Published:Updated:

`உங்களால்தான்மா இந்த வெற்றி!' - ஆசிரியர் தினத்தன்று தாயை நெகிழவைத்த இளைஞர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கடையைத் திறந்து வைக்கும் சித்ரா
கடையைத் திறந்து வைக்கும் சித்ரா ( நா.ராஜமுருகன் )

``நண்பர்கள் சிலர், `உள்ளூர் வி.ஐ.பிகளை வெச்சு கடையை திற, வியாபாரம் பிச்சுக்கும்'னு அட்வைஸ் பண்ணினாங்க. எங்கம்மாவும் அதையே வழிமொழிஞ்சாங்க. ஆனா நான், `தாயிற் சிறந்த கோயிலும் இல்லை'னு அம்மாவை வெச்சே கடையைத் திறந்தேன்."

தான் தொடங்கியிருக்கும் உணவுக் கடையை, ஆசிரியர் தினத்தில், தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய தன் தாய் கைகளால் திறக்கவைத்து, `உங்கள் வழிகாட்டுதலால்தான்மா இந்த வெற்றி சாத்தியமாச்சு' என்று சொல்லி நெகிழவைத்திருக்கிறார், கரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். அவரின் அம்மா, இவருக்குத் தொழிலில் உதவுவதற்காக தன் ஆசிரியர் வேலையை விட்டவர் என்பதும் நெகிழ்ச்சி.

ஜெய்சுந்தர் தாய் சித்ராவோடு...
ஜெய்சுந்தர் தாய் சித்ராவோடு...
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், திண்ணப்பா நகரைச் சேர்ந்தவர் ஜெய்சுந்தர். பி.டெக் பட்டதாரியான இவர், கோயம்புத்தூரில் உள்ள தனியார் கம்பெனி, பிரபல மொபைல் நெட்வொர்க் கம்பெனி, கரூர் புகழூரில் உள்ள அரசு காகித ஆலையில் தற்காலிக அலுவலக அட்மின் வேலை எனப் பல இடங்களில் பணியாற்றியவர். ஒருகட்டத்தில் வேலை அவருக்கு மனஅழுத்தத்தைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, தள்ளுவண்டியில் அத்தோ, கரம், தட்டுவடை செட்டு, வாழைத்தண்டு சூப், எக் மொகிங்கா என்று உணவுகளை விற்பனை செய்யத் தொடங்கினார். இரண்டு மாதம் அங்கே விற்பனை செய்தார்.

பிறகு, கரூர் நகரில் உள்ள செங்குந்தபுரம் அருகே, தள்ளுவண்டியில் உணவுக்கடையை நடத்திவந்தார். லாக்டௌனுக்கு முன்பு வரை அங்கே கடை நடத்திவந்தார். கடந்த ஒரு மாதம் முன்பு கரூர் காந்திகிராமம் அருகே வாடகைக்கு இடம் பிடித்து, `கரூவூர் கரம் ஸ்டால்' என்ற பெயரில் கடையை ஆரம்பித்தார்.

இந்நிலையில், தன் உணவுக்கடையின் கிளையை சின்னாண்டாங்கோயில் சாலையில் ஆரம்பித்து, அசத்தியிருக்கிறார். தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய அவரின் தாய் சித்ராவை வைத்து, இந்தக் கடையை ரிப்பன் வெட்டி திறக்க வைத்து, அவரை நெகிழவைத்திருக்கிறார் ஜெய்சுந்தர்.

ஜெய்சுந்தர் தாய் சித்ராவோடு...
ஜெய்சுந்தர் தாய் சித்ராவோடு...
நா.ராஜமுருகன்
கரூர்: கொரோனா வார்டு மருத்துவருக்கு வீடியோ காலில் வாழ்த்து! - நெகிழவைத்த ஆட்சியர்

இதுகுறித்து, ஜெய்சுந்தரிடம் பேசினோம்.

``எங்கப்பா இல்லை. அம்மாதான் என்னை படிக்கவெச்சு, ஆளாக்கினாங்க. தனியார் பள்ளி ஆசிரியைங்கிறதால, போதிய வருமானம் இருக்காது. இப்போவரை வாடகை வீட்டில்தான் குடியிருக்கோம். அதனால, தனது தேவைகளை எல்லாம் குறைச்சுக்கிட்டு, என்னை நல்லா படிக்கவெச்சாங்க அம்மா. அவங்க கஷ்டத்தை குறைக்கத்தான் வேலைக்குப் போனேன். ஆனா, அந்த வேலையில சொற்ப சம்பளம், அதிக வேலைப்பளுங்கிற நிலைமை. அதனால, மூணு வருஷத்துக்கு முன்னாடி, அந்த வேலையை ரிசைன் பண்ண நினைச்சேன். எங்கம்மா, குடும்ப கஷ்டத்தை நினைச்சு முதலில் தயங்கினாலும், என் வைராக்கியத்தைப் பார்த்துட்டு ஒத்துக்கிட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதோடு, தினமும் எனக்குத் தேவையான அறிவுரைகளைச் சொல்லி, தொழிலில் ஈடுபட வெச்சாங்க. `வாடிக்கையாளர்கள்தான் நமக்குக் கடவுள். அவங்க திருப்தியே முக்கியம்'னு சொன்னாங்க. அதனாலதான், எனது கடை போர்டில், `வாடிக்கையாளர்களே துணை'னு போட்டேன்.

கடினமா உழைச்சேன். அம்மாவும் வேலைக்குப் போறதை நிறுத்திட்டு, வீட்டுல இருந்து எல்லா உணவுப் பொருள்களையும் தயாரிச்சுக் கொடுத்தாங்க. மாலை நேரத்தில் வீட்டில் ட்யூஷன் எடுக்க ஆரம்பிச்சாங்க.

தள்ளுவண்டியில் மூணுவருஷமா கடை நடத்திக்கிட்டு இருந்தேன். இப்போ சொந்தமா ரெண்டு இடங்களில் வாடகைக் கட்டடங்களில் உணவுக்கடை நடத்தும் அளவுக்கு முன்னேறியிருக்கேன். இதுக்கெல்லாம் காரணம், என்னை எப்பவும் தட்டிக்கொடுக்கும் எங்கம்மாதான். அதனால, அவங்களை பெருமைப்படுத்த நினைச்சேன். அவங்க ஆசிரியர் என்பதாலும், எனக்கும் பல நேரங்களில் வாழ்வாசிரியரா இருந்து வழிகாட்டினாங்க என்பதாலும், ஆசிரியர் தினத்தன்று அவங்களை வெச்சே கடையை திறந்தேன்.

நண்பர்கள் சிலர், `உள்ளூர் வி.ஐ.பிகளை வெச்சு கடையை திற, வியாபாரம் பிச்சுக்கும்'னு அட்வைஸ் பண்ணினாங்க. எங்கம்மாவும் அதையே வழிமொழிஞ்சாங்க. ஆனா நான், `தாயிற் சிறந்த கோயிலும் இல்லை'னு அம்மாவை வெச்சே கடையைத் திறந்தேன். அம்மாவை வெச்சு முதல் வியாபாரத்தையும் தொடங்கினேன். அவங்க அறிவுரையால்தான் இந்த அளவுக்கு வந்திருக்கேன். இன்னும் நான் எவ்வளவு உயரம் போனாலும், அதுக்கும் எங்கம்மா சொல்லும் அறிவுரைதான் காரணமாயிருக்கும். தாயின் சொல்லைத் தட்டாத பிள்ளையா எப்போதும் இருப்பேன்" என்று சொல்கிறார்.

முதல் விற்பனையை ஆரம்பித்து வைக்கும் சித்ரா
முதல் விற்பனையை ஆரம்பித்து வைக்கும் சித்ரா
நா.ராஜமுருகன்

``என் பையனுக்காகத்தான் டீச்சர் வேலையைவிட்டுட்டு அவன் கடைக்கு சமைச்சுக் கொடுக்க ஆரம்பிச்சேன். ஆசிரியர் தினத்தன்று அவன் இந்தக் கடையைத் திறந்தது ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு'' என்றார் சித்ரா மகனை ஆசீர்வதித்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு