Published:Updated:

பெண் வயிற்றில் கர்சீஃப் வைத்து தைத்த மருத்துவர்கள்; அறுவை சிகிச்சையின்போது அலட்சியம்!

ஆபரேஷன்
News
ஆபரேஷன் ( (மாதிரி படம்) )

அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள், கவனக்குறைவாக நஸ்ரானாவின் வயிற்றில் கர்சீஃபை வைத்து தைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்த பிறகும் வயிற்று வலி குறையாததால், இதுபற்றி மருத்துவரிடம் நஸ்ரனா முறையிட்டுள்ளார்...

பெண் வயிற்றில் கர்சீஃப் வைத்து தைத்த மருத்துவர்கள்; அறுவை சிகிச்சையின்போது அலட்சியம்!

அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள், கவனக்குறைவாக நஸ்ரானாவின் வயிற்றில் கர்சீஃபை வைத்து தைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்த பிறகும் வயிற்று வலி குறையாததால், இதுபற்றி மருத்துவரிடம் நஸ்ரனா முறையிட்டுள்ளார்...

Published:Updated:
ஆபரேஷன்
News
ஆபரேஷன் ( (மாதிரி படம்) )

உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிரசவ அறுவை சிகிச்சையின்போது பெண் வயிற்றில் கர்சீஃப் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் அலட்சியம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோஹா அருகேயுள்ள நௌகவானா சதாத் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சைஃபி நர்சிங் ஹோம் செயல்பட்டு வருகிறது. இதை, மருத்துவர் மட்லூப் என்பவர் நடத்தி வருகிறார். இவருடைய மருத்துவ மனையில் கெரி கிராமத்தைச் சேர்ந்த நஸ்ரனா என்ற பெண், பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அனுமதிக்கப்பட்டார்.

ஆபரேஷன்
ஆபரேஷன்
மாதிரிப்படம்

அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள், கவனக்குறைவாக நஸ்ரானாவின் வயிற்றில் கர்சீஃபை வைத்து தைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்த பிறகும் வயிற்று வலி குறையாததால், இதுபற்றி மருத்துவரிடம் நஸ்ரனா முறையிட்டுள்ளார். இன்னும் சிறிது காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறிய மருத்துவர், வெளியில் குளிர் அதிகமாக இருப்பதும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று விளக்கமும் தந்துள்ளார்.

பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகும், அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து அவரின் கணவர் ஷம்ஷர் அலி, அம்ரோஹாவில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு நஸ்ரானாவை பரிசோதித்ததில் வயிற்று வலியின் உண்மையான காரணத்தைக் கண்டறிந்தனர். அவரின் வயிற்றில் கர்சீஃப் இருந்தது தெரிய வரவே, மற்றொரு அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அதை அகற்றினர்.

அறுவைசிகிச்சை (மாதிரி படம்)
அறுவைசிகிச்சை (மாதிரி படம்)

இதையடுத்து, ``மருத்துவர் மட்லூப் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, கணவர் ஷம்ஷர் அலி புகார் செய்தார். சி.எம்.ஓ சிங்கால் கூறுகையில், `நோடல் அதிகாரி டாக்டர் ஷரத்திடம் இதுபற்றி விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். விசாரணை முடிந்த பிறகே கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க முடியும். இதுபற்றி முழுமையாக விசாரணை நடத்தப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அலட்சியத்தால் பெண் வயிற்றில் கர்சீஃப் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.