Election bannerElection banner
Published:Updated:

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021... தென்கொரியாவிற்கான இந்தியத் தூதர் வாழ்த்து!

கொரிய தமிழ்ச் சங்கம்
கொரிய தமிழ்ச் சங்கம்

"கொரியாவில் பொங்கல் நிகழ்விற்கு, இந்தியதூதர் ஒருவர் வாழ்த்து சொல்வது இதுதான் முதல்முறை! இது தொடர வேண்டுமென்று தூதரகத்தை வேண்டுகிறேன்."

கொரிய தமிழ்ச் சங்கம் சார்பாக ஜனவரி 31ம் தேதி நடைபெற்ற தமிழர் திருநாள் பொங்கல் விழாவிற்கு தென்கொரியாவிற்கான இந்திய தூதர் ஸ்ரீபிரியா ரெங்கநாதன் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

உழைப்பின் பெருமையையும் அதற்கு உறுதுணையாக இருக்கும் இயற்கையையும் கொண்டாடும் விழா பொங்கல்! இதன் மூலம், தமிழ்நாட்டின் பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் கொரிய மக்களுக்கு எடுத்துச்செல்லும் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கு தனது பாராட்டுக்களையும் அந்த வாழ்த்து மடலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கொரிய தமிழ்ச் சங்கம்
கொரிய தமிழ்ச் சங்கம்

இந்திய தூதரின் வாழ்த்துக்களுக்கு கொரிய தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் சு. இராமசுந்தரம், தனது நன்றியுரையில், "பொங்கல் நிகழ்விற்கு வாழ்த்து தெரிவித்திருந்த தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், மதுரை தமிழ் சங்கத்தின் இயக்குநர் திருமதி தா.லலிதா, முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு க.பொன்முடி, கவிப்பேரரசு வைரமுத்து, ஊடகவியலாளர் திரு.நக்கீரன் கோபால், எழுத்தாளர் ஆதனூர் சோழன், மக்களிசை பாடகி மதுரை சின்னப்பொண்ணு, சிறப்புரையாற்றிய திரு.காரை செல்வராஜ், உலக தமிழ் வர்த்தக அமைப்பின் தலைவர் திரு.செல்வகுமார், திரு.பாட்சா, மேலாளர், இரசிய அறிவியல் மற்றும் பண்பாட்டு நிலையம் ஆகியோருக்கு நன்றி" எனத் தெரிவித்தார்.

மேலும், "கொரியாவில் பொங்கல் நிகழ்விற்கு, இந்தியதூதர் ஒருவர் வாழ்த்து சொல்வது இதுதான் முதல்முறை! இது தொடர வேண்டுமென்று தூதரகத்தை வேண்டுகிறேன்" என்று வேண்டுகோள் விடுத்தவர், வாழ்த்து கடிதத்தை தமிழில் வழங்கியமைக்கும் நன்றி தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு