உணவுப்பொருள்களை தமிழகத்திலிருந்து கொள்முதல் செய்யும் கேரள மாநிலம், கழிவுகளை இலவசமாகப் பரிசளிப்பது தமிழகத்துக்கொன்றும் புதிதல்ல! கேரள எல்லையில் அமைந்துள்ள அனைத்து தமிழக மாவட்டங்களும் சந்திக்கும் பிரச்னைகளில் இதுவும் ஒன்று. ஆனால், தேனியில் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் `வால்கரடு’ என்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கழிவுகள் கொட்டப்படுகின்றன என்பது கூடுதல் அதிர்ச்சி!

வால்கரடின் அடிவாரப் பகுதிகளில்தான் புதிய பேருந்து நிலையம் உள்ளது; மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களும் செயல்படுகின்றன.

மாவட்டத் தலைநகரின் மிக முக்கிய இடத்தில் கேரளக் கழிவுகள் கொட்டப்பட்டது, தேனி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

வால்கரடு அடிவாரத்தில் நிலம் வைத்துள்ள ஜீவா என்பவர், ‘‘என்னுடைய இடத்திலிருந்து கரும்புகை வருவதாக போன் வந்தது. உடனே அங்கு சென்று பார்த்தேன். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துக் கொண்டிருந்தனர். யாரோ என்னுடைய நிலத்தில் குப்பையைப் போட்டு, தீ வைத்துள்ளனர். சிறியதும் பெரியதுமாக, குவியல் குவியலாகப் பல இடங்களில் குப்பைகளைக் கொட்டி வைத்திருந்தனர். வாகன உதிரிபாகங்கள், மருத்துவக் கழிவுகள், எலெக்ட் ரானிக் கழிவுகள் எனக் கலந்திருந்தன. அவற்றில் கேரளாவைச் சேர்ந்த டிரைவிங் லைசென்ஸ், வாகனச் சான்றிதழ்கள் ஆகியவையும் இருந்தன.இவற்றை வைத்துதான் இது கேரளக் கழிவுகள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

வால்கரடு அடிவாரம் முழுவதும் பல இடங்களில் கழிவுகளைக் கொட்டியுள்ளனர். கரட்டுக்கு உள்ளேயும் சில இடங்களில் கொட்டியுள்ளனர். வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் பெருகிவரும் தேனியில், மக்களின் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்திசெய்யும் ஒரே மலைப்பகுதி இந்த வால்கரடுதான். அதிலும் கேரளக் கழிவுகளைக் கொட்டி மாசுபடுத்துகின்றனர்’’ என்று வேதனையோடு கூறினார்.

சமூக ஆர்வலர் முகமது சஃபி, ‘‘எல்லையோரப் பகுதிகளில் கேரளக் கழிவுகளைக் கொட்டுவதுபோய், நகரத்துக்குள் கழிவுகளைக் கொட்டும் அவலம் தேனியில் நடந்திருப்பது கவலையளிக்கிறது. தமிழக கேரள எல்லை யோரம் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் இருக்கும் காவல்துறையும் வனத்துறையும் என்ன செய்கின்றன? அவர்களின் துணை இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை. கேரளாவில் மருத்துவம் மற்றும் எலெக்ட்ரானிக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் கடும் தண்டனை. மேலும், கழிவுகளைச் சுத்திகரிக்க போதிய வசதிகளும் அவர்களிடம் இல்லை. அதனால் கேரளாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள், தங்கள் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதற்கென பெரும்தொகையை ஒதுக்குகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த சில ஏஜென்ட்கள், அதன் வீரியம் புரியாமல் பணத்துக்காகக் கழிவுகளை தமிழகத்துக்குள் எடுத்துவந்து கொட்டிவிட்டுச் செல்கின்றனர். வால்கரடு ஓரங்களில் பல குடியிருப்புகள் உள்ளன; அரசு அலுவலகங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் தைரியமாக கேரளக் கழிவுகளைக் கொட்டிவிட்டுச் செல்ல முடிகிறதென்றால், பணம் தாராளமாக விளையாடியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வால்கரடு முழுவதும் சோதனை செய்ய வேண்டும். இன்னும் எவ்வளவு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தச் செயலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும்’’ என்றார் கொதிப்போடு.

ஜனவரி 4-ம் தேதி கேரளக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி, வால்கரடு அடிவாரப் பகுதியில் அவற்றைக் கொட்டும்போது அங்கு இருந்த இளைஞர்கள் சிலர் லாரியை புகைப்படம் எடுத்துள்ளனர். அது அதிகாரிகளின் கைகளுக்கும் சென்றுள்ளது. ஆனால், இப்போது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வியிடம் பேசியபோது, ‘‘சம்பந்தப்பட்ட லாரி குறித்த படங்கள் மற்றும் தகவல்களை எனக்கு அனுப்புங்கள். எல்லைகளில் சோதனையை அதிகரிக்கச் செய்கிறேன். யார் இந்தச் செயலில் ஈடுபட்டார்கள் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

வால்கரடு பகுதியில் கேரளக் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து, வனத்துறையின் தேனி ரேஞ்சர் மோகன்குமாரிடம் கேட்டபோது, ‘‘தொடர்ச்சியாக ரோந்துப்பணியில்தான் இருக்கிறோம். அப்படி இருந்தும், வால்கரட்டின் ஓரங்களில் சில மர்மநபர்கள் கழிவுகளைக் கொட்டிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அதை உடனே அப்புறப்படுத்திவிடுவோம். `நிரந்தரமாக பணியாட்களை நியமித்து, வால்கரட்டைப் பாதுகாக்க வேண்டும்’ என, மேலிடத்துக்கு கோரிக்கைவைத்திருக்கிறோம்’’ என்றார்.

கேரளக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி எப்போது?