சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“நினைச்சா அமெரிக்காவிலிருந்து லீவுபோட்டு இந்தியா வந்துடுவேன்!”

குழந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தை

‘‘குழந்தைகளை அழகழகாய் புகைப்படம் எடுக்க, எத்தனையோ பேர் இருக்கின்றனர்.

தனால் நானும் அதையே செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்” என்று சொல்லிச் சிரிக்கிறார், கிட்ஸ் போட்டோ கிராபர் ஐஸ்வர்யா ராஜன் பாபு. முழுநேர ஐ.டி பணி, பகுதி நேர போட்டோகிராபி பணி, குடும்பப்பொறுப்புகள் எனச் சுழன்றுகொண்டிருப்பவர்.

ஐஸ்வர்யா, அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்திலுள்ள முக்கியமான ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முன்னணி ஐ.டி பணியாளர். இந்திய வம்சாவளியான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்ட் டைம் போட்டா கிரோபராகவும் இயங்கி வருகிறார். இவருடைய `ஹக்பாட்’ போட்டோகிராபி நிறுவனம் அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் ஹிட்! வாட்ஸப்பில் ஐஸ்வர்யாவைப் பிடித்தேன்.

ஐஷ்வர்யா
ஐஷ்வர்யா

‘`எனக்கு போட்டோகிராபி மீது சிறுவயதிலிருந்து ஆர்வம் உண்டு. அந்த ஆர்வத்தை, வாழ்வின் ஏதாவதொரு கட்டத்தில் தொழில் சார்ந்த முன்னெடுப்பாக மாற்ற வேண்டுமென விருப்பப் பட்டேன். அப்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதுதான், `ஹக்பாட்.’ பிறந்த பச்சிளம் குழந்தைகள் தொடங்கி, வளரிளம் குழந்தைகள்வரை நாங்கள் புகைப்படம் எடுத்துத் தருகிறோம். வாரம் முழுக்க அலுவலகம், வார இறுதி நாள்களில் போட்டோஷூட்ஸ். நீண்ட விடுமுறை கிடைக்கும்போது, இந்தியா வந்து பணி செய்வேன். `கண்டிப்பாகச் செய்ய வேண்டும்’ என நினைக்கும் சில அசைன்மென்ட்களைத் தள்ளிப்போடக்கூடாது என்பதற்காக, அவ்வப்போது ஆபீஸுக்கு லீவ் போட்டுவிட்டு இந்தியா பறப்பதும் உண்டு’’ எனக் கூலாகச் சொல்லும் ஐஸ்வர்யா, நான்கு வயதுக் குழந்தையின் அம்மா.

“ பர்த் போட்டோகிராபி (பிரசவத்தின்போதே எடுக்கப்படும் புகைப்படம்), ஃப்ரெஷ் 48 (குழந்தை பிறந்து 48 மணி நேரத்தில் எடுக்கப்படும் புகைப்படம்), கர்ப்பகாலப் புகைப்படங்கள், குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாட் டங்கள் போன்றவையெல்லாம் எடுத்துவருகிறேன். பர்த் போட்டோகிராபி, ஃப்ரெஷ் 48 போன்றவை அமெரிக்காவில் சாத்தியம். இந்தியாவில் இன்னும் இந்தக் கலாசாரம் வரவில்லை என்பதால் அங்கு இந்த முன்னெடுப்புகளைத் தொடங்கவில்லை.

அமெரிக்கப் புகைப் படங்களில், இந்தியப் பாரம்பர்யப் பொருள்களை செட் ப்ராப்பர்ட்டியாகப் பயன்படுத்துவேன். பட்டுப் புடவை, உரல், பாரம்பர்ய உடைகள் போன்றவற்றோடு நான் எடுத்த குழந்தைகளின் புகைப்படங்கள், இன்ஸ்டாவில் பிரபலம்” என்கிறார் ஐஸ்வர்யா.

“நினைச்சா அமெரிக்காவிலிருந்து லீவுபோட்டு இந்தியா வந்துடுவேன்!”

‘ஹக்பாட்’, குழந்தைகள் புகைப்படங்களை மட்டும் எடுப்பதில்லை. விழிப்புணர் வுக்கான விஷயங்களையும் படம் பிடிக்கிறது. அதற்கான சமீபத்திய உதாரணம், தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்துக்காக இந்தியச் சாலைகளிலும் பொது வெளிகளிலும் இந்நிறுவனம் எடுத்த `தி மாம்மி சீரிஸுக்கான (The Mommy Series)’ புகைப் படங்கள்.

``என்னைக் கேட்டால், `உலகம் மாறிவிட்டது, பாலின பேதமின்றி வாழும் சூழல் இன்றைய தலைமுறைப் பெண்ணுக்குக் கிடைக்கிறது, பொதுவெளிகளில் பெண்களுக்கான இடம் விரிவடைந்துள்ளது’ போன்ற வற்றையெல்லாம் ஓரளவு மறுக்கவே செய்வேன். இன்றளவும் பொது இடங்களில் தாய்ப்பால் ஊட்டும் சூழல் பெண்களுக்கு மிகவும் அவஸ்தையானதாகவே இருக்கிறது. ‘நர்ஸிங் ரூம்’ வசதிகள் எதுவுமின்றி, எங்கே, எப்படி அமர்வது, யாராவது பார்ப்பார்களா, ஏதாவது சொல்லிவிடுவார்களா எனத் தவிக்கும் அவர்களின் வாதையை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

“நினைச்சா அமெரிக்காவிலிருந்து லீவுபோட்டு இந்தியா வந்துடுவேன்!”

உங்களுக்குத் தெரியுமா... முறையாகத் தாய்ப்பால் கொடுப்பதால் உலகளவில் இருபதாயிரம் தாய்மார்களும், சரியாகத் தாய்ப்பால் கிடைக்கப்பெறுவதால் உலகளவில் எட்டு லட்சம் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்கின்றன யுனிசெஃப் ஆய்வுகள். ஆனால், வெளியிடங்களில் பாலூட்டு வதில் உள்ள தயக்கம், பயம், பதற்றம் போன்றவை பாலூட்டும் காலத்தில் பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்குகிறது, அல்லது வீட்டை விட்டு வெளியேறும்போது புட்டிப்பால் தாய்ப்பாலுக்கு மாற்றாகிவிடுகிறது. இந்தியா போன்றதொரு வளரும் நாட்டில், பெண்களின் இந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசியே ஆக வேண்டுமென முடிவெடுத்து உருவாக்கப் பட்டதுதான் எலெக்ட்ரிக் ரயிலில் தாய்ப்பால் கொடுக்கும் பெண், பேருந்து நிலையத்தில் தாய்ப்பால் கொடுக்கும் பெண் ஆகியோரின் படங்கள் அடங்கிய ‘தி மாம்மி சீரிஸ்’” என்கிறார் ஐஸ்வர்யா.

‘`சோஷியல் மீடியா மூலம், ‘மாம்மி சீரிஸு’க்கு உலகெங்குமிருந்து 6,500 பெண்களை இணைத் துள்ளேன். இவர்கள் வழியாகத் தாய்ப்பால் விழிப்புணர்வு, மார்பகப் புற்றுநோய் விழிப்பு ணர்வு, தாய்மார்களுக்கான கதை, கவிதை, ஓவியப் போட்டிகள், பரிசுகள் எனப் பல்வேறு விஷயங்களைச் செய்து வருகிறோம். ‘மாம்மி சீரிஸி’ல் இணைந்துள்ள பெண்கள் எல்லோரும், விரைவில் சென்னையில் சந்திக்கவிருக்கிறோம். நான் கிளம்பிக் கொண்டே யிருக்கிறேன்!” என்று மீண்டும் புன்னகைக்கிறார்.

வெல்கம் ஹோம் கேர்ள்!