Published:Updated:

`கொரோனா தொற்று; பயண விவரங்களை மறைக்கும் காசர்கோடு நபர்!’ –சிக்கிய நகைகள்; சந்தேகிக்கும் அதிகாரிகள்

விமான நிலையம் பரிசோதனை
விமான நிலையம் பரிசோதனை

சிகரெட் மற்றும் வாசனைத் திரவியங்கள் போன்ற பொருள்களைக் கொண்டு வந்து அவர் விற்பனை செய்துவந்ததால், சுங்கத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அந்த நபர், துபாயில் இருந்து தங்கங்களைக் கடந்திவந்தாகக் கூறப்படுகிறது. மார்ச் 11-ம் தேதி, கரிப்பூர் விமானநிலையத்தில் வைத்து ஸ்கிரீனிங் செய்துள்ளனர். அப்போது அவருக்கு, காய்ச்சல் உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு அடுத்த தினம் காய்ச்சல் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

‘கொரோனா’ வைரஸ்
‘கொரோனா’ வைரஸ்

விமான நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில், அந்த நபர் தங்கம் கொண்டுவந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மார்ச் 11-ம் தேதி, கரிப்பூர் விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரது லக்கேஜை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

இந்தப் பொருள்களுக்கு வரி செலுத்த வேண்டும் என சுங்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு, தன்னிடம் போதுமான பணம் இல்லை எனக் கூறி அங்கிருந்து வெளியேறியுள்ளார். சுங்கத்துறை அதிகாரிகளிடம் அவரது பாஸ்போர்ட் இருந்ததால், மீண்டும் அவர் சென்றுள்ளார். அதிகாரிகள் பாஸ்போர்ட்டை திரும்பித் தர மறுத்துவிட்டனர். அந்த நபர் வெளிநாடுகளில் இருந்து சிகரெட் மற்றும் வாசனைத் திரவியங்கள் போன்ற பொருள்களைக் கொண்டுவந்து விற்பனை செய்துவந்ததால், சுங்கத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்துவந்துள்ளார்.

சென்னையில் 21 கிலோ தங்க நகைகள் பறிமுதல்!
சென்னையில் 21 கிலோ தங்க நகைகள் பறிமுதல்!

இதேபோன்று 50-க்கும் மேற்பட்ட நபர்கள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள், தங்கநகை கடத்தலில் ஈடுபடுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது. இதில், உள்ளூர் எம்.எல்.ஏ-க்கள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களுக்கு அந்த நபர் சென்றுள்ளார். அங்கு யாரை சந்தித்தார் என்ற விவரங்களைக் கூற மறுத்து வருகிறார்.

காசர்கோடு மாவட்ட நிர்வாகம், அந்த நபரின் பயண விவரங்களை வெளியிட்டுள்ளது. 'விமானநிலையத்தில் இருந்து அந்த நபர் நேரடியாகத் தன்னுடைய வீட்டுக்குச் செல்லவில்லை. ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மீண்டும் விமானநிலையம் திரும்பி வந்துள்ளார். நீண்ட நேரம் விமானநிலையத்தில் பொழுதைக் கழித்துள்ளார். ஹோட்டலில் இருந்து ரயில்நிலையத்துக்கு ஆட்டோவில் பயணித்துள்ளார். அங்கிருந்து காசர்கோடுக்கு ரயிலிலக்சென்றுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபரை பரிசோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு