Published:Updated:

#IndiaChinaFaceOff பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது அனைத்துக்கட்சிக் கூட்டம்! #Liveupdates

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( File Photo )

இந்திய, சீன ராணுவ வீரர்கள் மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடக்கும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

19 Jun 2020 5 PM

மோடி தலைமையில் தொடங்கியது அனைத்துக்கட்சிக் கூட்டம்!

இந்திய - சீன எல்லை விவகாரம் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் தற்போது காணொலிக்காட்சி மூலம் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
File Photo

இந்தக் கூட்டத்தில் லடாக் எல்லையில் நடந்தது குறித்தும், இந்தியாவின் பதில் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி அனைத்துக் கட்சிகளுக்கு எடுத்துரைப்பார் என்று கூறப்படுகிறது.

19 Jun 2020 2 PM

கல்வான் நதியில் அணைகட்டும் சீனா?

இந்திய சீன படைகளுக்கு இடையே மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மிக முக்கியமான பகுதி. இந்தப் பகுதியில் பாய்ந்தோடும் கல்வான் நதி தற்போது பிரச்னைக்குக் காரணமாக இருக்குமோ என்ற கருத்தும் நிலவுகிறது. காரணம், கல்வான் நதியின் நீரோட்டத்தைத் தடுத்து மாற்றும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளதாக சில சாட்டிலைட் படங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பெரும் இயந்திரங்களும் கட்டுமானப் பொருள்களையும் சீனா ராணுவம் அந்த நதியின் கரையில் குவித்து வைத்துள்ளது. மேலும், தண்ணீரின் ஓட்டத்தைத் தடுக்கும் முயற்சிகளையும் அது எடுத்து வருவது சாட்டிலைட் படத்தில் பதிவாகியுள்ளது.

கல்வான் நதியில் அணை கட்டும் சீனா?
கல்வான் நதியில் அணை கட்டும் சீனா?
AP

சீன ராணுவம் சார்பில் அந்தப் பகுதியில் அணை கட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. என்றாலும், சீனாவின் கல்வான் நதி தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பதிலளிக்க மறுத்துவிட்டார். சீன வீரர்கள் பலியானது தொடர்பான கேள்விகளையும் அமைச்சர் தவிர்த்துவிட்டார்.

19 Jun 2020 2 PM

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்!

இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லைப் பிரச்னை என்பது ஆண்டுகள் கடந்து தொடர் கதையாகி வருகிறது. என்றாலும் கடந்த 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் கடும் மோதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன. இந்தியத் தரப்பில் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 20 வீரர்கள் வீர அமரணமடைந்தனர். தொடர்ந்து இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகள் காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏன் இந்திய-சீன எல்லையில்  இத்தனை சலசலப்பு..? - ஒரு ஃப்ளாஷ்பேக் #MyVikatan
இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுகளும் ராஜாங்க முறையில் தீர்வு காணவும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி மூலமாகவும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இது ஒரு புறம் இருக்க, இந்தத் தாக்குதல் தொடர்பாக தினம் தினம் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சீன வீரர்கள் இந்திய வீரர்களை ஆணியடிக்கப்பட்ட இரும்புக்கம்பிகள் கொண்டு தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. அது தொடர்பான முழுத் தகவல் கீழே உள்ள லிங்கில் படிக்கலாம்.

`ஆணியடிக்கப்பட்ட இரும்புக் கம்பிகளால் தாக்குதல்?’- சீனாவுக்கு வலுக்கும் கண்டனம்
அடுத்த கட்டுரைக்கு