Published:Updated:

‘கூகுள் பே’-யில் பணம் செலுத்தினால்... வீட்டுக்கே வரும் மதுபாட்டில்!

மதுபானக்கடை
பிரீமியம் ஸ்டோரி
மதுபானக்கடை

இது புதுச்சேரி புது டெக்னிக்

‘கூகுள் பே’-யில் பணம் செலுத்தினால்... வீட்டுக்கே வரும் மதுபாட்டில்!

இது புதுச்சேரி புது டெக்னிக்

Published:Updated:
மதுபானக்கடை
பிரீமியம் ஸ்டோரி
மதுபானக்கடை
``மதுபானத்துக்கு பெயர்பெற்ற புதுச்சேரியில், கொரோனா ஊரடங்கால் கள்ள மார்க்கெட்டில் மதுவிற்பனை பெருகியிருக்கிறது. மதுபாட்டில் வேண்டு மென்றால், சில புரோக்கர்களுக்கு ‘கூகுள் பே’-யில் பணம் செலுத்தினால் போதும்... நேரடியாக வீடு தேடி வருகிறது மது!’’ என்கிறார்கள் சில சமூகச் செயற்பாட்டாளர்கள்.

புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மதுக்கடைகள் மூடப்பட்டதும், ஐம்பது ரூபாய் விலையுள்ள மதுபாட்டில் நூறு ரூபாய்... நூறு ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில் 200 ரூபாய் என, கள்ளச்சந்தையில் மது விற்பனை ஜரூராக நடைபெற்றது. ‘குடி’மகன்கள், மதுபாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். இந்தச் சூழலில்தான், இரவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு சரக்குகள் எடுக்கப்படும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அனைத்து மதுக்கடைகளுக்கும் பார்களுக்கும் சீல் வைக்கப்பட்டதாகக் கூறியது கலால் துறை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“கலால் துறையின் அறிவிப்புக்குப் பிறகுதான் நிலைமை இன்னும் மோசமானது. அதன் பிறகு அதே பாட்டில்கள் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 400 ரூபாய் விலையுள்ள மதுபாட்டில் 2,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகளில் 90 சதவிகிதம், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்குச் சொந்தமானவை. மீதம் உள்ள 10 சதவிகிதமும் அவர்களின் பினாமிகளுடையது. இதனால், கள்ளச்சந்தையில் மது விற்பனை நடப்பதை தட்டிக்கேட்க ஆள் இல்லை.

‘கூகுள் பே’-யில் பணம் செலுத்தினால்... வீட்டுக்கே வரும் மதுபாட்டில்!

உள்ளூர் தாதாக்கள், அரசியல் புள்ளிகளின் அடிபொடிகள்தான் விற்பனை முகவர்களாகச் செயல்படு கின்றனர். ‘கூகுள் பே’ மூலம் பணம் செலுத்திவிட்டால் போதும்... இருசக்கர வாகனங்களில் வீட்டுக்கே வந்து டெலிவரி செய்துவிடுகின்றனர்” என்கின்றனர் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சட்டமன்றக் குழுவின் தலைவர் எம்.எல்.ஏ அன்பழகன், “ஐம்பது ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பாட்டிலை 500 ரூபாய்க்கு விற்கின்றனர். பெரும்பாலும் பாருக்கும் அதன் குடோனுக்கும் நான்கைந்து நுழைவாயில்கள் இருக்கும். ஒரு வாயிலை மட்டும் மூடிவிட்டு, ‘சீல் வைத்துவிட்டோம்’ என்கிறது கலால் துறை. இது ஒருபுறமிருக்க, ‘சீல் வைக்கப் போகிறோம்’ என்று இவர்கள் அறிவித்ததுமே, பார் மற்றும் குடோன்களில் இருந்த சரக்குகள் மொத்தத்தையும் பத்திரமாக வேறு இடத்துக்குக் கொண்டுசென்று பதுக்கிவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுபாட்டில் விற்பவர்களைக் கைதுசெய்யும் காவல்துறை, அவர்களை இயக்கும் பார் உரிமையாளர்களைக் கண்டுகொள்வதில்லை. இரு தினங்களுக்கு முன்பு கள்ளச்சந்தையில் மது விற்றதாக 800 மதுபாட்டில்களுடன் ஒரு கும்பலைக் கைதுசெய்தது ஓதியன்சாலை போலீஸ். ‘ஓதியன்சாலை காவல் நிலையத்துக்கு எதிரில் உள்ள பாரில்தான் மதுபாட்டில்களை வாங்கினோம்’ என்று கைதுசெய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத் துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட பார் லைசென்ஸ் ரத்துசெய்யப்படவில்லை. காவல்துறை மற்றும் கலால் துறையின் ஒத்துழைப்புடன் தான் சட்டவிரோத மது வியாபாரம் நடைபெறுகிறது. இதுகுறித்து கவர்னர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயண சாமிக்கும் மனு கொடுத்துள்ளேன்” என்றார்.

அன்பழகன் - லோகு அய்யப்பன்
அன்பழகன் - லோகு அய்யப்பன்

அன்பழகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் உள்ள மதுபாட்டில்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வுசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஆளுநர் கிரண் பேடி. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், முதற்கட்டமாக

14 மதுக்கடைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்துசெய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு அய்யப்பனிடம் பேசினோம். “ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும் இளைஞர்கள்கூட, குழந்தைகளின் அரைஞாண் கயிறு முதல் மனைவியின் தாலி வரை அடகுவைத்து மது அருந்துகின்றனர். கொரோனாவுக்காக சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர் களுக்கான அடையாள அட்டையை அணிந்து கொண்டு சிலர் மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்கின்றனர்” என்று அதிர்ச்சி கொடுத்தார்.

‘கூகுள் பே’-யில் பணம் செலுத்தினால்... வீட்டுக்கே வரும் மதுபாட்டில்!

இதுகுறித்து கலால் துறையின் துணை ஆணையர் தயாளனிடம் கேட்டோம். “இது தவறான குற்றச்சாட்டு. எங்களுக்கு வரும் புகாரின் அடிப்படையில் மது விற்பவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கிறோம். மதுபாட்டில் களை விற்ற கடைகளின் லைசென்ஸ் களையும் தற்காலிகமாக ரத்துசெய்திருக் கிறோம். தவிர, அனைத்து மதுக்கடை களுக்கும் குடோன்களுக்கும் சீல் வைத்திருக்கிறோம். அதற்கு முன்பே உள்ளே இருந்த சரக்குகளை அவர்கள் மறைத்துவைத்திருக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதையும் கண்காணித்து வருகிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism