கூடங்குளத்தில் சமீபகாலமாக சர்ச்சைகள் ஓய்ந்திருந்த நிலையில், தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்கிறது. “கூடுதல் அணு உலைகள் அமைப்பதற்காக கடலுக்குள் இருக்கும் ஆனைக்கல் பாறையை உடைக்கப்போகிறார்கள். அதை உடைக்கக் கூடாது” என்று வெடிக்கிறார்கள் கூடங்குளம் மக்கள்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்ய நாட்டின் தொழில்நுட்பத்துடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித்திறன்கொண்ட இரு அணு உலைகள் இயங்கிவருகின்றன. இந்தப் பகுதியை அணு உலைப் பூங்காவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது மத்திய அரசு. அதனால், 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. அணு உலை வளாகத்தில் ஆறு முதல் எட்டு அணு உலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக கூடுதல் நிலங்களை அணுசக்திக்கழகம் கையகப்படுத்த உள்ளதாக மக்களிடம் அச்சம் எழுந்துள்ளது.

அந்த அச்சத்தை உறுதிப்படுத்தும்வகையில், ‘அணு உலையிலிருந்து 5 கி.மீ சுற்றளவில் புதிய கட்டடங்கள் கட்ட வேண்டுமானால், அணு உலை நிர்வாகத்தின் அனுமதிபெற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அணு உலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இதுபோதாதென, கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் கடலுக்குள் இருக்கும் ஆனைக்கல் பாறையை உடைக்கப்போவதாகவும் தகவல் பரவியுள்ளது. இதனால் கூடங்குளம் மக்கள் கொதித்துக் கிடக்கின்றனர்.

‘ஆனைக்கல் பாறையில் வழிபட அனுமதியளிக்க வேண்டும்’ என்று அணு உலை நிர்வாகத்திடம் போராடிவரும் கூடங்குளத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.ரவியிடம் இதுகுறித்துப் பேசினோம். “கூடங்குளம் அணு உலை வளாகம் அமைந்துள்ள கடல் பகுதியில் யானை வடிவிலான பாறை உள்ளது. ‘ஆனைக்கல் பாறை’ என்று அழைக்கப்படும் அந்தப் பாறையை, நாங்கள் தெய்வமாக மதித்து வணங்குகிறோம். எங்கள் ஊரில் உள்ள வீடுகளில் எந்த விசேஷம் நடந்தாலும் அந்தப் பாறையைத்தான் முதலில் வழிபடுவோம். அணு உலைக்கான பணிகள் தொடங்கப்பட்டபோது கூட இந்த வழிபாடுகள் தொடர்ந்து நடந்துவந்தன. பிறகு, வருடத்துக்கு ஒரு முறை செல்ல அனுமதித்தனர். அந்த அனுமதியையும் ரத்துசெய்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. ‘வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்’ என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறோம்.

‘ஆனைக்கல் பாறை’ புராதன வரலாறுகொண்டது. இந்திரனின் ஐராவதம் யானையில் முருகன் தெய்வானையுடன் இரவில் வந்ததாகவும், அந்த இடத்துக்கு வந்தபோது விடிந்துவிட்டதால் யானை சிலையாகிவிட்டதாகவும் நம்பிக்கை. அதன் காரணமாகவே அந்த இடத்துக்கு ‘விடிந்தகரை’ என்று பெயர் வந்திருக்கிறது. அதுவே காலப் போக்கில் மருவி ‘இடிந்தகரை’ என்றாகிவிட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாறையை அணு உலை விரிவாக்கத்துக்காக இடிக்க திட்டமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன. கடலுக்குள் இருக்கும் ராமர் பாலத்தை இடித்துவிட்டு சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முயன்றபோது, அதைப் பாதுகாக்க பா.ஜ.க-வினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதேபோன்று ஆனைக்கல் பாறையைப் பாதுகாக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கூடங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் செல்வராஜ், ‘‘திருச்செந்தூர் முருகன் கோயில் தல புராணத்தில்கூட ஆனைக்கல் பாறை பற்றிய தகவல்கள் இருக்கின்றன. ஆனால், மக்களின் நம்பிக்கையையெல்லாம் தகர்க்கும் வகையில், 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்காக அந்தப் பாறையை வெடிவைத்து உடைக்க முயற்சி நடக்கிறது. எங்களின் வழிபாட்டுக்குத் தடைவிதித்த போதுகூட, அணு உலை பாதுகாப்பு கருதி அதை நாங்கள் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டோம். ஆனால், பாறையையே உடைக்க முயல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்று படபடத்தார்.

இதுகுறித்து பா.ஜ.க-வின் நெல்லை மாவட்டத் தலைவர் மகாராஜன், “ஆனைக்கல் பாறையை அகற்ற அணு உலை நிர்வாகம் முயல்வதாக தகவல் கிடைத்ததும் அணு உலை அதிகாரிகளை தொடர்புகொண்டு அந்தப் பாறையை அகற்றக் கூடாது எனத் தெரிவித்தேன்.

ஆனைக்கல் பாறையை அகற்றாமல் அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாக அவர்கள் கூறினர்.

மக்களின் உணர்வுகளுக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பளித்து அணு உலை நிர்வாகம் செயல்படும் என நம்புகிறோம். மக்கள் வழிபடும் ஆனைக்கல் பாறையை அகற்ற பா.ஜ.க ஒருபோதும் அனுமதிக்காது” என்றார் திட்டவட்டமாக.

இதுகுறித்து அணு உலை தரப்பினரின் கருத்தை அறிய அதிகாரிகளை தொடர்புகொண்டோம். ‘`இந்த விவகாரங்கள் குறித்து மத்திய அணுசக்திக் கழகம்தான் அதிகார பூர்வமாகப் பேச முடியும்’’ என்று ஒதுங்கிக்கொண்டனர். ``பெயர் வெளியிட வேண்டாம்’’ என்றபடி நம்மிடம் பேசிய சில அதிகாரிகள், “அணு உலை வளாகத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதுடன் கூடுதல் அணு உலைகளை அமைக்கும் விரிவாக்கப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. அணு உலை வளாகத்தில் கூடுதலாக உலைகளை அமைக்கும் அளவுக்கு நிலங்கள் இருக் கின்றன. அதேசமயம், ஆனைக்கல் பாறை அகற்றப் படுமா என்பது குறித்து, இப்போது உறுதிபட தெரிவிக்க முடியாது’’ என்றனர்.