Published:Updated:

சார், மேடம் வார்த்தைகளுக்கு தடை - கேரள கிராம பஞ்சாயத்தின் அதிரடி முடிவு!

கேரளா
கேரளா

''சார், மேடம் போன்ற வார்த்தைகள் பிரிட்டிஷ் காலத்தில் வந்தவை. அவை அடிமைப்படுத்தும் வார்த்தைகள்.அப்போது மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அதனால், சார், மேடம், கீழ்படிகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தோம் இப்போது சுதந்திரம் கிடைத்துவிட்டது. இது ஜனநாயக நாடு.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மாத்தூர் கிராம பஞ்சாயத்து இருக்கிறது. நாட்டிலேயே முதல்முறையாக அந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகம் சார், மேடம் போன்ற மரியாதை நிமித்தத்துக்குப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு தடை விதித்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு நடந்த கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் இந்த முடிவு ஒரு மனதாக எடுக்கப்பட்டுள்ளது.

கேரளா
கேரளா
கேரளா:`` `ஈசோ’ என்ற பெயரில் சினிமா வெளிவர அனுமதிக்க மாட்டோம்’’  முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ்

இதற்கான அறிவிப்பும், பஞ்சாயத்து அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ளது. சார், மேடம் வார்த்தைகளுக்கு பதிலாக மாற்று வார்த்தை பயன்படுத்த மொழியியல் துறையிடம் பரிந்துரையும் கேட்டுள்ளனர்.

அதுவரை சார், மேடம் வார்த்தைகளுக்கு பதிலாக பெயர் சொல்லியோ, அவர்களின் பதவியை சொல்லியோ அழைக்கலாம். சேட்டன், சேச்சி என்று கூட அழைக்கலாம். சார், மேடம் போன்ற வார்த்தைகள் அரசு அலுவல் கடிதங்களிலும் இடம் பெறக் கூடாது என முடிவெடுத்துள்ளனர்.

சார் மேடம் தடை அறிவிப்பு
சார் மேடம் தடை அறிவிப்பு

அரசு சேவை தொடர்பாக விண்ணங்களில் கீழ்படிகிறேன், தாழ்மையாக கேட்கிறேன் போன்ற வார்த்தைகளுக்கு பதிலாக, எனக்கு இந்த சேவை தேவைப்படுகிறது, வேண்டுகிறேன், விரும்புகிறேன் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்றும் முடிவெடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த உத்தரவு வர காரணமானவர்களில் ஒருவரான சமூக ஆர்வலர் பூபன் மட்டுமன்தா கூறுகையில் ,” ஒட்டப்பாலம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான ஓர் கட்டடத்தை இடிக்க அரசு உத்தரவு பிறப்பித்துவிட்டது. நான் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தேன். அதனால், என்னை சப்கலெக்டர் அலுவலகத்தில் ஆஜராக சொல்லி ஆர்டர் அனுப்பினர்.

பூபன் மட்டுமன்தா
பூபன் மட்டுமன்தா

அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்த வார்த்தைகள், ஏதோ குற்றவாளியை விசாரணைக்கு அழைப்பது போல இடம் பெற்றிருந்தது. நான் எந்த குற்றமும் செய்யாதவன். அதனால், அதை என் பதில் கடிதத்தில் கேள்விகளாக குறிப்பிட்டு அனுப்பியிருந்தேன்.

அதன் அடிப்படையில், மொழியியல் துறை ‘மக்களுடன் தொடர்பு கொள்ள நட்புரீதியான வார்த்தைகளை பயன்படுத்தலாமே?’ என்று சப்கலெக்டரிடம் கேட்டுக் கொண்டது. அதன்பிறகு தான் இந்த புரட்சி நடந்துள்ளது. ஆம், இதை புரட்சி என்று தான் சொல்வேன். சார், மேடம் போன்ற வார்த்தைகள் பிரிட்டிஷ் காலத்தில் வந்தவை. அவை அடிமைப்படுத்தும் வார்த்தைகள்.

 இந்திய தேசியக் கொடி
இந்திய தேசியக் கொடி

அப்போது மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அதனால், சார், மேடம், கீழ்படிகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தோம் இப்போது சுதந்திரம் கிடைத்துவிட்டது. இது ஜனநாயக நாடு. எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் உள்ளன. அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.

மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசுத்துறைகள் இருக்கின்றன. எங்களை மக்கள் இப்படிதான் அழைக்க வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக் முடியாது. அப்படி செய்தால் அதிகாரிகளும், மக்களை அதே மாதிரி அழைக்க வேண்டும் என்று வாதிட்டேன். முதல்வர் வரை கடிதம் எழுதினேன். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சார் மேடம் தடை உத்தரவு
சார் மேடம் தடை உத்தரவு

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இந்த முடிவை எடுக்க சொல்லி கடிதம் அனுப்பியுள்ளோம்” என்றார். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாத்தூர் கிராம பஞ்சாயத்தில் சி.பி.எம் மற்றும் பா.ஜ.க உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.

“அதிகாரிகளோ, உறுப்பினர்களோ தங்களை சார், மேடம் என்று அழைக்க வற்புறுத்தினால் புகார் தெரிவிக்கலாம்” என்று மாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ப்ரவீதா முரளிதரன் கூறியுள்ளார். “வட இந்தியாவில் ஜி என்ற பொது வார்த்தையை பயன்படுத்துவார்கள். கம்யூனிஸ்ட்கள் காம்ரேட் என்ற பொதுவார்த்தையை பயன்படுத்துவார்கள்... அதுபோன்ற ஓர் அலுவல் வார்த்தையை அரசாங்கம் கண்டறிய வேண்டும்.

சார் மேடம் தடை அறிவிப்பு
சார் மேடம் தடை அறிவிப்பு

சார், மேடம் வார்த்தைகளுக்கு தடை விதித்து அனைத்து இடங்களிலும் அந்த பொது வார்த்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்” என்று மாத்தூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு