Published:Updated:

``இந்தியாவிலேயே மோடியையும் பாஜக-வையும் எதிர்க்கும் முதன்மையான முதல்வர் ஸ்டாலின்தான்” - கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

``இந்தியாவிலேயே பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா கட்சியும் எதிர்க்கும் முதன்மையான வலிமையான முதல்வர் ஸ்டாலின்” என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி புகழாரம் சூட்டினார்.

``இந்தியாவிலேயே மோடியையும் பாஜக-வையும் எதிர்க்கும் முதன்மையான முதல்வர் ஸ்டாலின்தான்” - கே.எஸ்.அழகிரி

``இந்தியாவிலேயே பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா கட்சியும் எதிர்க்கும் முதன்மையான வலிமையான முதல்வர் ஸ்டாலின்” என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி புகழாரம் சூட்டினார்.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைப்பயணம் தொடங்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மேற்கொண்டுள்ள பயணம் இன்று நெல்லைக்கு வந்தது. கட்சியின் மாவட்ட அலுவலகமான செல்லப்பாண்டியன் பவனுக்கு வந்த அவர் இந்திரா, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, ஜெயகுமார், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர் ரூபிமனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ``நாடு முழுவதும் வரலாறு காணாத விலைவாசி உயர்வு ஏற்பட்டிருக்கிறது. பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றை முன்வைத்து நடைப்பயணம் தொடங்கியிருக்கிறோம். இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்ததில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பங்கு உண்டு. பொதுவுடைமைக் கட்சிகளுக்கும் பங்கு இருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசும் கே.எஸ்.அழகிரி
செய்தியாளர்களிடம் பேசும் கே.எஸ்.அழகிரி

ஆனால், சுதந்திரத்துக்காகப் போராடாத ஆர்.எஸ்.எஸ் இயக்கம், சங்பரிவார்கள், ஜனசங்கம், பாஜக, இந்து முன்னணி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள்; மோடி, வீட்டுக்கு வீடு தேசியக்கொடியைக் கொடுக்கிறார். இது வரவேற்கத்தக்கது என்றாலும், 55 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகமான நாக்பூரில் இரண்டு முறை மட்டுமே தேசியக்கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. அவர்கள் இதுவரை சுதந்திர தினத்தைக் கொண்டாடாமல் புறக்கணிக்கக் காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும்.

கச்சா எண்ணெய் விலை 120 டாலர் இருந்தபோது மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது லிட்டர் பெட்ரோல் 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று கச்சா எண்ணெய் 80 ரூபாய் விற்கும் நிலையில் மோடி அரசு 100 ரூபாய்க்கு பெட்ரோலை விற்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு நாட்டை நன்றாக ஆளத் தெரியும். ஆனால் பா.ஜ.க-வுக்கு நன்றாகப் பேச மட்டுமே தெரிகிறது
கே.எஸ்.அழகிரி

பீகாரில் நிதிஷ் குமார் ராஜினாமா செய்திருப்பதால் பிரிந்த நண்பர்கள் இணைந்திருக்கிறார்கள். அதனால், மகாராஷ்ட்ரா போன்ற சூழல் பீகாரில் ஏற்படாது. மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளுக்கு பீகார் அரசியல் மாற்றம் முதல் வெற்றியாக அமையும்.

தமிழ்நாடு ஆளுநர் ரவி, தனது மாளிகையில் வரம்பு மீறி மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் கூட்டங்களை நடத்துகிறார். இது தவறான செயல். அதைக் கண்டிக்கிறோம். புலனாய்வுத்துறை பின்புலம் உள்ள ஆளுநர் தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை என்று அவர் நியமிக்கப்பட்டபோதே தெரிவித்தேன். எனது சந்தேகம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் கே.எஸ்.அழகிரி

மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் முதல்வர் ஸ்டாலின், இந்தியாவிலேயே பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா கட்சியும் எதிர்க்கும் முதன்மையான, வலிமையான முதல்வர் ஸ்டாலின்தான். தமிழ்நாட்டில் மதவாத சக்திகளை எதிர்ப்பவர்கள் அனைவரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

இந்திய ஜனநாயகத்தைச் சீர்திருத்தம் செய்யும் வகையில் செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் நடைப்பயணத்தைத் தொடங்கி காஷ்மீர் வரை செல்கிறார். 148 நாள்கள் பயணத்தில் 3,500 கி.மீ தூரத்தை 12 மாநிலங்களின் வழியாகக் கடக்கிறார். 2024- நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான முன்னோட்டமாக இது அமையும்” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.