Published:Updated:

“இனி, என் வாழ்க்கையில நல்ல ராஜ்ஜியம்தான்!” - நெகிழும் காத்தமுத்து

நெகிழும் காத்தமுத்து
பிரீமியம் ஸ்டோரி
நெகிழும் காத்தமுத்து

வீடு கட்டவும், பொண்ணுக்குத் திருமணம் செய்யவும் 18 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தேன்.

“இனி, என் வாழ்க்கையில நல்ல ராஜ்ஜியம்தான்!” - நெகிழும் காத்தமுத்து

வீடு கட்டவும், பொண்ணுக்குத் திருமணம் செய்யவும் 18 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தேன்.

Published:Updated:
நெகிழும் காத்தமுத்து
பிரீமியம் ஸ்டோரி
நெகிழும் காத்தமுத்து

‘‘என் கண்ணீர்க் கதையைக் கேட்டு, ஜூனியர் விகடன்ல செய்தி போட்டு, என் ஆறு வருஷ அல்லாட்டப் பொழைப்பை மாத்தியிருக்கீங்க. சப்-கலெக்டர், தாசில்தார், ஜூனியர் விகடன்னு பலரும் செஞ்ச இந்த உதவியை இந்த உடம்புல உசிரு இருக்குற கடைசி நொடி வரைக்கும் மறக்க மாட்டேன் தம்பி’’ - உணர்ச்சிப் பெருக்கோடு பேசுகிறார் கரூர் மாவட்டம், எழுநூற்றிமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி காத்தமுத்து.

“இனி, என் வாழ்க்கையில நல்ல ராஜ்ஜியம்தான்!” - நெகிழும் காத்தமுத்து

நம்பருக்குப் பின்னே வர வேண்டிய பூஜ்ஜியத்தை, நம்பருக்கு முன்னே வரும்படி வருவாய்த்துறையினர் பதிந்ததால் இவரின் நிலத்தின் அளவை, கணினி சிட்டா குறைவாகக் காட்டியது. இதனால், அரசு தரும் நிவாரணம், கடன் என்று எந்த உதவியையும் பெற முடியாமல் தத்தளித்துவந்தார் காத்தமுத்து. இந்தப் பிரச்னை குறித்து 19.8.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், `ஒரு பூஜ்ஜியம் என் வாழ்க்கையில் கெட்ட ராஜ்ஜியம் பண்ணுது’ என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூன்று வார நடைமுறைகளுக்குப் பிறகு தவறைச் சரிசெய்து, ஆன்லைனில் பதிவேற்றி, அதன் பிரின்ட் நகலை காத்தமுத்துவிடம் கொடுத்தார் குளித்தலை சப் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான். அப்போது காத்தமுத்து கண்களில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.

“இனி, என் வாழ்க்கையில நல்ல ராஜ்ஜியம்தான்!” - நெகிழும் காத்தமுத்து

ஆறு வருடப் பிரச்னை தீர்ந்த மகிழ்ச்சியும், வார்த்தைகள் வராத நெகிழ்ச்சியுமாகக் கண்கலங்கி நின்றிருந்த காத்தமுத்துவிடம் பேசினோம் ‘‘இரண்டே கால் ஏக்கர் நிலம் வெச்சிருந்தும் ஒரு பூஜ்ஜியம் இடம் மாறி, 22 சென்ட்டுனு காட்டினதால நிலத்துக்கு கால் முதலாளியாகத்தான் இருந்தேன். விவசாய நிவாரணம் வாங்க முடியலை... பயிர்க் காப்பீடு செய்ய முடியலை... பேங்க் லோனும் கிடைக்கலை.

வீடு கட்டவும், பொண்ணுக்குத் திருமணம் செய்யவும் 18 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். கழுத்தை நெரிக்கும் அந்தக் கடனை, நிலத்தோட ஒரு பகுதியை வித்து அடைக்க நினைச்சேன். பூஜ்ஜிய பிரச்னையால நிலத்தை விக்கவும் வழியில்லை.

பிரச்னையைச் சரிபண்ண நான் அலைஞ்ச அலைச்சல் கொஞ்சநஞ்சமில்லை. என்னோட கண்ணீரால எந்த அதிகாரக் கதவையும் திறக்க முடியலை. `பேசாம பூச்சிமருந்தைக் குடிச்சுட்டு பூமிக்கு உரமா போயிருவோமா...’னு அடிக்கடி நினைப்பேன். இந்த நிலைமையிலதான், என் கண்ணீர்க் கதையைக் கேட்டு, ஜூனியர் விகடன்ல செய்தி போட்டு என் ஆறு வருஷ அல்லாட்டப் பொழைப்பை மாத்தியிருக்கீங்க. `இனி, என் வாழ்க்கையில நல்ல ராஜ்ஜியம்தான்’னு நம்பிக்கை வந்திருக்கு’’ என்று சொல்லும்போதே அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism