Published:Updated:

திகிலூட்டும் டிரெக்கிங்... அத்துமீறும் ஜீப் டிரைவர்கள்...

டிரெக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
டிரெக்கிங்

கட்டுப்படுத்தத் திணறும் அதிகாரிகள்

திகிலூட்டும் டிரெக்கிங்... அத்துமீறும் ஜீப் டிரைவர்கள்...

கட்டுப்படுத்தத் திணறும் அதிகாரிகள்

Published:Updated:
டிரெக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
டிரெக்கிங்
“தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் கொழுக்குமலையின் அபாயகரமான பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சர்வ சாதாரணமாக டிரெக்கிங் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

`` ‘டிரெக்கிங்’ என்ற பெயரில் அனுமதியில்லாத இடங்களுக்கெல்லாம் செல்வதால், விபத்து ஏற்படும் வாய்ப்பிருக்கிறது” என்று எச்சரிக்கைக் குரல் எழுப்புகின்றனர் கொழுக்குமலை எஸ்டேட் நிர்வாகத்தினர்.

கொழுக்குமலைக்குப் புறப்பட்டோம். தேனி மாவட்டம், போடி மெட்டைக் கடந்து கேரள மாநிலம் சூரியநெல்லியிலிருந்து 12 கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணித்தால்தான் கொழுக்கு மலைக்குச் செல்ல முடியும். கரடு முரடான மலைப்பாதை என்பதால் ஜீப்பில் மட்டுமே செல்ல முடியும்.

அதிகாலை 5 மணி... சூரிய உதயத்தைக் காண சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர் ஜீப் டிரைவர்கள். இருபுறமும் பெரும் பள்ளம். நடுவே இருக்கும் நான்கடிப் பாதையில் வரிசையாகச் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் சூரிய உதயத்துக்காகக் காத்திருந்தனர். சிறிது கால் தவறினாலும் 3,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும். பார்ப்பதற்கே மிரட்சியாக இருந்தது. சிலர் மலைச்சரிவில் இறங்கி செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். நெடுந்தூரத்தில் கூம்பு வடிவில் தெரிந்த திப்படா மலையிலும் பலர் டிரெக்கிங் சென்றுகொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“அனுமதி இல்லாத ஆபத்தான இடங்களுக்கு இப்படி சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவது சரியா?” என்று சில ஜீப் டிரைவர்களிடம் கேட்டோம். “எங்க பொழப்புக்காக இதைச் செய்யறோம். நீங்க ஏன் தடுக்க நினைக்கிறீங்க... மீடியாக்காரங்களாலதான் எங்களுக்குப் பிரச்னையே. கேரளாவுல எங்களை எதுவும் சொல்றதில்லை. நீங்க மொதல்ல இங்கருந்து கெளம்புங்க” என்று கடுமை காட்டினார்கள்.

திகிலூட்டும் டிரெக்கிங்... அத்துமீறும் ஜீப் டிரைவர்கள்...

கொழுக்குமலை எஸ்டேட் மேலாளர் ஜானி, “தேயிலை உற்பத்திதான் எங்களின் பிரதான தொழில். டூரிஸம் இங்கே கிடையாது. அதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆட்களை மட்டுமே எஸ்டேட்டுக்குள் அனுமதிப்போம். அவர்கள் சூரிய உதயத்தைப் பார்த்துவிட்டுக் கிளம்பி விடுவார்கள். சுற்றுலாப் பயணிகளை மலை மேல் அழைத்துவரும் ஜீப் டிரைவர்கள், `நாமே டிரெக்கிங் அழைத்துக்கொண்டு போனால் அதிக பணம் கிடைக்கும்’ என்று கணக்குப் போட்டுவிட்டார்கள். சூரியநெல்லி வரும் சுற்றுலாப் பயணிகளிடம் 2,000 ரூபாய் வசூல் செய்து, அதிகாலையில் அழைத்துவரும் ஜீப் டிரைவர்கள் தாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பாதையில் அழைத்துச் செல்கின்றனர். சிலர் இன்னும் அதிக கட்டணம் வசூல் செய்து சிங்கப்பாறை, திப்படா ஆகிய ஆபத்தான மலைகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் செல்லும் பகுதிகள் எஸ்ட்டேட்டுக்குச் சம்பந்தம் இல்லாத மலைப்பகுதிகள். எனவே, எங்களால் அவர்களைத் தடுக்க முடியவில்லை. இது தொடர்பாக இடுக்கி மற்றும் தேனி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்திருக்கிறோம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொழுக்குமலை எஸ்டேட் டிரெக்கரான செல்வகுமார், “ஒரு ஜீப்பில் எட்டு பேர் வரை அமரலாம். மொத்தம் 120 ஜீப்கள் இருக்கின்றன. அப்படியென்றால் எவ்வளவு பேர் செல்வார்கள் என்று நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதைத் தடுக்க வேண்டும்” என்றார்.

திகிலூட்டும் டிரெக்கிங்... அத்துமீறும் ஜீப் டிரைவர்கள்...

தேனி மாவட்ட வன அலுவலர் கெளதமிடம் பேசினோம். “தமிழக வனப்பகுதி வழியாகச் சென்றால் நாங்கள் தடுக்க முடியும். ஆனால், அவர்கள் கேரளா வழியாகச் செல்வதால் எதுவும் செய்ய முடியவில்லை. யாராவது மலையிலிருந்து தவறி விழுந்தால் தமிழக வனப்பகுதிக்குள்தான் விழ நேரிடும். இதனாலேயே கேரள வனத்துறையினர் கண்டுகொள்வ தில்லை. போடி ரேஞ்ச் வன அலுவலர்களை அங்கே கண்காணிப்புப் பணியில் அமர்த்தியிருக்கிறேன். அவர்களிடமும் ஜீப் டிரைவர்கள் பிரச்னை செய்கின்றனர். இது தொடர்பாக இடுக்கி மாவட்ட கலெக்டர் மற்றும் வன அலுவலரிடம் பேசினேன். நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள். தமிழக அரசு தலையிட்டால்தான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்” என்றார்.

செல்வகுமார் - ஜானி
செல்வகுமார் - ஜானி

கடந்த 2018 மார்ச் 11-ம் தேதி குரங்கணியிலிருந்து கொழுக்குமலைக்கு டிரெக்கிங் சென்ற 23 பேர் காட்டுத்தீயில் சிக்கி பலியான சம்பவத்தை நம்மால் மறக்க முடியாது. அதே மலையில் மற்றொரு விபத்து நடப்பதற்கு முன்பு இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி, ஆபத்தான மலைப்பாதையை நிரந்தரமாக மூட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism