ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

களிமண் முகமும் காட்டன் துணி உடலும்...

ரேவதி ஸ்ரீதரன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரேவதி ஸ்ரீதரன்

கொல்கத்தா பொம்மை தயாரிக்கும் மும்பை தமிழ்ப்பெண்!

திருத்தமான களிமண் முகம், பருத்தி துணியாலான உடலில் பொருத்தமான பட்டாடைகள், நகைகள் என்று ரேவதி ஸ்ரீதரன் கைவண்ணத்தில் உருவாகும் பொம்மைகள் பார்ப்பவர்களின் கண்களை ஆச்சர்யத்தில் விரிய வைக்கின்றன. மும்பையில் வசிக்கிற அவரிடம் உரையாடினோம்.

‘‘நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே சென்னையில். கல்யாணம் முடிஞ்சு மும்பைக்கு வந்துட்டேன். கொல்கத்தாவுல இருக்குற என் உறவினர்தான், களிமண் முகமும் பருத்தித்துணி உடம்பும் சேர்த்து பொம்மை தயாரிக்கிற கொல்கத்தா கலையை எனக்கு சொல்லிக்கொடுத்தாங்க. ஆரம்பத்துல ஹாபியா செஞ்சுக் கிட்டிருந்தேன். அதுக்கப்புறம் விருப்பப்பட்டு கேட்கிறவங்களுக்கு மட்டும், அதுக்கான தொகையை வாங்கிட்டு செஞ்சு கொடுத்திட்டிருக் கேன்.

களிமண் முகமும் காட்டன் துணி உடலும்...
களிமண் முகமும் காட்டன் துணி உடலும்...

இந்த பொம்மைக்கான களிமண் முகத்தை கொல்கத்தா வுல இருந்துதான் வரவழைக் கணும். கூரியர் செஞ்சா உடைஞ் சுடலாம்கிறதால நேர்ல போய்தான் வாங்கணும். இதனால, ஃபைபர் கிளாஸ்ல முகத்தை ஆர்டர் பண்ணி வாங்க ஆரம்பிச்சுட்டேன். அதோட நான் உருவாக்குன பொம்மைகளுக்கு பல மாநிலங்களோட ஆடைகளை தைச்சுப் போட்டு, அதுக்கேத்த நகைகள் அணிவிச்சு காலத்துக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் கஸ்டமைஸ் செஞ்சிருக்கேன்.

களிமண் முகமும் காட்டன் துணி உடலும்...
களிமண் முகமும் காட்டன் துணி உடலும்...

டெய்லரிங் தெரிஞ்சு, கொஞ்சம் கற்பனைத்திறனும் இருந்தா பொம்மைகளுக்கான ஆடைகளை நாமே தைச்சுக்கலாம். அதுல மிச்சம் விழுற துணிகள்லேயே நகைகள் செய்துக்கலாம். மெட்டல் நகைகளையும் தெய்வங்கள் கையில இருக்கிற ஆயுதங்களையும் ஆர்டர் செஞ்சுதான் வாங்கணும். துணியாலான உடம்பு, கைகால்னு எல்லாத்தையும் தைச்சு, உள்ளே பஞ்சும் மெல்லிய கம்பியும் வெச்சு செட் பண்ணி, பொருத்தமான ஃபைபர் தலையோட ஒவ்வொண்ணா இணைச்சு தைக்கிறதுதான் இந்தக் கலையில இருக்கிற பெரிய சவால். கொஞ்சம் சொதப்பினாலும் பொம்மையோட அழகு போயிடும்’’ என்கிற ரேவதி, இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர் களுக்கு இலவசமாகவே கற்றுத் தருகிறார்.

களிமண் முகமும் காட்டன் துணி உடலும்...

``பெங்களூர்ல என்னோட பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. சென்னையில திருமணத் துக்கான சீர்வரிசைத் தட்டுல வைக்கிறதுக்காக என்னோட பொம்மைகளை வாங்குறாங்க. மும்பையில கொலுவுல வைக்கிறதுக்கும் பரிசா கொடுக் கிறதுக்கும் வாங்கிட்டுப் போறாங்க. இப்போ, சாகுந்தலம், னிவாச கல்யாணம், தசாவதாரம், அஷ்ட லட்சுமி மாதிரி வித்தியாசமான தீம்ல பொம்மைகள் தயாரிக்கிறேன்.

இந்தக் கலையை பிசினஸா செய்யுறவங்க, பார்பி டால் வெச்சும் உருவாக்குறாங்க. அதுல பாரம்பர்ய அழகு கிடைக்காதுன்னாலும் மாற்றங் களைத் தவிர்க்க முடியாது தானே’’ என்கிற ரேவதியின் பொம்மைகள், பெங்களூரில் நடைபெற்ற பொம்மை களுக்கான கின்னஸ் ரெக்கார்டு நிகழ்ச்சியிலும் இடம்பெற்றிருக் கின்றன.