Published:Updated:

`பில்லியன் டாலர் ஐடியா இது'- காபி அடிப்பதை தடுக்க கர்நாடக கல்லூரி செய்த வேடிக்கை செயல்!

கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் காபி அடிப்பதை தவிர்ப்பதற்காக புதிய முறை கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாணவர்கள்
மாணவர்கள்

கல்லூரி வாழ்க்கை ரொம்ப அழகானது. பள்ளிக்கூடங்களில் அடிக்கடி ஆசிரியர்கள் கூறும் ரீப்பிட் டயலாக் ஸ்கூல் லைப்-ல் கஷ்டப்பட்டு படிங்க காலேஜ்-ல ஜாலியா இருக்கலாம். காலேஜ் போன பிறகும் ஸ்கூல் மாதிரி நடத்துற கல்லூரிகள் இருக்கும்.

`பில்லியன் டாலர் ஐடியா இது'- காபி அடிப்பதை தடுக்க கர்நாடக கல்லூரி செய்த வேடிக்கை செயல்!

கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தவிர்ப்பதற்காக புதிய வழிமுறையை கையாண்டுள்ளது. அதனை மாணவர் ஒருவர் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்ற இந்த புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது.

ஹவேரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்தாண்டு நடந்த செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் தேர்வு அறையில் ஒழுங்கீனமாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. கல்லூரி நிர்வாகம் பலமுறை கண்டித்தும் மாணவர்கள் திருந்தியபாடில்லை. அடுத்தடுத்த தேர்வுகளிலும் தொடர்கதையாகியுள்ளது. இதனைத் தடுக்க முடிவு செய்த கல்லூரி நிர்வாகம் தற்போது நடக்கும் செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தவிர்பதற்காக அனைவரின் தலையிலும் அட்டைப்பெட்டியை மாட்டியுள்ளனர்.

மாணவர்கள்
மாணவர்கள்

இதனைக்கண்டித்து தான் மாணவர் ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கல்லூரி நிர்வாகத்தின் பில்லியன் டாலர் ஐடியாவை பாருங்கள் எனக் கூறி கலாய்த்துள்ளார். இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர். இதுபோன்ற மீண்டும் நடந்தால் கல்லூரி உரிமத்தை ரத்து செய்துவிடுவோம் என எச்சரித்துள்ளனர்.