தண்ணீருக்காக மீண்டும் ஒரு போராட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர் தேனி மாவட்ட விவசாயிகள். இதுவரை முல்லை பெரியாறு அணையில் சிக்கலை ஏற்படுத்திய கேரள அரசு, இப்போது சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் தடுப்பணை கட்டுவதற்கான வேலைகளில் இருக்கிறது. இது, தேனி மாவட்ட விவசாயிகளை கடும் அதிர்ச்சிகுள்ளாக்கியிருக்கிறது.

மலைகள் சூழ்ந்த தேனி மாவட்டத்தின் பிரதான தொழில், விவசாயம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி யாகும் முல்லை பெரியாறு, வைகை ஆறு மற்றும் சில சிற்றாறுகளும் ஓடைகளும் தான் தேனி மாவட்ட விவசாயத்தின் உயிர்நாடி.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சுரங்கனாறு நீர்வீழ்ச்சியிலிருந்து உருவாகும் சுரங்கனாறு ஓடைதான் அதையொட்டி உள்ள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்துக்கான நீர் ஆதாரம். இந்த நீர்வீழ்ச்சியின் மேல்புறத்தில் உள்ள கேரளப் பகுதியில் பெரிய தடுப்பணை கட்டி அங்கு படகுகளை விட கேரள சுற்றுலாத் துறை திட்டமிட்டி ருக்கிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் எட்டாவது மைல் அருகே உள்ளது செல்லார்கோவில். அங்கு உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் இயற்கையாக உற்பத்தியாகும் சிறு ஓடைகள் அருவிக்குழி என்கிற இடத்தில் ஒன்றுசேர்ந்து, கேரள எல்லையைக் கடந்து அருவி யாக தமிழகத்துக்குள் வந்து சேர்கின்றன. இப்போது அந்த அருவிக்குழியில் தடுப்பணை கட்டி படகு இல்லம் அமைக்க திட்டமிட்டிருக்கிறது கேரள சுற்றுலாத் துறை. இதற்காக கடந்த வாரம், இடுக்கி எம்.பி-யான டீன் குரியாகோஸ் (காங்கிரஸ்), அதிகாரி களுடன் வந்து அருவிக்குழியைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.

“சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில், தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள நிலங்களை ஆக்கிரமிக்கும் வேலையை கடந்த 15 ஆண்டுகளாகச் செய்துகொண்டிருக்கிறது கேரள சுற்றுலாத் துறை. இடுக்கி, தேனி மாவட்ட எல்லையை மட்டும் அளந்தால் தமிழகத்துக்குச் சொந்த மான ஏராளமான நிலங்கள் கேரளத்தின் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவரும். சுரங்கனாறு நீர்வீழ்ச்சியைத் தடுக்க கேரள அரசு நீண்டகாலமாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அருவிக்குழியில் தடுப்பணை கட்டி படகு விட வேண்டும் என்று செல்லார்கோவில் அருகில் உள்ள சக்குப்பள்ளம் பஞ்சாயத்தில் சில வருடங்களுக்கு முன்பே தீர்மானம் இயற்றினார்கள். தேனி மாவட்ட விவசாயிகளின் எதிர்ப்பால் அது நிறுத்தப்பட்டது.

இப்போது மீண்டும் பிரச்னையை ஆரம்பிக்கிறார்கள். இதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை யெனில், சுரங்கனாறு நீரை மட்டுமே நம்பி கூடலூருக்கு மேற்கே உள்ள ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசாகி விடுவதுடன், தமிழக உரிமையும் பறிபோய்விடும்” என்றார் ஐந்து மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.

இதுதொடர்பாகப் பேசிய 18-ம் கால்வாய் விவசாயச் சங்க நிர்வாகி திருப்பதி வாசகன். “கேரள சுற்றுலாத் துறை தடுப்பணையைக் கட்ட முயலும் அருவிக்குழி இடம் தமிழகத் துக்குச் சொந்தமானது. தேனி மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் கண்டுகொள்ளாத தால்தான் கேரள அரசு அந்த இடத்தை ஆக்கிரமித்திருக்கிறது. தேனி - இடுக்கி மாவட்ட எல்லையை அளப்பதே இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். சுரங்கனாறு, கேரளத்தில் உற்பத்தியானாலும் தமிழகத்துக்குத்தான் பலன் கொடுக்கிறது. அதனால் கேரள அரசு தடுப்பணையைக் கட்ட நாம் அனுமதிக்கக் கூடாது” என்றார் தீர்க்கமாக.

இது தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் பேசிய போது, “வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாகப் பேசியுள்ளேன். அவர்களுடன் விவாதித்த பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

இடுக்கி எம்.பி டீன் குரியாகோஸிடம் பேசினோம். “அருவிக்குழியில் தடுப்பணை கட்டி படகு விட வேண்டும் என்பது அங்கு உள்ள மக்களின் விருப்பம். ஆனால், கேரள அரசோ, சுற்றுலாத் துறையோ இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை” என்றார்.

அருவிக்குழிக்கு நாம் நேரில் சென்றோம். மலையிலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது நீர். ‘இது பொதுவழி அல்ல. இங்கே பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகளை வீசுவது குற்றமாகும்’ என்று தமிழக வனத்துக்றை சார்பில் அங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. சுற்றிலும் கட்டடங்கள், தண்ணீரைக் கடக்க உதவும் சிறுபாலங்கள் என கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டி ருந்தன.

கேரள அரசு சார்பில் சுற்றுலா வளர்ச்சிக்கான பணிகள் அதிவேகமாக நடப்பதை உணர முடிந்தது. ‘உள்ளே நுழையக் கூடாது!’ என்ற அறிவிப்பு பலகையைப் படித்துச் சிரித்து விட்டுக் கடக்கின்றனர் சுற்றுலாப் பயணிகள். அந்த இடம் தமிழகத்துக்குச் சொந்த மானது என்பதற்கு சாட்சியாக இருக்கின்றன தமிழில் எழுதப்பட்ட அந்த அறிவிப்புப் பலகைகள்.