Published:Updated:

வரலாறு திரும்புமா... கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முடிவு எப்போது?

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முடிவு எப்போது?
பிரீமியம் ஸ்டோரி
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முடிவு எப்போது?

கோவிட்-19 தொற்றைப் பொறுத்தவரை அது டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற பருவகால நோயாகவும் மாறாது.

வரலாறு திரும்புமா... கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முடிவு எப்போது?

கோவிட்-19 தொற்றைப் பொறுத்தவரை அது டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற பருவகால நோயாகவும் மாறாது.

Published:Updated:
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முடிவு எப்போது?
பிரீமியம் ஸ்டோரி
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முடிவு எப்போது?

கோவிட்-19 பெருந்தொற்று என்ற வார்த்தை 21-ம் நூற்றாண்டிலிருக்கும் நமக்கு புதிதாக இருக்கலாம். ஆனால், கி.மு-விலேயே இதுபோன்ற பெருந்தொற்றுகள் மக்களைத் தாக்கியுள்ளன என்கிறது வரலாறு. பிற பெருந் தொற்றுகளைப் போல கோவிட்-19 தொற்றும் எதிர்காலத்தில் கொள்ளைநோயாக மாறி, சாதாரண சளித்தொற்று போன்று ஆபத் தில்லாத நோயாக மாறிவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெருந் தொற்றுகள் எப்படி கட்டுக்குள் வந்தன... கோவிட் தொற்று எப்போது கட்டுக்குள் வரும் என்பது போன்ற கேள்விகளுக்கு இந்தக் கட்டுரையில் விடை தேடலாம்.

``ஒரு நாட்டின் குறிப்பிட்ட பகுதியில், ஒரே நேரத்தில் அதிகமானோருக்கு ஏற்படும் தொற்றுநோய்களைக் கொள்ளைநோய்

(Epidemic) என்றும், உலகின் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் அதிகமானோருக்கு ஏற்படுவதைப் பெருந்தொற்று (Pandemic) என்றும் அழைக்கிறோம். பெருந்தொற்று என்பது சில காலம் இருந்துவிட்டு மறைந்து விடும். கொள்ளைநோய் என்பது மக்களி டையே இருந்துகொண்டே இருக்கும்’’ என் கிறார் சென்னையைச் சேர்ந்த மூத்த அறுவை சிகிச்சை மருத்துவர் கபாலி நீலமேகம்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முடிவு எப்போது?
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முடிவு எப்போது?

‘`கோவிடைப் பொறுத்தவரை குறிப்பிட்ட காலத்தில் இது முற்றிலுமாக ஒழியாது. கொள்ளைநோயாக நம்முடன் உலவிக் கொண்டேதான் இருக்கும் என்று உலகின் முக்கியமான விஞ்ஞானிகளில் 90 சதவிகிதம் பேர் தெரிவிக்கின்றனர். அதற்குச் சான்றாகக் கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக நோய் கட்டுப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியா, சிங்கப் பூர் போன்ற நாடுகளில் தற்போது மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளதைக் கூறலாம்.

பருவகால நோயாக மாறாது!

கோவிட்-19 தொற்றைப் பொறுத்தவரை அது டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற பருவகால நோயாகவும் மாறாது. இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கிவிட்டால் கோவிட் தொற்று குறையும் என முதல் அலையின்போது நம்பப்பட்டது. ஆனால், முதல் அலையிலும் சரி, இரண்டாம் அலை யிலும் சரி கோடைக்காலத்தில் இந்தியாவில் பாதிப்புகள் உச்சம் தொட்டிருக்கின்றன. அதேபோல குளிர்பிரதேசங்களிலும் கோவிட்-19 வைரஸ் தன் கோர முகத்தைக் காட்டியிருக்கிறது.

வீரியம் குறையும்

கோவிட் நோய்த்தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணமானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் உடலில் ஆன்டிபாடி உருவாகியிருக்கும். அந்த ஆன்டிபாடிக்கள் ஆயுள் வரைக்கும் நிலைத்திருக்காது என்பது நாம் அறிந்ததே. ஆனால், உடலில் ஆன்டிபாடி குறைவாக இருந்தாலும், நம் செல்களில் கொரோனா வைரஸின் நினைவுகள் (Memory) பதிந்திருக் கும். வைரஸ் மீண்டும் தாக்கும்போது அதற்கெதிரான ஆன்டிபாடியை உற்பத்தி செய்யும். அதனால் தொற்று மீண்டும் தாக்கும்போது உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்குப் பெரும் விளைவுகளை ஏற்படுத் தாது. அதனால் நோயின் வீரியத்தைக் குறைப்பதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். இதையே வைராலஜி நிபுணர்களும் விஞ்ஞானிகளும் வலியுறுத்து கின்றனர்” என்கிறார்.

தடுப்பூசியால் உருவாகும் ஆன்டிபாடி, குணமடைந்தவர்களுக்கு உருவாகும் ஆன்டிபாடி... இவை இரண்டு மட்டுமே கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுமா, முந்தைய பெருந் தொற்றுகள் எப்படிக் கட்டுக்குள் வந்தன என்ற கேள்வியோடு சென்னையைச் சேர்ந்த மூத்த இதய அறுவைசிகிச்சை மருத்துவர் கோவினி பாலசுப்ரமணியிடம் பேசினோம்.

``1914-ம் ஆண்டில் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூவுக்கு 50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட அதே காலகட்டமான 19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் காலரா நோய் பரவி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இவை இரண்டுமே வரலாற்றில் மிகவும் முக்கிய மான பெருந்தொற்றுகள். இந்த இரண்டு பெருந்தொற்றுகள் முடிவுக்கு வர தடுப்பூசித் திட்டம் பெருமளவில் உதவியது.

தடுப்பூசி படிப்பினைகள்

இப்போது நமக்குச் செலுத்தப்படும் தடுப் பூசிகள் எல்லாமே பரிசோதனை அடிப்படை யில்தான் போடப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, அவை உண்மையிலேயே நோயைத் தடுத்திருக்கின்றனவா என்ற முடிவுக்கு வருவார்கள். அதன் அடிப்படையில் எந்தத் தடுப்பூசி செயல்திறன் அதிகமுள்ளது, எந்தத் தடுப்பூசியை எவ்வாறு அப்டேட் செய்ய வேண்டும் போன்ற படிப்பினைகள் கிடைக்கும். அதற்கேற்றாற்போல் தடுப்பூசிகளை அப்டேட் செய்ய வேண்டும். அப்போதுதான் தடுப்பூசிகள் மூலம் பிற நோய்களைத் தடுப்பது போன்று கோவிட்-19 தொற்றையும் தடுக்க முடியும். வைரஸின் தன்மை மாறிக்கொண்டே வருவ தால் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுக்கான தடுப் பூசியைப் போல் இதையும் குறிப்பிட்ட காலத் துக்கொருமுறை அப்டேட் செய்ய நேரிடும்.

ஆன்டிவைரல் மருந்துகள்

கோவிட் முதலில் பரவத் தொடங்கியபோது அதற்கான சிகிச்சை முறைகள் இல்லாமல் இருந்தன. அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை யளித்து வந்தனர். அதன் பின்னர் ரெம்டெசிவிர் போன்ற ஆன்டி வைரல் மருந்துகள் கொடுக்கப் பட்டன. ஆனால் ரெம்டெசிவிர், எபோலா வைரஸ் தொற்றுக்காகக் கண்டறிப்பட்டது. தற்போது கோவிட் தொற்றுக்கு பயனளிக்க வில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கோவிட் சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலி லிருந்து அதை நீக்கியுள்ளது. எனவே, கோவிட்-19 வைரஸுக்கு எதிரான சிகிச்சையளிக்கும் ஆன்டிவைரல் மருந்துகள் கண்டறியப்பட வேண்டும். தடுப்பூசிகள் ஆராய்ச்சி போலவே ஆன்டிவைரல் மருந்துகள் கண்டறியும் ஆராய்ச்சியிலும் பல நாடுகள் முனைப்பு காட்டிவருகின்றன. அமெரிக்காவில் MK-4482 என்ற ஆன்டிவைரல் மாத்திரை கண்டறியப் பட்டு, பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட பரிசோதனையில் 80 சதவிகிதம் செயல்திறன்மிக்கது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் கோவிட் சிகிச்சையில் ஒரு மைல்கல்லை நிச்சயம் எட்ட முடியும்” என்கிறார்.

சீனாவும் பெருந்தொற்றும்!

சீனாவின் வடகிழக்குப் பகுதியில் சில ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கிராமம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கிராமத்தில் வெறும் 29 வீடுகளே இருந்துள்ளன. அங்கு

200 சதுர அடி அளவுள்ள ஒரு குடிசையில் எரிந்த நிலையில் சுமார் 100 எலும்புக்கூடுகளைக் கண்டறிந்தனர். அது தொடர்பாக ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானது. அதில் தொற்றுநோய் அதிவேகமாகப் பரவியதால் உயிரிழந்தவர்களை முறையாகப் புதைக்கக்கூட நேரமில்லாததால் மொத்த மொத்தமாகக் குடிசைக்குள் வைத்து உடல்களை எரித்துள்ளனர். நோயிலிருந்து தப்பி மீதமிருந்தவர்கள் அந்தக் கிராமத்தைவிட்டுப்

புலம் பெயர்ந்திருக்கின்றனர். அதே காலகட்டத்தில் சீனாவின் அதே பகுதியில் மற்றொரு கிராமத்திலும் நோய்த்தொற்று காரணமாக மொத்த மொத்தமாக உடல்களைப் புதைத்ததற்கான சான்றுகள் கிடைத் துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

மாஸ்க் அணிதல் வாழ்க்கை முறையாக மாறுமா?

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 10 சதவிகிதம் பேருக்குத்தான் தடுப்பூசி போடப் பட்டுள்ளது. 75 சதவிகிதம் பேருக்கு போடுவதற்கு 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும், ஆன்டிவைரல் மருந்துகள் கண்டறிய வேண்டும். இந்த இரண்டும் நடந்தால் தான் நம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். அதுவரை மாஸ்க், கைகழுவுதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்றியே ஆக வேண்டும்.