@@ப.கோபிபச்சமுத்து, கிருஷ்ணகிரி-1.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிபோல, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்வாரா?

பாவம்... கொரோனா போடும் ஆட்டத்துக்கு பயந்து அவரே சொந்த மாவட்டத்தில், அதுவும் சொந்த ஊரான பெரியகுளத்தையும் விட்டுவிட்டு பெரும்பாலும் வேறு ஊரில் போய் தஞ்சமடைந்து கிடக்கிறார். தேவையில்லாமல் அவரை உசுப்பேற்றப் பார்க்கிறீர்களே!

@திருச்சிற்றம்பலம் சுரேஷ்.

விவசாயத்துக்கான இலவச மின்சாரத் திட்டம் எப்படியிருக்கிறது?

‘நகைக்கடன் ரத்து’ மூலமாக ‘நூல்’ விட்டார்கள். எதிர்ப்பு பலமாக இருக்கவே, சற்றே பின்வாங்கியதுபோல வேஷம் கட்டுகிறார்கள். ஆனால், சீக்கிரமே மொத்தமாக ‘ஃப்யூஸ் பிடுங்கு’வார்கள் என்றே தோன்றுகிறது.

@டி.செல்வராஜ், மதுரை.

கொரோனா ஒழிப்பில் தமிழக அரசு எடுத்த முயற்சி வெற்றியா... தோல்வியா?

கொரோனாவின் வெ(ற்)றிக்கூச்சல் மதுரையையும் தாண்டிக் கேட்கிறதே!

பழ.இராமன், கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்.

தமிழக சட்டமன்ற எ.க.த பதவியிலிருக்கும் மு.க.ஸ்டாலின், ஆ.க.த-வாக இருந்திருந்தால், மே மாதத்துக்குள்ளாகவே கொரோனாவை முற்றிலுமாக ஒழித்திருப்பார்தானே?

‘நான், மக்களுக்குச் சேவை செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியன்; முடிந்தவரை மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்வேன்; முடியாவிட்டால் அடுத்தவருக்கு வழிவிட்டுவிடுவேன்...’ இத்தகைய நல்லெண்ணத் துடன் அந்தப் பதவியில் அமர்ந்தால்,

பழ.இராமன்கூட இதைச் சாதிக்க முடியும். அப்படியில்லாமல், இதைவைத்து கட்சியை எப்படி வளர்க்கலாம், குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வளவு பங்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் இருந்தால், பாண்டியன் நெடுஞ்செழியனாக இருந்தாலும்கூட எதையும் அசைக்கவே முடியாது.

@ப்யூனி பிரதர்ஸ்.

பெரியவர்கள் சொல்வாக்கு பலிக்குமா?

நிச்சயமாக... அது அனுபவ வாக்கு.

@இளங்கோ.ஆர்.

‘நேரு அந்தக்கால அரசியல்வாதி’ என்று பதில் தந்துள்ளீர்கள். அதற்கு என்ன அர்த்தம்... நேரு, இந்திரா, ராஜீவ் இவர்கள் தேசநலனுக்கு எதிராக இருந்தார்களா?

‘அந்தக்கால அரசியல்வாதி’ என்றுதான் சொன்னேன். இந்த வார்த்தைகளுக்கு, ‘தேசநலனுக்கு எதிரானவர்கள்’ என்று நீங்களாகவே பொழிப்புரை எழுதுகிறீர்கள். மக்களே... இதற்கு இளங்கோதான் காப்பிரைட் உரிமையாளர். நமக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று இதன் மூலமாக சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது (அப்பாடி... இது சமூகப் பரவலாகி, பின்னாடி பஞ்சாயத்து ஆனாலும் நம்மளை யாரும் கொளுத்த மாட்டாங்க)!

ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.

ஒழுங்குமுறை, சட்டவிதிகள் என்று இந்திய நாட்டின் எதையுமே மதிக்காதவர்கள் இங்கே நிறைந்திருக்கிறார்கள். எனவே, இந்த நாட்டுக்குத் தேவை சர்வாதிகாரம் என்பது சரிதானே?

முதலில் ஆட்சியாளர்கள் இதையெல்லாம் மதிக்கிறார்களா என்று பாருங்கள். ஒரு சாதாரண காவலர், வீதியில் நின்று தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்ததற்காக அரசாங்கத்தால் தூக்கியடிக்கப்படுகிறார். கோடிக்கணக்கான ரூபாய் பணத்தில் இழைக்கப்பட்ட சொகுசு கார்களை வைத்திருப்பவர்களெல்லாம் எந்தவிதமான பாஸும் இல்லாமல், ஊரடங்கு நேரத்தில் உல்லாச ஊர்வலம் போகிறார்கள். சல்யூட் அடித்து அனுப்பிவைக்கிறது போலீஸ். அப்பாவுக்கு மருந்து வாங்குவதற்காகக் கடைக்கு வந்தவரை அடித்து நொறுக்குகிறார்கள்; அவருடைய ஓட்டை இருசக்கர வாகனத்தையும்கூடப் பறிமுதல் செய்கிறார்கள்; எதிர்ப்பைக் காட்டுவதற்காக தீவைத்துக் கொண்டு இறந்தே போகிறார் அந்த மகன். இதைவிடவா கொடியதாக இருந்துவிடப் போகிறது நீங்கள் சொல்லும் சர்வாதிகாரம்! அதிகாரத்தால் அழிவை மட்டுமே நிலைநாட்ட முடியும்... அமைதியை அல்ல!

‘சூலூர்’ எஸ்.தமிழ்ப்பாவை நாச்சியார். கோயம்புத்தூர் மாவட்டம்.

காசிக்குப் பரிசு கயிறா, குண்டா, புஸ்வாணமா?

இனிமேலும் ‘நாகர்கோவில் காசி’கள் போன்ற காமக்கொடூரன்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமென்றால் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்தில்லை. ஆனால், காசிகளுக்கும் ஆசி தருவதற்கு அரசாங்கத்தில், கட்சிகளில். சாதிகளில், மதங்களில், காவல்துறை உள்ளிட்ட அதிகாரம் மிக்க பதவிகளில் பலரும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்களே!

@க.அருச்சுனன், செங்கல்பட்டு.

தமிழ்க்கடவுள் முருகனை இழிவாகப் பேசியது, பெரியார் சிலையை அவமதித்தது, கோயில்களில் டயர் எரித்தது... இவற்றையெல்லாம் இரும்புக்கரம் கொண்டு அடக்குவது எப்போது?

‘எரியட்டும்’ என்று நினைப்பவர்கள் இருக்கும்வரை எதையுமே அடக்க முடியாது.

@ராம்குமார்.

பணம், பல வருட அன்பையும் நட்பையும் சந்தேகித்து, உடைத்துச் சிதைத்துவிடுகிறதே?

பணம் அப்படி உடைத்துச் சிதைக்கிறது என்றாலே... அந்தப் பல வருட அன்பிலும் நட்பிலும் உண்மை இல்லைதானே!

@இளவேனில், போடிநாயக்கனூர்.

`இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் படிப்படியாகக் குறைகிறது’ என்று மத்திய அரசு சொல்கிறதே..?

‘ஏறுகிறது’ என்று இதே மத்திய அரசு சொன்னபோது நம்பினோம்தானே. ‘இறங்குகிறது’ என்று சொல்லும்போதும் நம்பிவைப்போம்.

@இல.கண்ணன் நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

“ஐம்பது மாதங்களாகக் கிடப்பிலிருக்கும் ‘நீட் தேர்வு’ தொடர்பான வழக்கை உடனே விசாரிக்க வேண்டும்’’ என்று டாக்டர் ராமதாஸ் சொல்கிறாரே..?

தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. பாட்டாளிகளிடம் எடுத்துச்சொல்லி வாக்குகளை வளைப்பதற்கு அவருக்கும் புதிதாக சில பாயின்ட்கள் தேவைப்படும்தானே!

@மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை-9.

கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்பவரை ‘கந்துவட்டிக்காரர்’ என்கிறார்கள். வாங்கிய பணத்தை திருப்பித் தராதவர்?

கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்பதால் கந்துவட்டிக்காரர் அல்ல, அநியாய வட்டி வாங்குவதால்தான் அந்தப் பெயர். அதேசமயம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராதவரை, அவர் கடனாக வாங்கிய பணத்தைப் பொறுத்து அழைக்கலாம்.

உழைத்து வாழ்வதற்காகக் கடனாக வாங்கிய சிலபல ஆயிரங்களை, அடுத்தவேளை சோற்றுக்கே வழியில்லாத சூழலில் திருப்பித் தராதவருக்கும்... `கொள்ளையடிக்க வேண்டும்’ என்ற நோக்கத்தில் வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை திருப்பிச் செலுத்தாமல் அரண்மனை போன்ற பங்களாவில் புகுந்துகொண்டு, ‘அடுத்தவேளை பீருக்கு என்ன பிராண்ட்?’ என்று யோசிப்பவருக்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே!

@க.பூமிபாலன், மண்மாரிகாட்டூர், கரூர் மாவட்டம்.

மனிதர்களால் இவ்வுலகம் அடைந்த தீமைதான் என்ன?

‘நன்மை ஏதாவது உண்டா?’ என்று கேள்வியை மாற்றிக் கேளுங்கள்!

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம்.

சாத்தான்குளம் விவகாரத்தை ஐ.நா சபையும் தொடர்ந்து கவனித்துவருகிறதே?

இலங்கை விவகாரத்தைக்கூடத்தான் 20, 30 ஆண்டுகளாக கவனித்துவருகிறது. தமிழர்கள் கொத்துக் கொத்தாக லட்சக்கணக்கில் கொன்று வீழ்த்தப்பட்டார்கள். 11 ஆண்டுகள் கடந்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அவ்வப்போது, இதைப் பற்றி ஒருபக்கம் வீராவேச அறிக்கையை வெளியிடும் ஐ.நா., மறுபக்கம் அந்தக் கொலைகார இலங்கை ஆட்சியாளர்களைத் தன்னுடைய மன்றத்தில் பேசவைத்து அழகு பார்க்கிறது. ‘ஐ(யாம்) நா(ட்)’ என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

@ம.தமிழ்மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்.

கொரோனாவால் தினந்தோறும் ‘மரணபீதி’யுடன் வாழ வேண்டியுள்ளதே?

எச்சரிக்கையுடன்தானே வாழச் சொல் கிறார்கள். நீங்கள் எதற்காகத் தேவையில்லாத வற்றையெல்லாம் நினைத்துக்கொண்டு வாழ்கிறீர்கள்.

@க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டிணம்.

இக்காலத்தில் அநேகமானவர்களுக்கு அவர்களுடைய பதவி, அநியாயம் செய்யத் தூண்டக்கூடியதாக அமைந்துவிடுகிறதே?

எக்காலத்திலுமே பதவியைவைத்து அநியாயம் செய்பவர்கள்தான் அதிகம். அவர்களையெல்லாம் நாம் தட்டிக்கேட்க துணியாததுதான் அவர்களுக்கான தூண்டுதல்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!