்
புகார்

கறம்பக்குடி ஒன்றியம் புதுவிடுதி பஞ்சாயத்துல ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பி.டி.ஓ காமராஜ், ஸ்கீம் பி.டி.ஓ ரவி ரெண்டு பேரும் சேர்ந்து திறந்து வைக்கிறாங்க. அதேபோல, மின்வாரியம் மூலம் அமைக்கப்பட்ட மின்மாற்றிகளைத் திறக்கும்போதும் எனக்குத் தகவல் தராமல், அவங்களே தலைவர்போல திறந்து வெச்சிருக்காங்க. நாளிதழ்ல பார்த்துதான் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை.

ஒன்றியத்துக்கு வந்துள்ள பசுமை வீடுகள் குறித்த தகவலைக் கேட்டா, தகவல் தர மறுக்கிறாங்க. அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் கொடுத்த பயனாளிகள் பட்டியலை அதிகாரிகள் தேர்வு செய்திருக்காங்க.

இப்படி, அதிகாரிகளால தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வர்றேன். கணவரை இழந்த நான் பல மாதங்களா மக்களுக்காகவும், என் உரிமைக்காகவும் தனி மனுஷியா போராடிக்கிட்டிருக்கேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.

மாலா ராஜேந்திரன்
மாலா ராஜேந்திரன்

இதுபற்றி கறம்பக்குடி பி.டி.ஓ சுதாகரிடம் கேட்டபோது, `` `ஜல் ஜீவன் மிஷன் (மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி)-ஐ உடனே திறந்து வைக்கச் சொல்லி உயரதிகாரிகள் சொல்றாங்க. அப்போ தலைவர், கான்ட்ராக்டர்னு எல்லாரும் உடனடியா ஒருங்கிணைந்து செயல்படணும். அவசர கதியில் அரசுக் கட்டடங்கள் திறக்கப்படும் நிகழ்வுகள்ல அவருக்கு அழைப்பு விடுக்க முடியாம போயிருக்கும். மற்றபடி ஒன்றிய பெருந்தலைவரை அவமானப்படுத்தும் வகையில நாங்க செயல்படலை. மீட்டிங், நிகழ்வுகளில் எல்லாம் கலந்துகொண்டுதான் இருக்காங்க. ஆளும்கட்சி எதிர்க்கட்சினு எந்தப் பாகுபாடும் இல்லை" என்கிறார்.

உரிய மேலதிகாரிகள் உண்மையை விசாரித்து பிரச்னையை தீர்க்க வேண்டும்.