Published:Updated:

2K kids: வாழ்க்கைங்கிறது சூடமிட்டாய் மாதிரி! - கட்டில்கடை பாட்டி

சி. ருதன்வர்ஷன்

பிரீமியம் ஸ்டோரி

90’ஸ் கிட்ஸ் இதைப் பார்க்காம வளர்ந்திருக்க மாட்டாங்க... கட்டில்கடை! ‘அதென்ன கட்டில்கடை..?’னு கேக்குற 2கே கிட்ஸுக்கு... அது என்னன்னு சொல்லிடுவோம். பள்ளிக்கூடம் முன்னாடி கட்டில்லேயே கடை போட்டு அதுல தேன் மிட்டாய், குச்சி மிட்டாய், பொரி உருண்டை, புளிப்புப் பொடினு விற்பாங்க. சாயங்காலம் எப்போடா ஸ்கூல் பெல் அடிக்கும்னு காத் திருந்து, ஓடிப்போய், பிடிச்சதை வாங்கிக்கிட்டு, உள்ளங்கை பிசுபிசுப்போட சாப்பிடுவாங்க 90’ஸ் கிட்ஸ் ஸ்கூல் பசங்க.

அப்படி, கரூர் வேலாயுதம்பாளையத்துல உள்ள அரசு பள்ளிக்கூடம் பக்கத்துல, இப்பவும் கடை போட்டிருக்காங்க வீரம்மாள். இனிப்பும் காரமுமா விக்கிறவங்க வாழ்க்கையில இருக்குற இனிப்பு, காரத்தை தெரிஞ்சுக்க, அவங்ககிட்ட பேச்சுக் கொடுத்தோம்.

2K kids: வாழ்க்கைங்கிறது சூடமிட்டாய் மாதிரி! - கட்டில்கடை பாட்டி

‘`21 வயசுல எனக்குக் கல்யாணம் முடிஞ்சது. ரெண்டு ஆம்பளப் புள்ளைங்க இருக்காங்க. வீட்டுக்காரரு கடின உழைப்பாளி. அவருக்கு உதவ நானும் வேலைக்குப் போனேன். பசங் களுக்கு நல்லபடியா கல்யாணம் முடிஞ்சது. எனக்கு 56 வயசு ஆனப்போ, என் வீட்டுக்காரரு இறந்துட்டாரு. என் மகன்களுக்கு நான் சுமையா இருக்கக் கூடாதுனு தனியாதான் இருக்கேன். என் வீட்டுல இருந்து 100 மீட்டர் தொலைவுல இருக்குற இந்தப் பள்ளிக்கூடம் முன்னால கட்டில்கடை போட்டேன். தனியா கிடந்த எனக்கு, தெனமும் இங்க சிரிச்சுக்கிட்டும் அழுதுகிட்டும் வர்ற குழந்தைகளைப் பார்க் குறதுல மனசு லேசாகுது.

குழந்தைகளுக்குப் பிடிச்ச இனிப்பு, காரம் நம்ம கடையில இருக்கும். காலையில 8 மணிக்கு வந்துட்டு, 10 மணிக்கு வீட்டுக்குப் போவேன். சாயங் காலம் 3.30 மணிக்கு வந்துட்டு இரவு 8 மணிக்குப் போவேன்.

வாழ்க்கை, வாயில போட்டதும் சுர்ருனு கரைஞ்சுட்டே போற சூட மிட்டாய் மாதிரிதான் இருக்கு. அதுக்குள்ள நல்லபடியா படிச்சு, வேலைக்குப்போய், நல்ல பொழப்பு பொழச்சுக்கோங்க கண்ணுகளா!”

- வாஞ்சையுடன் சொல் கிறார் வீரம்மாள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு