Published:Updated:

சினிமா விகடன்: ரத்தத்தை மலர்களாய் மாற்றியவன்!

கிம் கி டுக்
பிரீமியம் ஸ்டோரி
கிம் கி டுக்

லுத்வியாவில் தங்கி அடுத்த படத்துக்கான முன்னேற்பாடுகளில் இருந்த போதுதான் கொரோனாவால் தன் 59 வயதில் மரணித்தி ருக்கிறார்.

சினிமா விகடன்: ரத்தத்தை மலர்களாய் மாற்றியவன்!

லுத்வியாவில் தங்கி அடுத்த படத்துக்கான முன்னேற்பாடுகளில் இருந்த போதுதான் கொரோனாவால் தன் 59 வயதில் மரணித்தி ருக்கிறார்.

Published:Updated:
கிம் கி டுக்
பிரீமியம் ஸ்டோரி
கிம் கி டுக்
ஒரே நேரத்தில் கொண்டாடவும் விமர்சிக்கவும் பட்ட தென் கொரிய சர்ச்சை இயக்குநர் கிம் கி டுக்.

அதீத வன்முறை, பாலியல் காட்சிகள் இவர் படங்களில் முக்கிய அம்சங்களாக இருந்தாலும், அவற்றைக் காட்சிப்படுத்தியதில் அவர் காட்டிய அழகியல் தனித்துவ மானது. வசனங்கள் மிகக்குறை வாகவும் விஷுவலாக மிரட்டல் கோணங்களில் கதை சொல்லும் பாணி, வித்தியாசமான திரைக்கதை எனப் புதிய அலை சினிமாவின் முன்னோடி அவர்.

பாரீஸில் திரைக்கதையைப் படித்தவர். 1996-ல் 36வது வயதில் இயக்குநராக அறிமுகமான கிம் கி டுக்கின் முதல் படமான ‘Crocodile’ சர்வதேச விருதுகளையும், வல்லுறவுக் காட்சிகளுக்காகக் கண்டனத்தையும் சம்பாதித்தது.

சினிமா விகடன்: ரத்தத்தை மலர்களாய் மாற்றியவன்!

தன்னை அவமானப்படுத்திய பெண்ணைப் பழிவாங்கும் விபரீத இளைஞனின் ஒரு செயல் பின்னாளில் அவனை எப்படியெல்லாம் மாற்றுகிறது எனச் சொல்லும் ‘Bad guy’, வடகொரியாவிலிருந்து தென் கொரியாவுக்குத் தன் மீன்பிடி படகின் வலை அறுந்ததால் வழிதவறி வந்த மீனவனின் துயரத்தைப் பேசும் ‘The net’, ஏமாற்றும் மனைவியை அவளது குறைகளோடு ஏற்றுக்கொள்ளும் கணவனைக் காட்டிய ‘Breath’ என ஒவ்வொன்றும் ரத்தச் சகதியில் பூத்த ரோஜா மலர்கள்! அவர் இயக்கத்தில் வன்முறைக் காட்சிகள் இல்லாமல் புத்த மதத்தின் பின்னணியில் வெளியான படம்தான் ‘Spring, summer, fall Winter and spring’. இன்றுவரை உலகத் திரைப்பட விழாக்களில் அதிகம் திரையிடப்பட்ட சாதனையைப் பெற்ற படம் இதுதான்!

கிம் கி டுக் இயக்கிய 33 படங்களும் கிட்டத்தட்ட தென்கொரியாவின் சமகாலத்தைப் பிரதிபலிக்கும் ‘Mirror art’ வகையைச் சேர்ந்தவை. மிக எளிய கதை மாந்தர்கள், அவர்கள் செய்யும் குற்றங்கள் போன்றவற்றைக் கதைக்களமாகப் பயன்படுத்தினாலும், பின்னணியில் தென் கொரியாவின் அரசியலைத் தாங்கிய இன்றைய சூழலைப் பிரதிபலிப்பதாகவே அவர் படங்கள் இருக்கின்றன.

கிம் கி டுக்
கிம் கி டுக்

இவர் படத்தில் நடித்த மூன்று பெண்கள் கிம் மீது ‘மீ டூ’ குற்றச்சாட்டுகளை வைக்க, நீதிமன்ற வழக்கில் தோல்வியும் கண்டார். 2013 திருவனந்தபுரம் உலகத் திரைப்பட விழாவுக்கு வந்திருந்த கிம் கி டுக், தனக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறார். “நான் பார்த்த அழகான இடங்களுள் ஒன்று கேரளா. வாய்ப்பு கிடைத்தால் ஒரு சினிமா இங்கு இயக்குவேன்” என்றார்.

லுத்வியாவில் தங்கி அடுத்த படத்துக்கான முன்னேற்பாடுகளில் இருந்த போதுதான் கொரோனாவால் தன் 59 வயதில் மரணித்தி ருக்கிறார்.

‘மரணம் ஒரு வகையில் விடுதலை... இன்னொரு உலகுக்கான சாவி!’ என அவரின் ‘Spring’ படத்தில் பௌத்த துறவி பேசிய வசனம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. வேறொரு உலகத்தில் சினிமா இயக்குங்கள் கிம்!