Published:Updated:

மது விற்பனைத் தொழிலை ஒழுங்குபடுத்துவது எப்படி? - கார்த்தி சிதம்பரம் யோசனை

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

ஆந்திராவில் மதுபானங்களுக்கு 75 சதவிகிதம் வரியை உயர்த்தியதால் கள்ளச்சாராயம் பெருகிவிட்டது. அதே நிலைதான் தமிழகத்துக்கும் ஏற்படும்.

கொரோனா ஊரடங்கிலும் தமிழகத்தில் ஜோராக இயங்குகின்றன அரசு மதுக்கடைகள். விமர்சனங்களையெல்லாம் புறந்தள்ளி, மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டித்திருக்கிறது தமிழக அரசு.

அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழகத்தில் மதுவிலக்குக் கோரிக்கைகள் மீண்டும் வலுப்பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம், 'பூரண மதுவிலக்கு தோல்வியடையும் திட்டம்' என்று சொல்லியிருக்கிறார். கார்த்தி சிதம்பரத்தை அலைபேசியில் தொடர்புகொண்டு சில கேள்விகளைக் கேட்டோம்.

"தற்போதைய சூழலில் மத்தியில் காங்கிரஸும், மாநிலத்தில் தி.மு.க-வும் ஆட்சியில் இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுத்திருப்பீர்கள்?"

"நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் அனைத்துக் கட்சிகளையும் வாரம் ஒருமுறை கூட்டி, யோசனைகளைக் கேட்டுச் செயல்படுத்தியிருப்போம்."

"பூரண மதுவிலக்கு ஏன் தோல்வியடையும்?"

"அது உலகம் முழுவதும் தோல்வியடைந்த விஷயம்தான். எனவே, தமிழகத்திலும் அது சாத்தியமில்லை. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் கள்ளச் சாராயம் உள்ளிட்ட குற்றங்கள் பெருகும். ஆனால், மது விற்பனையைக் கட்டுப்படுத்தலாம்.

அடையாள அட்டைமூலம் குறிப்பிட்ட வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு மட்டுமே மது விற்கலாம். ஆன்லைன் விற்பனை, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, கண்காணிப்பு கேமராக்களில் கண்காணிப்பது என, தொழிலை ஒழுங்குபடுத்தலாம். ஆந்திராவில் மதுபானங்களுக்கு 75 சதவிகிதம் வரியை உயர்த்தியதால் கள்ளச்சாராயம் பெருகிவிட்டது.

அதே நிலைதான் தமிழகத்துக்கும் ஏற்படும். மதுவுக்கு நான் ஆதரவான நபர் கிடையாது. மது குடிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகள்குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதைவிடுத்து, ஒட்டுமொத்தமாக மதுவை ஒழிப்பது சரியாக இருக்காது."

> "அப்படியெனில், மதுக்கடை திறப்பு விஷயத்தில் அ.தி.மு.க-வுக்கு நீங்கள் ஆதரவா?"

> "பூரண மதுவிலக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?"

> "கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, 'ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு குறித்த கோப்பில்தான்' என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது. அதுதான் தோல்விக்குக் காரணமா?"

முழுமையான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > Click Here https://bit.ly/2LUwVUZ

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு