Published:Updated:

விலகிய நண்பர்கள்... விரக்தியில் கொலை செய்த மாணவர்... கொடைக்கானல் சோகம்!

கொடைக்கானல் சோகம்
பிரீமியம் ஸ்டோரி
கொடைக்கானல் சோகம்

சென்னை, மதுரை போன்ற ஊர்களில் கல்லூரி மாணவர்கள் சிலர் வெட்டுக்குத்து என்று கூட்டமாக வன்முறையில் இறங்குகிறார்கள் என காவல் துறை கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், கொடைக்கானலில் பள்ளி வளாகத்திலேயே நண்பனை கடுமையாகத் தாக்கிக் கொலை செய்திருக்கிறார் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர்!

விலகிய நண்பர்கள்... விரக்தியில் கொலை செய்த மாணவர்... கொடைக்கானல் சோகம்!

சென்னை, மதுரை போன்ற ஊர்களில் கல்லூரி மாணவர்கள் சிலர் வெட்டுக்குத்து என்று கூட்டமாக வன்முறையில் இறங்குகிறார்கள் என காவல் துறை கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், கொடைக்கானலில் பள்ளி வளாகத்திலேயே நண்பனை கடுமையாகத் தாக்கிக் கொலை செய்திருக்கிறார் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர்!

Published:Updated:
கொடைக்கானல் சோகம்
பிரீமியம் ஸ்டோரி
கொடைக்கானல் சோகம்

கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு அருகே உள்ளது பவன்ஸ் காந்தி வித்யாஸ்ரம் பள்ளி. இங்கு, ஓசூரைச் சேர்ந்த சதீஷ்குமாரின் மகன் கபில் ராகவேந்திராவும் விருதுநகரைச் சேர்ந்த மற்றொரு மாணவரும் படித்துவந்தார்கள். இருவரும் நண்பர்கள். விருதுநகர் மாணவருக்கு, புகைபிடிக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பள்ளியில் சிறுசிறு பிரச்னைகளில் ஈடுபட்டு, இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அதன் பிறகு, மேல் வகுப்பு மாணவர்கள் தங்கும் விடுதியில் அவரை தங்கவைத்துத் தனிமைப்படுத்தியுள்ளனர்.

விலகிய நண்பர்கள்... விரக்தியில் கொலை செய்த மாணவர்... கொடைக்கானல் சோகம்!

இதனால் அந்த மாணவரிடம் சக வகுப்பு நண்பர்கள் யாரும் பேசுவதில்லை. இது, அவரைக் கடுமையாக ஆத்திரமூட்டியிருக்கிறது. குறிப்பாக, தன் நண்பன் கபில் ராகவேந்திரா தன்னுடன் பேசாததால், இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஜூலை 30-ம் தேதி இரவு, விடுதிக் கழிவறையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விருதுநகர் மாணவர், கிரிக்கெட் ஸ்டெம்ப் மற்றும் கத்தரிக்கோலால் கபிலைக் கடுமையாகத் தாக்கினார். சத்தம் கேட்டு பள்ளி ஊழியர்கள் அங்கு ஓடி வந்தவுடன், அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். கழுத்தில் கத்தரிக்கோலால் குத்தப்பட்டும், தலையில் ஸ்டெம்பால் தாக்கப்பட்டும் ரத்தவெள்ளத்தில் கிடந்திருக்கிறார் கபில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாலகுரு
பாலகுரு

அவரை கொடைக்கானல் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே ஏரிச் சாலையில் சுற்றித்திரிந்த விருதுநகர் மாணவரை போலீஸார் கைதுசெய்தனர். அவர் அங்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் சுற்றிக்கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது, அவர் சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

விலகிய நண்பர்கள்... விரக்தியில் கொலை செய்த மாணவர்... கொடைக்கானல் சோகம்!

இது தொடர்பாகப் பேசிய மனநல மருத்துவர் பாலகுரு, “டீன்ஏஜ் குழந்தைகளைத் திருத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு, அவர்களைக் கடுமையாக நடத்தக் கூடாது. இந்த வயது மாணவர்களிடம், பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும். ஏதேனும் பிரச்னைக்குரிய அறிகுறிகள் தென்பட்டால், நண்பனைப்போல் நடத்தி, வெளியே அழைத்துப்போய் மனம்விட்டுப் பேச வேண்டும். இதுவே அவர்களைச் சரியான பாதையில் கொண்டு செல்லும். கொடைக்கானலில் கொலைக் குற்றம்சாட்டப் பட்டுள்ள மாணவர், இருமுறை சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். அப்படியிருக்கும்போது, அவரைப் பெற்றோர் பராமரிப்பில் அன்புடன் அரவணைத்து நல்வழிப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவரை மேலும் மேலும் தனிமைப்படுத்தி, தண்டித்ததே இந்த நிலைக்குக் காரணம். அதற்கான முழு பொறுப்பும் பெற்றோரையே சேரும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism