ரெசிப்பிஸ்
Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

சமையலறை டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சமையலறை டிப்ஸ்

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சமைய லறையில் உள்ள மின்சார இணைப்புகளைச் சரிபார்த்துக்கொள்வது நல்லது

ப்ரிட்ஜை சமையலறைக்குள் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. கோடைக் காலங்களில் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, சிலிண்டர் கியாஸ் கசிவு இருக்கும்பட்சத்தில் பெரும் பாதிப்பாக உருவாகலாம்.

மையலறையில் கூர்மையான பல கருவிகள் உள்ள நிலையில், குழந்தைகள் அவற்றால் காயம் அடையும் வாய்ப்புகள் அதிகம். எனவே, குழந்தைகளைச் சமைய லறைக்குள் அனுமதிக்காதீர்கள்.

மையலறையில் நீண்ட கைகள் கொண்ட தொளதொளப்பான ஆடைகள் அணிய வேண்டாம். அவ்வகை துணிகளில் எளிதில் நெருப்பு பற்றும் வாய்ப்பு கொண்டவை. மேலும், சிந்தெடிக் வகை ஆடைகளும் பாதுகாப்பானதாக இருக்காது.

று மாதங்களுக்கு ஒருமுறை சமைய லறையில் உள்ள மின்சார இணைப்புகளைச் சரிபார்த்துக்கொள்வது நல்லது.

டுப்பில் எதையாவது கிளறும்போது, நீங்கள் நிற்கும் திசையை நோக்கி கிளறாதீர்கள். நீங்கள் நிற்பதற்கு எதிர் திசையிலோ, பக்கவாட்டிலோ கிளறுங்கள். இது திடீரென்று ஏற்படும் தீக்காயங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.

டுப்பிலிருந்து சூடான பாத்திரங்களைத் தூக்கும்போது உங்களால் எவ்வளவு எடையை சுலபமாக தூக்க முடியும் என்பதை ஒருமுறை யோசித்து அதற்குப் பிறகு தேவையான உபகரணங்களை வைத்துத் தூக்கி இறங்குங்கள்.