Published:Updated:

மதுரை: ``ஓராண்டில் பயணிகளிடம் அபராதமாக ரூ.8.34 கோடி வசூல்!'' - ரயில்வே கோட்ட அதிகாரி தகவல்

மதுரை ரயில்வே கோட்டம் வழியாகச் செல்லும் ரயில்
News
மதுரை ரயில்வே கோட்டம் வழியாகச் செல்லும் ரயில்

மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் மொத்த வருவாய் 80 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

தென்னக ரயில்வேக்கு உட்பட்ட மதுரை ரயில்வே கோட்டத்தின் மொத்த வருவாய் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 80.67 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 2021-ம் ஆண்டில் இதே காலத்தில் பயணிகளின் வருமானம் ரூ.280.8 கோடியாக இருந்த நிலையில், 2022- ம் ஆண்டு 78 சதவிகிதம் அதிகரித்து, ரூ.502.05 கோடியாக உயர்ந்திருக்கிறது.

ரயில்
ரயில்

சரக்குப் போக்குவரத்திலும், மதுரை ரயில்வே கோட்டம் புதிய சாதனை படைத்திருக்கிறது. சரக்குகளைக் கையாள்வதிலும் முந்தைய ஆண்டைவிடவும் 27 சதவிகிதம் அதிக வருவாய் ஈட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டில் ரூ.191.44 கோடியாக இருந்த சரக்குப் போக்குவரத்து வருவாய், கடந்த 2022-ல் ரூ.242.6 கோடியாக உயர்ந்திருக்கிறது.

மதுரை ரயில்வே கோட்டத்தின் வழியாகச் செல்லும் ரயில்களில் 2021-ம் ஆண்டு 92 லட்சம் பயணிகள் பயணித்திருக்கின்றனர். அதுவே 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 2.41 கோடி பேர் பயணம் செய்திருக்கின்றனர். முந்தைய ஆண்டில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரூ 6.54 கோடி வசூலிக்கப்பட்டது.

மதுரை ரயில்வே கோட்டம் வழியாகச் செல்லும் ரயில்
மதுரை ரயில்வே கோட்டம் வழியாகச் செல்லும் ரயில்

கடந்த ஆண்டில் பயணச்சீட்டு இல்லாத பயணிகள், பயணிகளுக்கான ரயில்களில் சட்டவிரோதமாக வர்த்தகப் பயன்பாட்டுக்குரிய சரக்குகளைக் கொண்டு சென்றவர்கள், ரயிலில் புகைபிடித்தவர்கள், ரயில் நிலையத்தை அசுத்தப்படுத்தியவர்கள் என அனைவரிடமிருந்தும் ரூ.8.34 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், பயணிகள் ரயில்களில் 21,358 டன் சரக்குகளும், சரக்கு ரயில்களில் 22 லட்சம் டன் சரக்குகளும் கையாளப்பட்டிருப்பதாக மதுரை ரயில்வே கோட்டம் சார்பாக வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.