Published:Updated:

பாடிபில்டர் டு பாலிடிக்ஸ்... யூடியூபர் கார்த்திக் கோபிநாத் வழக்கும் பின்னணியும்!

கார்த்திக் கோபிநாத்
பிரீமியம் ஸ்டோரி
கார்த்திக் கோபிநாத்

தேசப்பற்றாளரான கார்த்திக் கோபிநாத், கோயிலைச் சீரமைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நன்கொடை வசூலித்தார்

பாடிபில்டர் டு பாலிடிக்ஸ்... யூடியூபர் கார்த்திக் கோபிநாத் வழக்கும் பின்னணியும்!

தேசப்பற்றாளரான கார்த்திக் கோபிநாத், கோயிலைச் சீரமைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நன்கொடை வசூலித்தார்

Published:Updated:
கார்த்திக் கோபிநாத்
பிரீமியம் ஸ்டோரி
கார்த்திக் கோபிநாத்
கார்த்திக் கோபிநாத்
கார்த்திக் கோபிநாத்

ஒரே நாளில் இந்திய அளவில் டிரெண்டாகியிருக்கிறார் யூடியூபர் கார்த்திக் கோபிநாத். இந்து சமய அறநிலையத்துறை கோயிலைச் சீரமைக்க, தனிநபரான அவர் நிதி திரட்டியதற்கு எதிராக, கோயில் செயல் அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் அவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால், “சிதிலமடைந்த ஓர் இந்துக் கோயிலை புனரமைக்கும் ‘சேவை’யில் இறங்கியது குற்றமா?” என்று நாடுதழுவிய பிரச்னையாக்கினார்கள் பா.ஜ.க ஆதரவாளர்கள். #KarthikGopinath என்ற ஹேஸ்டாக் டிரெண்ட் ஆக்கப்பட்டதுடன், மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரையில் அவருக்கு ஆதரவாகக் களமிறங்க, இந்தக் கைது பெரும் விவாதமாகியிருக்கிறது.

`யார் இந்த கோபிநாத்?’ என்று விசாரித்தோம். ``சென்னை ஆவடி முத்தா புதுப்பேட்டையில் வசிக்கும் கார்த்திக் கோபிநாத், பாடிபில்டராக வலம்வந்தவர். பா.ஜ.க ஆதரவாளரான இவர், டி.வி சேனல் ஒன்றில் பணியாற்றிய அனுபவத்தால், ‘இளைய பாரதம்’ என்ற யூடியூப் சேனலைத் தொடங்கி, வெளிப்படையாக பா.ஜ.க-வையும், அதன் சித்தாந்தங்களையும் ஆதரித்துப் பேசிவந்தார். இதன் மூலம் பா.ஜ.க மாநில நிர்வாகிகளின் தொடர்பும் இவருக்குக் கிடைத்தது.

இந்த நேரத்தில்தான் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலின் உப கோயில் ஒன்றில் சேதமடைந்த சாமி சிலைகள் விவகாரத்தைக் கையிலெடுத்தார் கார்த்திக் கோபிநாத். அதைவைத்து நிதி திரட்டத் திட்டமிட்டவர், மக்கள் உணர்வுகளைத் தூண்டுவதற்காக சாமி சிலைகள் மாற்று மதத்தினரால் சேதப்படுத்தப்பட்டதாகவும், அதற்கு அறநிலையத்துறையும் உடந்தை என்கிறரீதியில் பேசியது அரசுத் தரப்பைக் கோபப்படுத்தியது. அதன் விளைவே இந்த வழக்கு” என்றார்கள் அவரது பின்னணியை அறிந்தவர்கள்.

அமர்பிரசாத் ரெட்டி
அமர்பிரசாத் ரெட்டி

``கார்த்திக் கோபிநாத், கோயில் புனரமைப்பு என்று சொல்லி, `Milaap fundraiser site’ என்ற செயலி மூலம் அவர் லட்சக்கணக்கில் நன்கொடை வசூலித்தார். அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயிலுக்காக நிதி திரட்ட வேண்டுமெனில், துறையிடம் முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். எனவே, அவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அவரது விளக்கத்தில் திருப்தி இல்லாததால்தான், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலின் செயல் அலுவலர் அரவிந்தன் போலீஸில் புகார் கொடுத்தார். அதன்படி, ஆவடி மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கார்த்திக் கோபிநாத்தைக் கைதுசெய்தனர். இதை நாங்கள் செய்யவில்லையென்றால் மாநிலம் முழுவதும் நிதி திரட்டுகிறேன் பேர்வழி என்று ஒரு கூட்டமே கிளம்பியிருக்கும்” என்கிறார்கள் அறநிலையத்துறையினர்.

சாதாரண குற்ற வழக்கை பா.ஜ.க அரசியலாக்குகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து, பா.ஜ.க-வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டியிடம் கேட்டோம். ``தேசப்பற்றாளரான கார்த்திக் கோபிநாத், கோயிலைச் சீரமைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நன்கொடை வசூலித்தார். அந்தப் பணம் Milaap fundraiser site செயலி அக்கவுன்ட்டில்தான் இருக்கிறது. அவர்மீது எந்தவிதத் தவறும் இல்லை என்பதால்தான் பா.ஜ.க அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. அதை அவர் சட்டப்படி சந்திக்க பா.ஜ.க உறுதுணையாக இருக்கும்” என்றார் உறுதியான குரலில்.

இதற்கிடையே, கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அவரை போலீஸ் கஸ்டடியில் எடுக்கும் காவல்துறையின் முயற்சியும் தோல்வியடைந்திருக்கிறது. அரசியல் தலையீடு ஓயும்வரை இந்தச் சர்ச்சையும் முடியப்போவதில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism