Published:Updated:

``விஜய் அண்ணாவைப் பார்த்து என் ஓவியங்களைக் கொடுக்கணும்!’’ - மலையாள தேசத்து மாணவியின் கனவு

கெளரி
பிரீமியம் ஸ்டோரி
News
கெளரி

கௌரி யு.கே.ஜி படிக்கும்போதே வரைவதில் ஆர்வம் காட்டினாள். மூன்றாம் வகுப்பு படித்த போது, தேசத் தலைவர்களின் படங்களை எல்லாம் தத்ரூபமாக வரையத் தொடங்கி னாள்

“விஜய் அண்ணாவைப் பார்த்து, நான் வரைந்த அவருடைய ஓவியங்களையெல்லாம் கொடுக் கணும்’’ - தினமும் இதை மந்திரம் போல உச்சரித்துக் கொண்டிருக் கும் கௌரி சுனில், நம்மிடமும் அதையே கூறினார்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, கெளரி சுனில். அக்கரை சீமையில் விஜய்யின் தீவிர ரசிகையாக இருக்கும் கெளரி வரைந்துள்ள பென்சில் ஓவியங்கள் அனைத்தும் அட்டகாச ரகம். கருநாகப்பள்ளி புதியகாவில் உள்ள கெளரியின் வீட்டுக்குச் சென்றோம்.

“அம்மா... விஜய் அண்ணனின் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக் கிறார்களாம்...’’ என்று தன் அம்மாவுக்குக் குரல் கொடுத்தவரிடம் உற்சாகம் பற்றிக்கொண்டது.

``விஜய் அண்ணாவைப் பார்த்து என் ஓவியங்களைக் கொடுக்கணும்!’’ - மலையாள தேசத்து மாணவியின் கனவு

கௌரியின் அப்பா சுனில், பூக்கட்டும் வேலை செய்கிறார். “கௌரி யு.கே.ஜி படிக்கும்போதே வரைவதில் ஆர்வம் காட்டினாள். மூன்றாம் வகுப்பு படித்த போது, தேசத் தலைவர்களின் படங்களை எல்லாம் தத்ரூபமாக வரையத் தொடங்கி னாள். அதனால் அவளை ஓவிய வகுப்பில் சேர்த்துவிட்டோம். அங்கு ஆப்பிள், ஆரஞ்சு, பூக்கள் என வரையச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். தலைவர்களின் படங்களை வரையும் அளவுக்கு இதில் பயிற்சி பெற்றவளுக்கு, அந்த அடிப்படை ஓவியப் பயிற்சி போர் அடித்திருக்கிறது. அதனால், ஓவிய வகுப்புக்குச் செல்லாமல் வழக்கம்போல அவளாகவே அவளுக்குப் பிடித்ததை வீட்டில் வரைய ஆரம்பித்தாள். இப்போது கருநாகப்பள்ளி அரசுப் பள்ளியில் படிக்கிறாள்’’ என்றவர், சில யானை ஓவியங்களைக் காட்டினார்.

கௌரி குடும்பத்தினர்...
கௌரி குடும்பத்தினர்...

‘`இதோ... இது ‘குஷி’ படம் பார்த்து ஒரே நாளில் வரைந்த ஓவியம். இது ‘மாஸ்டர்’ படம் விஜய் அண்ணா, இது ‘சர்கார்’ விஜய் அண்ணா. இரண்டாம் வகுப்பு படித்தபோது, ‘கில்லி’ பார்த்தேன். அதில் அண்ணாவின் டான்ஸ் மிகவும் பிடிக்கும். க்ளைமாக்ஸில் விஜய் அண்ணாவை அடிப்பது போன்ற காட்சியில் நான் அழுதேவிட்டேன்’’ என்று சிரிப்பவர், கேரளாவில் விஜய் ரசிகர்கள் நடத்திய ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறார்.

‘`மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சார், அவர் அம்மாவுடன் இருப்பது போல ஓர் ஓவியம் வரைந்து, அதை லாலேட்டனை நேரில் பார்த்துக் கொடுத்தேன். அப்போது லாலேட்டனோடு நானும், என் தம்பி சபரியும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். அந்த போட்டோவையும் நான் ஓவியமாக வரைந்தேன். அதுபோல, விஜய் அண்ணா வையும் ஒரு நாள் பார்த்து, நான் வரைந்த அவரின் பென்சின் ஓவியங்களை அவரிடம் கொடுத்து, அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் கனவு’’ என்ற கௌரி, கண்ணாடிக் குடுவையில் தான் வரைந்திருக்கும் விஜய் ஓவியத்தைக் காட்டு கிறார். அதில் ‘ஸ்வப்னம் (கனவு)’ என்று எழுதி வைத்திருக்கிறார்.

``விஜய் அண்ணாவைப் பார்த்து என் ஓவியங்களைக் கொடுக்கணும்!’’ - மலையாள தேசத்து மாணவியின் கனவு

“இது தெற்றிக்கோடு ராமச்சந்திரன், இது பாம்பாடி ராஜன், இது சிறைக்கல் காளிதாசன், இது புதுப்பள்ளி கேசவன். கேரளாவில் புகழ்பெற்ற யானைகள் இவை. என் மகள் நிறைய யானைகளையும் வரைந்திருக்கிறாள். குருவாயூர் கிருஷ்ணன் போன்ற தெய்வங்களின் படங்களையும் வரைந்திருக்கிறாள். பள்ளிச் சுவர்களில் சோட்டா பீம் போன்ற ஓவியங்களை வரைந்து கொடுத்திருக்கிறாள். என் மகள் வரைந்த மகாத்மா காந்தி ஓவியங்களை லேமினேட் செய்து, இங்குள்ள அங்கன் வாடி மையங்களில் கொடுத்திருக்கிறேன். அதைப் பார்க்கும் குழந்தைகள், ‘நாங்களும் கௌரி அக்கா போல வரைவோம்’ என்று சொல்வதாக ஆசிரியர்கள் சொல்லும் போது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்களுக்கும் என் மகள் வரைந்த தேசத் தலைவர்களின் ஓவியங் களைக் கொடுத்திருக்கிறேன்...” பெருமை யுடன் சொல்லும் சுனில், தனது பூக்கடை முழுவதும் மகள் வரைந்த ஓவியங்களை மாட்டியிருக்கிறார். கடைக்கு வருபவர் களிடம் எல்லாம், தன் மகள் வரைந்த நடிகர் விஜய்யின் புகைப்படங்களை பூரிப்புடன் காட்டி, ‘என் மகளுக்கு விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்பதுதான் ஆசை, அதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும்’’ எனக் கூறிவருகிறார்.

“கௌரி ஓவியத்தில் மட்டுமல்ல, படிப்பிலும் படுசுட்டிதான்’’ என்கிறார் கௌரியின் அம்மா சரிதா. ‘`பாடம் எல்லாம் படித்து முடித்த பிறகுதான் ஓவியம் வரைய அமர்வாள். வகுப்பில் முதல் ஐந்து ரேங்க்குக்குள் வந்து விடுவாள். அவள் அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேண்டும் என்பது என் விருப்பம். ‘இல்லை நான் கலெக்டர் ஆக வேண்டும்’ என்கிறாள் கௌரி. அவள் எதிர்காலம் எந்தத் துறையில் அமைந்தாலும், ஓவியம் அவள் வாழ்க்கை முழுக்கத் தொடர வேண்டும்’’ என்றவர், ‘`டி.வி-யில் விஜய் படம் ஓடினால் முடியும் வரை ஒரு இன்ச் கூட நகரமாட்டாள் கௌரி. விஜய் படம் ரிலீஸ் ஆனதுமே நாங்கள் தியேட்டருக்குச் சென்று விடு வோம். விஜய் டாலர் வைத்த செயினை கௌரி எப்போதும் கழுத்தில் போட்டிருப் பாள்’’ என்கிறார்.

“நான் சிறு வயதிலிருந்தே, நானாக கற்றுக்கொண்டு பென்சில் ஓவியங்கள் வரைந்து வருகிறேன். அதற்காக பென்சில், பேப்பர் என்று என்ன கேட்டாலும், அது ராத்திரியாக இருந்தாலும் என் அப்பா சென்று வாங்கிக் கொடுப்பார். விதவிதமாகப் பல ஓவியங்கள் வரைந் திருந்தாலும், விஜய் அண்ணாவின் ஓவியங்கள்தாம் அதிகம் வரைந் திருக்கிறேன்’’ - அதைப் பற்றிப் பகிரும் போது, கௌரி கண்களில் மின்மினிகள்.

``விஜய் அண்ணாவைப் பார்த்து என் ஓவியங்களைக் கொடுக்கணும்!’’ - மலையாள தேசத்து மாணவியின் கனவு
``விஜய் அண்ணாவைப் பார்த்து என் ஓவியங்களைக் கொடுக்கணும்!’’ - மலையாள தேசத்து மாணவியின் கனவு
``விஜய் அண்ணாவைப் பார்த்து என் ஓவியங்களைக் கொடுக்கணும்!’’ - மலையாள தேசத்து மாணவியின் கனவு
``விஜய் அண்ணாவைப் பார்த்து என் ஓவியங்களைக் கொடுக்கணும்!’’ - மலையாள தேசத்து மாணவியின் கனவு
``விஜய் அண்ணாவைப் பார்த்து என் ஓவியங்களைக் கொடுக்கணும்!’’ - மலையாள தேசத்து மாணவியின் கனவு
``விஜய் அண்ணாவைப் பார்த்து என் ஓவியங்களைக் கொடுக்கணும்!’’ - மலையாள தேசத்து மாணவியின் கனவு
``விஜய் அண்ணாவைப் பார்த்து என் ஓவியங்களைக் கொடுக்கணும்!’’ - மலையாள தேசத்து மாணவியின் கனவு

கௌரியின் வீட்டு ஷோக்கேஸ் முழுக்க ஓவியத்தில் அவர் வாங்கிக் குவித்த பரிசுகள், மற்றும் ஓவியங்கள் நிறைந்திருக்கின்றன. அதில் ‘ஸ்வப்னமும்’ காத்திருக்கிறது!