Published:Updated:

``பாரம்பர்யத்தை மீட்டெடுத்திருக்கோம்!'’

லம்பாடி சமூக பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
லம்பாடி சமூக பெண்கள்

லம்பாடி இனப் பெண்களின் முயற்சியும் முன்னெடுப்பும்...

``பாரம்பர்யத்தை மீட்டெடுத்திருக்கோம்!'’

லம்பாடி இனப் பெண்களின் முயற்சியும் முன்னெடுப்பும்...

Published:Updated:
லம்பாடி சமூக பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
லம்பாடி சமூக பெண்கள்

லம்பாடி சமூக பெண்கள் தங்கள் ஆடை களை தாங்களே வடிவமைத்து, எம்ப்ராய்டரி செய்து கொள்வார்கள். காலமாற்றத்தில் லம்பாடி மக்களின் கைவேலைப்பாடுகள் அழியும் நிலைக்கு வந்துவிட்டன. இந்த நிலையில் ‘பொற்கை’ எனும் அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் தங்களின் கைவேலைப்பாடுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் லம்பாடி இனப் பெண்களான நீலாவும் கம்மியும்.

சென்னையில் பொற்கை அமைப்பின் சார் பாக நடந்த கைவினைப் பொருள்கள் கண் காட்சியில் கலந்துகொண்டு... நீலாவுடனும் கம்மியுடனும் பேசினோம்.

``நாலு தலைமுறையா தர்மபுரி மாவட்டம் சிட்லிங்கி கிராமத்துல இருக்கோம். எங்க தாத்தா, அப்பான்னு வீட்டு ஆம்பளைங்க விவசாய வேலைக்குப் போவாங்க. பொம் பளைங்க சிவப்புத் துணியில எம்ப்ராய்டரி பின்னுவாங்க. எனக்கு எட்டு வயசு இருக்கும்போது, எங்க அம்மா எனக்கும் எம்ப்ராய்டரி பின்னச் சொல்லிக் கொடுத் தாங்க. சிவப்பு கலர் மங்கல கரமானதுங்கிறது எங்க நம்பிக்கை. அதனால் எங்க பாரம்பர்ய உடுப்பு சிவப்பு கலர்லதான் இருக்கும். பாவாடை, ரவிக்கை, வயித்துக்கு மேலான ஜரிகை, கண்ணாடி வெச்சு தெச்ச முக்காடு செட்டு தான் எங்க பாரம்பர்ய உடுப்பு. குமரியா இருக்குறவரை நாங்களும் லம்பாடி உடுப்புதான் உடுத்துனோம். இப்போ மத்தவங்க மாதிரி சீல கட்ட ஆரம்பிச்சுட்டோம்” - ஏற்ற இறக்கங் களுடன் அழகிய தமிழில் பேசுகிறார் கம்மி.

``பாரம்பர்யத்தை மீட்டெடுத்திருக்கோம்!'’
``பாரம்பர்யத்தை மீட்டெடுத்திருக்கோம்!'’

பொற்கை உருவான கதையோடு பேச்சைத் தொடர் கிறார்கள் நீலாவும் கம்மியும்... ‘`எனக்கு 70 வயசு, கம்மிக்கு 75 வயசு. எங்க கிராமத்திலேயே எங்க ரெண்டு பேருக்குதான் லம்பாடி கைவினைக் கலைகள் அத்துப்படி. விவசாய வேலைக்குப் போயிட்டு இருந்தோம். அப்போதான் எங்க ஊருக்கு வைத்தியம் பார்க்க டாக்டர் லலிதாம்மா வந்தாங்க. எங்க ஊர்ல சில பெண்கள் லம்பாடி டிரஸ்ல இருந்ததைப் பார்த்துட்டு, ‘இந்தத் தையல் எல்லாம் வித்தியாசமா நேர்த்தியா இருக்கே... இதெல்லாம் உங்களுக்கு பண்ணத் தெரியுமா’னு கேட்டாங்க. எங்க அம்மாகிட்டருந்து நான் கத்துக்கிட்ட 40-க்கும் அதிகமான தையல்ல, 17 தையல்தான் அப்போ எனக்கு ஞாபகம் இருந்துச்சு. ‘இப்படியே விட்டா, இன்னும் கொஞ்ச நாள்ல இந்தக் கலை அழிஞ்சுரும். இதை நாம மீட்டெடுக்கணும்’னுங்கிற முதல் விதையை டாக்டரம்மாதான் எங்க மனசுல பதிய வெச்சாங்க.

லம்பாடி உடைகள்ல உள்ள தையல்களை சுடிதார், சேலை, ரவிக்கைகள்ல போடலாம்னு டாக்டரம்மா சொன்னாங்க. இது மூலமா எங்க சமூக பெண்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை உருவாக்க முடியும்னு நம்பிக்கை கொடுத்ததோடு, நிதியுதவியும் வாங்கிக் கொடுத்து 2006-ம் வருஷம் பொற்கை அமைப்பையும் ஆரம்பிச்சு வெச்சாங்க. நாங்க தைச்ச துணிகளை வெளியூர் கண்காட்சிகள்ல வெச்சு, அது மூலமா எங்களுக்கு வருமானம் வர்ற மாதிரி பண்ணாங்க டாக்டரம்மா'' என்று நீலா நிறுத்த, எம்ப்ராய்டரி செய்து கொண்டிருந்த கம்மி தொடர்கிறார்.

``பாரம்பர்யத்தை மீட்டெடுத்திருக்கோம்!'’
``பாரம்பர்யத்தை மீட்டெடுத்திருக்கோம்!'’
``பாரம்பர்யத்தை மீட்டெடுத்திருக்கோம்!'’

‘`பொற்கை அமைப்புல ரேவதி, என் பேத்தி சிந்து உட்பட 60-க்கும் மேலான லம்பாடி கைவினைக் கலைஞர்கள் இருக்காங்க. வீட்டு வேலை யெல்லாம் முடிச்சுட்டு காலையில் 10 மணிக்கு உட்கார்ந்தா ராத்திரி ஏழு மணி வரைக்கும் எம்ப் ராய்டரி பின்னுவோம். இந்த டிரஸ்ல இப்படித்தான் எம்ப் ராய்டரி டிசைன் வரணும்னு எந்த வரைமுறையும் வெச்சுக்க மாட்டோம். எல்லாம் மனக் கணக்குதான். இப்போ கலைஞர்கள் அதிகமானதால எங்க உற்பத்தியும் அதிகமாகி யிருக்கு. மக்களும் நாங்க எம்ப் ராய்டரி பண்ண துணிகளை வாங்க ஆரம்பிச்சாங்கன்னா எங்க பாரம்பர்யத்தை மீட்டெடுத்துடுவோம்...” கம்மி பேசி முடித்த போது, அவரின் கைகள் அழகான எம்ப்ராய்டரியை முடித்திருந்தன.

பொற்கை அமைப்பு உருவாகக் காரணமாக இருந்த மருத்துவர் லலிதாவிடம் பேசினோம்... ``நான் கேரளாவுலேருந்து சிட்லிங்கிக்கு மருத்துவம் பார்க்க வந்தேன். அந்த மக்களோட ஆடைகள் வித்தியாசமா இருக்கேன்னு விசாரிச்சப்போதான், லம்பாடி கலை பத்தி தெரிய வந்துச்சு. இந்த கைவினைக்கலை முழுவதுமா தெரிஞ்ச கம்மி அம்மாவுக்கும், நீலா அம்மாவுக்கும் இதோட முக்கியத் துவத்தைப் புரிய வெச்சேன்.

``பாரம்பர்யத்தை மீட்டெடுத்திருக்கோம்!'’
ரேவதி, நீலா, லலிதா, கம்மி, சிந்து
ரேவதி, நீலா, லலிதா, கம்மி, சிந்து

‘பொற்கை’ அமைப்பை ஆரம்பிச்சு, பெண்களுக்கான நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும்னு நம்பிக்கை கொடுத்து மத்த பெண்களையும் எம்ப்ராய்டரி கத்துக்க வெச்சேன். அவங்க டிசைன் பண்ற துணிகளுக்கு வெளியூர்ல நல்ல வரவேற்பு இருக்கு. நான் சிட்லிங்கி கிராமத்துக்கு மருத்துவம் பார்க்க வந்தபோது, சில பெண்கள் நோய் முற்றிய நிலையில வருவாங்க. காரணம் கேட்டா, காசு இல்லைனு சொல்லுவாங்க. அந்த நிலை இன்னிக்கு மாறியிருக்கு.

பெண்கள் எம்ப்ராய்டரி கலை மூலமா சுயமா சம்பாதிக்கிறாங்க. ஒரு கலையை மீட்டெடுத்திருக்கோம் என்ற திருப்தியைவிட, பல பெண்களின் வாழ்க்கையில சின்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதுல எங்களுக்குப் பெருமை” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism