‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது அந்தக் காலம். ‘இணையம் மூலம் வேலையைத் தேடு; திரவியம் பெருக்கு’ என்பது இந்தக் காலம்.

ஃபேஸ்புக்போல லிங்க்டுஇன் (Linkedin) பலரை இணைக்கும் ஒரு தளம். ஆனால், இது தொழில்முறை சார்ந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த லிங்க்டுஇன் சேவை 2002-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. 2016-ம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின்கீழ் வந்தது. 15,000 பேர் வேலை பார்க்கும் இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவர் ஜெஃப் வெய்னர் (Jeff Weiner).

2019-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தத் தளத்தில் 150 நாடுகளைச் சேர்ந்த 63 கோடி பயனாளர்கள் இருக்கிறார்கள். வேலைக்கு ஆள் சேர்ப்பதற்கும், வேலை தேடுவதற்கும் லிங்க்டுஇன்தான் இன்று பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது; கைகொடுக்கிறது இதனாலேயே உலகின் பெரிய தொழில் சார்ந்த வலைதளமாக லிங்க்டுஇன் உயர்ந்திருக்கிறது. இதில் உங்கள் கணக்கைச் சரியாகக் கையாள்வது எப்படி, தனித்துவமாகத் தெரிவது எப்படி... பார்க்கலாமா?

புரொஃபைலை முழுவதுமாக நிரப்புங்க... ஸ்டார் ஆகுங்க!

நீங்கள் யார் என்பதை உணர்த்த, நிரூபிக்க இருக்கும் முதல் ஆயுதம் உங்கள் புரொஃபைல் (சுயவிவரக் குறிப்பு). அதில் உங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பதிவேற்றிய பிறகு, நீங்கள் தற்போது பார்க்கும் வேலை என்ன, முன்பு பார்த்த வேலைகள் என்னென்ன ஆகியவற்றைப் பதிவிட வேண்டும். உங்கள் புகைப்படத்தையும் அப்லோடு செய்ய வேண்டும்.

`அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதுபோல, உங்களைப் பற்றிப் பிறருக்கு முதலில் உணர்த்துவது உங்கள் புகைப்படம்தான். நல்ல புகைப்படக்காரரைவைத்து அண்மையில் எடுத்த உங்கள் புகைப்படத்தைப் பதிவிடுங்கள். புகைப்படம் அல்லாத புரொஃபைலைவிடப் புகைப்படத்துடன் இருப்பதைத்தான் அதிகம் பார்க்கிறார்கள். அந்தப் புகைப்படத்தை கேஷுவலாக இல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்து மிக முக்கியமானது, திறன். உங்களின் ஐந்து முக்கியத் திறன்கள் பற்றித் தெளிவாக எழுதுங்கள். கடைசியாக, உங்களைப் பற்றிய முழுமையான (Summary) விவரத்தைப் பதிவிடுங்கள். இதைத்தான் வேலைக்குத் தேர்வு செய்பவர்கள் உங்கள் புரொஃபைலைப் பார்க்கும்போது தெரிந்துகொள்ள நினைப்பார்கள் என்பதால், இதில் கூடுதல் கவனம் தேவை. நீங்கள் உங்கள் புரொஃபைலை முழுமையாகப் பூர்த்தி செய்வதன் மூலம் ஆரம்பநிலை, இன்டர் மீடியட் ஆகிய நிலைகளைத் தாண்டி ‘ஆல் ஸ்டார்’ என்ற அந்தஸ்தைப் பெற முடியும்.

குழுவில் உங்களைப் பற்றியும் உங்கள் தயாரிப்பு பற்றியும் தம்பட்டம் அடித்தால் குழுவிலிருந்து விலக்கப்படுவீர்கள்!

தொடர்புகளை விரிவுபடுத்துங்கள்!

லிங்க்டுஇன்-ல் உள்ள உங்கள் துறை சார்ந்த நபர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அப்படி உங்களுடன் இணைய விரும்புபவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு உங்கள் துறையில் நடக்கும் மாற்றங்களை உடனுக்குடன் அறிய உதவும்.

முதலில் குறைந்தது 50 பேருடனாவது லிங்க்டுஇன்-ல் இணையுங்கள். இப்படி நீங்கள் ஒருவரிடம் கனெக்ட் ஆவதால், அந்த நபரின் தோழர்களுடனும் நீங்கள் இணையும் வாய்ப்பு அதிகரிக்கும். இதை ‘செகண்டரி கனெக்ஷன்’ என்பார்கள். உங்கள் துறையில் தலைசிறந்தவர்களையும் ஃபாலோ செய்ய மறக்காதீர்கள். உங்கள் கரியர் உயர, தொடர்புகள் விரிவது முக்கியம் பாஸ்!

தொடர்புகளை ஏற்படுத்தியவுடன் அவற்றை மேம்படுத்துவது அவசியம். சின்ன சின்ன உரையாடல்களும் உங்கள் முன்னேற்றத்தில், தொழிலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். பிரீமியம் கட்டணதாரர் என்றால், மெயிலில் தொடர்புகொள்ளலாம். இதனால் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உங்கள் செய்திகள் போய்ச் சேரும்.

பாராட்டுங்கள், பாராட்டுகளைப் பெறுங்கள்!

தொழில் முறையில் உங்களைப் பற்றி தெரிந்தவர்களிடம், உங்கள் திறமைகளைப் பற்றியும் எழுதச் சொல்லுங்கள். உங்களுடன் பணிபுரிந்தவர்கள், உங்களைப் பற்றி எழுதும்போது உங்கள் புரொஃபைல் தனித்துவமாக இருக்கும்.

நீங்களும் மற்றவர்களைப் பாராட்டி எழுதுங்கள். உங்களைப் பற்றிய பரிந்துரைகள் உங்கள் திறமைக்குச் சான்று. உங்கள் திறன்களுக்கு சுமார் 5 முதல் 10 வரையான பரிந்துரைகளை உங்களுடன் வேலை பார்த்தவர் களிடமிருந்தும், நீங்கள் பணிபுரிந்த நிறுவனத்திடமிருந்தும் பெற்றுப் பதிவிடுங்கள்.

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை!

நீங்கள் உங்கள் துறை சார்ந்தவர் களோடு லிங்க்டுஇன்-ல் ஒரு குரூப் அமைக்கலாம் அல்லது ஏற்கெனவே இருக்கும் குழுக்களில் இணைந்து கொள்ளலாம். துறை சார்ந்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் பிறரின் கருத்துகளைத் தெரிந்துகொள்ளவும் இது உறுதுணையாக இருக்கும்.

இதன் மூலம் உங்கள் துறை சார்ந்த நபர்களின் தொடர்புகளையும் விரிவுபடுத்திக் கொள்வதால், உங்கள் கரியரோ, தொழிலோ முன்னேற்றம் அடைய உதவும். இப்படியான குரூப்களில் உங்கள் சந்தேகங்களைக் கேள்விகளாகக் கேட்டு, தெளிவு பெறலாம். இங்கு பெறக்கூடிய தகவல்கள், கருத்துகள், ஆதாரங்கள் மூலம் உங்களை நீங்களே மேம்படுத்திக்கொள்ளலாம்.

குழுவில் உங்களைப் பற்றியும் உங்கள் தயாரிப்பு பற்றியும் தம்பட்டம் அடித் தால் குழுவிலிருந்து விலக்கப் படுவீர்கள் அல்லது முடக்கப் படுவீர்கள். அதனால் சுய விளம்பரம் வேண்டாம் பாஸ்!

லிங்க்டுஇன் தொழில் சார்ந்த தளம் என்பதை மனதில்வைத்துச் செயல்பட வேண்டும். உங்கள் புரொஃபைல் பதிவுகள் அதைப் பிரதிபலிக்க வேண்டும்.

பதிவிடுவதற்கு முன் யோசியுங்கள்!

ஃபேஸ்புக்கில் பதிவிடுவது போல் போட்டோக்கள், வீடியோக்கள், லிங்குகள் என அனைத்தையும் பதிவு செய்யலாம். ஆனால், அது தொழில் தொடர்பான பதிவுகளாகவே இருக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் போடுவதுபோல உங்கள் தனிப்பட்ட படங்களைப் போடாமல் இருப்பது நல்லது. உங்கள் தொழில் சார்ந்த காட்சிகள், கட்டுரைகள், ஒளிப்படங்கள் ஆகியவற்றைப் பகிருங்கள். நீங்கள் ஒரு விஷயத்தைப் பதிவிடும்போது சரியான ஹாஷ்டேக்குகளையும் சேர்த்துப் பதிவிட்டால் உங்கள் பதிவு பலரைச் சென்றடையும்.

டூ இன் ஒன்

லிங்க்டுஇன்-ல் வேலைக்கு ஆட்களையும் தேடலாம்; உங்களுக்கு வேலையும் தேடலாம். இந்தத் தளம் மூலம் நீங்கள் வேலைக்கு எடுக்கப்போகும் நபரின் முழு விவரம், அவரின் திறமைகள் அனைத்தையுமே அறிய முடியும். நீங்கள் வேலை தேடுபவர் என்றால், வேலை தொடர்பான விளம்பரங்களைத் தேடி அவர்களைத் தொடர்புகொள்ள முடியும். உங்களுக்கு இரண்டு இடங்களிலிருந்து வேலைக்கான அழைப்பு வந்திருந்தால், அவற்றில் எந்த நிறுவனம் சிறந்தது என்பதை நீங்கள் முடிவு செய்ய லிங்க்டுஇன் உதவும்.

நிறுவனத்தின் புரொஃபைல்

உங்கள் நிறுவனத்தைப் பற்றி நீங்கள் என்ன பதிவுசெய்திருக்கிறீர்களோ அதுதான் உங்கள் நிறுவனத்தின் பிம்பம். பல லட்சம் பேர் பார்க்கப்போகும் புரொஃபைலை சரியான முறையில் வடிவமைக்க வேண்டியது அவசியம். உங்கள் நிறுவனத்தின் புரொஃபைலை மற்ற சமூக வலைதளக் கணக்குகளுடன் இணைத்தால் அது மேலும் பலரிடம் உங்கள் நிறுவனத்தை எடுத்துச் செல்லும். உங்கள் போட்டியாளர்கள் பற்றிய விவரம், புது சப்ளையர்கள், தகுதிவாய்ந்த பார்ட்னர்கள் போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் லிங்க்டுஇன் உதவும்.

வதந்திகளைப் பரப்பாதீர்!

லிங்க்டுஇன் மற்ற சமூக வலைதளங்கள் போல் அல்ல; தொழில் சார்ந்த தளம் என்பதை மனதில்வைத்துச் செயல்பட வேண்டும். உங்கள் புரொஃபைல் பதிவுகள் அதைப் பிரதிபலிக்க வேண்டும். அவை உங்களுக்கு நல்ல புகழைப் பெற்றுத் தரும். வதந்திகளைப் பரப்புவதையும், உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

லிங்க்டு இன்-ல் சாதாரண பயன்பாட்டுக்குக் கட்டணம் இல்லை. பிரீமியம் கரியர், பிரீமியம் பிசினஸ் என்றால் கட்டணம் உண்டு.

உங்கள் தொழில் மற்றும் வேலையில் நீங்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வாழ்த்துகள்!