Published:Updated:

கீழடி கண்காட்சியகம்! - இது மக்களின் வெற்றி!

கீழடி
பிரீமியம் ஸ்டோரி
கீழடி

தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைப் புதைத்துவிட நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கீழடி கண்காட்சியகத்தை மதுரையில் திறந்துவைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கீழடி கண்காட்சியகம்! - இது மக்களின் வெற்றி!

தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைப் புதைத்துவிட நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கீழடி கண்காட்சியகத்தை மதுரையில் திறந்துவைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Published:Updated:
கீழடி
பிரீமியம் ஸ்டோரி
கீழடி

அவ்வளவு எளிதாக நிகழ்ந்ததல்ல இந்த நிகழ்வு. ஏராளமான சூழ்ச்சிகள், உள்ளடி அரசியல்கள் எல்லாவற்றையும் முறியடித்தே சாதித்துள்ளனர் தமிழ் உணர்வாளர்கள். இதற்காக குரல்கொடுத்தவர்கள், சட்டப்போராட்டம் நடத்தியவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வைகை நதிக்கரையோர ஆய்வை, கீழடியில் ஐந்து வருடங்களுக்கு முன் மத்திய தொல்லியல் துறை உற்சாகமாகத்தான் தொடங்கியது. ஆய்வில் கிடைத்த பொருள்களையும் தமிழரின் நாகரிகமான தொன்மையையும் கண்காணிப்பு அதிகாரியாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் வெளிப்படுத்தியதும், மத்திய தொல்லியல் துறை தரப்பு சுணக்கம்காட்டத் தொடங்கியது. இரண்டாம் கட்ட ஆய்வுக்கும் அனுமதியளிக்காமல் காலம் தாழ்த்தியது. அத்துடன் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை மைசூர் ஆய்வகத்துக்குக் கொண்டுசெல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

கீழடி கண்காட்சியகம்! - இது மக்களின் வெற்றி!
கீழடி கண்காட்சியகம்! - இது மக்களின் வெற்றி!

இந்த நிலையில்தான் தமிழகத் தலைவர்களும் தமிழறிஞர்களும், கீழடியில் ஆய்வு தொடர வேண்டும் என குரலெழுப்பத் தொடங்கினர். இன்னொரு பக்கம், ‘கீழடியில் ஆய்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும். இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்களை மைசூருக்குக் கொண்டுசெல்லக் கூடாது; இங்கேயே கண்காட்சியகம் அமைக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கறிஞர் கனிமொழி மதி.

கீழடி கண்காட்சியகம்! - இது மக்களின் வெற்றி!

அதன் பிறகே இரண்டாம்கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கியது மத்திய தொல்லியல் துறை. இதைத் தொடர்ந்து, சில நாள்களிலேயே அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கீழடி ஆய்வுப்பணிக்கு ஸ்ரீராம் என்பவர் நியமிக்கப்பட்டார். அடுத்து மூன்றாம்கட்ட ஆய்வையும் மத்திய தொல்லியல் துறை நடத்தியது. தொடர்ந்து, ‘இனி இங்கு ஒன்றுமில்லை’ என்ற ரீதியில் ஆய்வை நிறைவு செய்தார்கள். இது, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கீழடி ஆய்வைத் தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்கவே, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முயற்சியில் நான்காம்கட்ட ஆய்வை தமிழக தொல்லியல் துறையே தொடங்கியது.

நான்காம்கட்ட ஆய்வில் எடுக்கப்பட்ட அரிய பொருள்கள் பற்றிய அறிக்கையை தமிழக அரசே சமீபத்தில் வெளியிட்டது. அது தமிழரின் தனித்த அடையாளத்தையும் நாகரிக வரலாற்றுப் பெருமையையும் பறைசாற்றுவதாக அமைந்தது. தொடர்ந்து ஐந்தாம்கட்ட ஆய்வும் நடத்தி முடிக்கப்பட்டு, ஏராளமான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1. கண்காட்சியகம் திறப்பு விழாவில்...,  
2.கண்காட்சியகத்தைப் பார்வையிடும் மக்கள்...
1. கண்காட்சியகம் திறப்பு விழாவில்..., 2.கண்காட்சியகத்தைப் பார்வையிடும் மக்கள்...

இந்த நிலையில்தான் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக கண்காட்சி யகத்தைத் திறந்து, கீழடியில் கிடைத்த பொருள்களைக் காட்சிப்படுத்தியுள்ளது தமிழக அரசு. சென்னையில் இருந்தபடி நவம்பர் 1-ம் தேதி இந்தக் கண்காட்சியகத்தை காணொலி மூலம் திறந்துவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், “சிந்து, கங்கை நதிக்கரை நாகரிகத்துக்குப் பிறகு, வேறு நகர நாகரிகங்கள் தோன்றவில்லை என்ற கருத்தைப் பொய்யாக்கும் வகையில், 2,600 ஆண்டுகளுக்கு முன்பே வைகைக்கரை நாகரிகம் சிறந்து விளங்கியது. இதற்கான சான்றுகள்தான் கீழடியில் கிடைத்துள்ளன. தமிழகத்தில் நடந்ததி லேயே இதுதான் மிகப்பெரிய அகழாய்வு. இங்கு 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டி நடத்திய அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்திருக்கின்றன. மிக விரைவில் கீழடி அகழாய்வுப் பொருள்களைக் காட்சிப்படுத்த சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் 12.21 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

தற்போது மதுரை உலகத் தமிழ்ச் சங்கக் கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியகத்தில் சுடுமண் பானைகள், எழுத்தாணிகள், உலோக ஆயுதங்கள், தங்க அணிகலன்கள், சுட்ட மண்பானை ஓடுகள், விளையாட்டுப் பொருள்கள், தாயக்கட்டைகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள் உட்பட ஏழாயிரத்துக்கும் அதிகமான பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொருள் குறித்த தகவலும் அந்தப் பொருளுக்குக் கீழே எழுதி வைக்கப்பட்டுள்ளது. 3டி தொழில்நுட்பத்திலும் இந்தப் பொருள்களைப் பார்க்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.

கீழடி கண்காட்சியகம்! - இது மக்களின் வெற்றி!

வழக்கறிஞர் கனிமொழி மதியிடம் பேசியபோது, ‘‘இந்த விஷயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றபோது, அரசுத் தரப்பினர் இதன் முக்கியத்துவம் தெரியாமல்தான் இருந்தார்கள். அவர்கள் கவனத்துக்கு யாரும் எடுத்துச் சொல்லாமலும் இருந்திருக்கலாம். நான் எடுத்த சட்டரீதியான முன்னெடுப்பு ஒரு காரணமாக இருந்தாலும், என்னைப்போன்று பல்வேறு வழிகளில் போராடிய சமூகச் செயற்பாட்டாளர்கள், தமிழறிஞர்கள், சாமானியர்கள் ஆகியோரின் உணர்வுகளையும் கீழடியின் தொன்மையையும் உணர்ந்து கண்காட்சியகம் அமைத்துள்ளார்கள். அதற்காக தமிழக அரசுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்!’’ என்றார்.