Published:Updated:

2K kids: குத்திரபாஞ்சான் அருவி! - நெல்லை மாவட்டத்தில் ஒரு மினி குற்றாலம்...

குத்திரபாஞ்சான் அருவி
பிரீமியம் ஸ்டோரி
குத்திரபாஞ்சான் அருவி

ப.நம்பி ஸ்ரீநிவாஸ்

2K kids: குத்திரபாஞ்சான் அருவி! - நெல்லை மாவட்டத்தில் ஒரு மினி குற்றாலம்...

ப.நம்பி ஸ்ரீநிவாஸ்

Published:Updated:
குத்திரபாஞ்சான் அருவி
பிரீமியம் ஸ்டோரி
குத்திரபாஞ்சான் அருவி

நெல்லை மாவட்டம், பணகுடி பேரூராட்சியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரான மகேந்திரகிரி மலையில் அமைந்துள்ளது, குத்திரபாஞ்சான் அருவி. இதை ‘சின்ன குற்றாலம்’ என்று கொண்டாடுகிறார்கள் சுற்றுவட்டார மக்கள்.

தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப் பட்டபோது, குற்றாலம் அந்த மாவட்டத் துக்குச் சொந்தமாகிப்போனது. இதையடுத்து. நெல்லையின் முக்கிய அருவிகளில் ஒன்றான குத்திரபாஞ்சான் ‘சின்ன குற்றாலம்’ ஆகி விட்டது.

2K kids: குத்திரபாஞ்சான் அருவி! - நெல்லை மாவட்டத்தில் ஒரு மினி குற்றாலம்...

பருவமழையின்போது மட்டுமே இங்கு பெருமளவில் தண்ணீர் வரத்து இருக்கும். அருவியிலிருந்து வரும் தண்ணீர், கன்னிமார்கள் தோப்பு என்னும் தடுப்பணையைக் கடந்து அனுமன் நதி வழியாகப் பணகுடியைச் சார்ந்த பல்வேறு கிராமங்களை வந்தடையும். அருவியைவிட, தடுப்பணையில் அதிக மக்கள் குளிப்பது வழக்கம்.

15 ஆண்டுகளுக்கு முன்பு குத்திரபாஞ்சான் அருவி சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, சுற்றுவட்டார மாவட்டங்களி லிருந்து மட்டுமல்லாமல்... மதுரை, சென்னை, திருச்சி, கேரளாவில் இருந்தெல்லாம் மக்கள் அதிகம் வருவது வாடிக்கையாகிவிட்டது. இப்போது கொரோனா கால ஊரடங்கு தளர்வால் மீண்டும் மக்களின் வருகை அதிகரித்து வருகிறது.

2K kids: குத்திரபாஞ்சான் அருவி! - நெல்லை மாவட்டத்தில் ஒரு மினி குற்றாலம்...

கடந்த சில ஆண்டுகளாக சிறுத்தை, யானை, மிளா போன்ற விலங்குகள் சுற்றித் திரிவதால் குத்திரபாஞ்சான் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் மக்கள் தடுப்பணையான கன்னி மார்கள் தோப்புக்குச் செல்கின்றனர்.

அது வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தும் மக்கள் அங்கு துணி துவைப்பது, சமையல் செய்வது, மது அருந்துவது என்று அந்த இடத்தை அசுத்தமாக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது. மேலும், அவர்கள் சோப், ஷாம்பூ, உணவுப் பொருள்கள், மது பாட்டில்கள் போன்றவற்றை விட்டுச் செல்வ தால் அவ்விடம் சூழல் பாதிப்படைகிறது.

2K kids: குத்திரபாஞ்சான் அருவி! - நெல்லை மாவட்டத்தில் ஒரு மினி குற்றாலம்...

அவ்வப்போது வன அதிகாரிகள் சோதனை நடத்தினாலும் அதையும் மீறி அருவியைச் சிதைக்கின்றனர். அருவிக்கு குளிக்கச் செல்லும் எல்லோரும் அந்த இடத்தை அசுத்தப்படுத்துவ தில்லை. அருவியில் மது அருந்தும் சிலரால்தான் இங்கு வரும் மக்களுக்கும் சங்கடம் ஏற்படுகிறது. அந்த ஒரு சிலர்தான் சிந்திக்க வேண்டும். வனத்துறையினரும் தங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்.

பல மாவட்டங்களில் இருக்கும் மக்கள் இந்த அருவிக்காகப் பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து வருகிறார்கள்.

2K kids: குத்திரபாஞ்சான் அருவி! - நெல்லை மாவட்டத்தில் ஒரு மினி குற்றாலம்...

அருவி, கடல், மலை என இயற்கை பரிசளித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அதைச் சிதைக்காமல் பேணிக் காப்பது இந்த பூமிக்கு அவர்கள் சொல்லும் நன்றி. மேலும், பொது மக்களும் சுற்றுலா செல்லும் இடங்களில் பொறுப்புடன் நடந்துகொள்வது அவர்களின் கடமை.

சுற்றம் காப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism