Published:Updated:

சுதந்திர தினம்: `சர்ஜிக்கல் ஸ்டிரைக் முதல் விரைவில் மிகப்பெரிய திட்டம் வரை..!’ பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( ANI )

நாட்டின் 75வது சுதந்திர தின விழா தொடர்பான செய்திகளின் தொகுப்பு...!

15 Aug 2021 9 AM

`எதிரிகளுக்கு ஒரு புதிய இந்தியாவின் தோற்றம் பற்றிய செய்தியை வழங்கியுள்ளோம்!’

மோடி, ``சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்துவதன் மூலம், நமது எதிரிகளுக்கு ஒரு புதிய இந்தியாவின் தோற்றம் பற்றிய செய்தியை வழங்கியுள்ளோம். இந்தியா கடுமையான முடிவுகளை எடுக்க முடியும் என்பதையும் இது உணர்த்துகிறது” என்றார்

15 Aug 2021 8 AM

`மொழிகள் தொடர்பாக தேவையற்ற விவாதங்கள் நடைபெறுகிறது’ - மோடி

பிரதமர் மோடி, ``நாட்டில் மொழிகள் தொடர்பாக தேவையற்ற விவாதங்கள் நடைபெறுகிறது. ஏழை தாயின் மகளோ மகனோ தாய் மொழியில் படித்தால் தான் நியாயம் கிடைக்கும்.

விளையாட்டு துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஒரு காலத்தில் விளையாட்டு வாழ்வின் முக்கிய பகுதியாக கருதப்படவில்லை. குழந்தைகள் தொடர்ந்து விளையாடினால் அவர்கள் வாழ்க்கையை கெடுத்துவிடுவார்கள் என்று பெற்றோர்கள் கூறினர். இப்போது, விளையாட்டு மற்றும் உடற்தகுதி பற்றிய விழிப்புணர்வு நாட்டிற்குள் வந்துவிட்டது. இந்த முறை ஒலிம்பிக்கில் நாங்கள் இதை அனுபவித்திருக்கிறோம்.

சுதந்திர தினம்:  `சர்ஜிக்கல் ஸ்டிரைக் முதல் விரைவில் மிகப்பெரிய திட்டம் வரை..!’ பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்

சுதந்திரத்தின் 100 ஆண்டுகளை நிறைவு செய்வதற்கு முன்பு இந்தியாவை ஆற்றல் சுதந்திர நாடாக மாற்றுவோம் என்று இன்று நாம் உறுதியளிக்க வேண்டும். இந்தியா மின்சார இயக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்ப்பாளராக மாறும் நோக்கத்துடன் இந்திய ரயில்வேயின் 100% மின்மயமாக்கலில் பணிகள் நடந்து வருகின்றன. இன்று, காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தேசிய ஹைட்ரஜன் மிஷனை அறிவிக்கிறேன். பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும்” என்றார்.

15 Aug 2021 8 AM

`பல தேவையற்ற சட்டங்கள் இதுவரை நீக்கப்பட்டுள்ளன!’ 

பிரதமர் மோடி, ``எங்கள் மந்திரம் 'சோட்டா கிசான் பானே தேஷ் கி ஷான்'. இது எங்கள் கனவு. வரவிருக்கும் ஆண்டுகளில், நாட்டின் சிறு விவசாயிகளின் கூட்டு வலிமையை மேலும் அதிகரிக்க வேண்டும், நாங்கள் அவர்களுக்கு புதிய வசதிகளை வழங்க வேண்டும். இன்று நாட்டின் 70 க்கும் மேற்பட்ட ரயில் பாதைகளில் 'கிசான் ரயில்' இயக்கப்படுகிறது.

வரவிருக்கும் நாட்களில், பிரதமர் கதி சக்தி திட்டத்தை நாங்கள் தொடங்குவோம், 100 லட்சம் கோடி தேசிய உள்கட்டமைப்பு மாஸ்டர் பிளான் இது முழுமையான உள்கட்டமைப்பிற்கு அடித்தளத்தை உருவாக்கி நமது பொருளாதாரத்திற்கு ஒருங்கிணைந்த பாதையை அளிக்கும்.

சுதந்திர தினம்:  `சர்ஜிக்கல் ஸ்டிரைக் முதல் விரைவில் மிகப்பெரிய திட்டம் வரை..!’ பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்

பெரிய மாற்றங்கள், பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர அரசியல் தேவை. இன்று, இந்தியாவில் அரசியல் விருப்பத்திற்கு பஞ்சமில்லை என்பதை உலகம் பார்க்கிறது. சீர்திருத்தங்களைக் கொண்டுவர நல்ல மற்றும் புத்திசாலித்தனமான நிர்வாகம் தேவை. இந்தியா எப்படி ஒரு புதிய நிர்வாக அத்தியாயத்தை எழுதுகிறது என்பதற்கு உலகமே சாட்சி. எங்கள் முன்னுரிமை, சேவைகள் கடைசி நபருக்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதாகும். தேசத்தின் சகல வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கையில் அரசு மற்றும் அரசு நடைமுறைகளின் தேவையற்ற குறுக்கீடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம். முன்னதாக, அரசு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தது. ஒருவேளை அது அந்த நேரத்தில் தேவைப்பட்டது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. தேவையற்ற சட்டங்கள், நடைமுறைகளின் வலையிலிருந்து மக்களை விடுவிக்க கடந்த 7 ஆண்டுகளில் முயற்சிகள் அதிகரித்துள்ளன. பல தேவையற்ற சட்டங்கள் இதுவரை நீக்கப்பட்டுள்ளன” என்றார் மோடி!

15 Aug 2021 8 AM

`மிகப் பெரிய திட்டம் கொண்டு வர இருக்கிறோம்!’

சுதந்திர தினம்:  `சர்ஜிக்கல் ஸ்டிரைக் முதல் விரைவில் மிகப்பெரிய திட்டம் வரை..!’ பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்

சுதந்திர தின விழாவில் உரையாற்றி வரும் பிரதமர் மோடி, `மிகப் பெரிய திட்டம் கொண்டு வர இருக்கிறோம்!’ என அறிவித்தார். ``விரைவில் புதிய மிகப்பெரிய திட்டத்தைல் கொண்டு வரப் போகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான தடைக்கற்களை தாண்டி செல்லும் மிகப்பெரிய திட்டம் ஒன்று வரப்போகிறது” என்றார் அதிரடியாக..!

15 Aug 2021 8 AM

``கிராமங்களில் டிஜிட்டல் தொழில் முனைவோர் தயாராகி வருகின்றனர்’

பிரதமர் மோடி பேசுகையில், ``இன்று நம் கிராமங்கள் வேகமாக மாறி வருவதைக் காண்கிறோம். கடந்த சில ஆண்டுகளில், சாலை மற்றும் மின்சாரம் போன்ற வசதிகள் கிராமங்களை சென்றடைந்தன. இன்று, ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் கிராமங்களுக்கு தரவு சக்தியை வழங்குகிறது, இணையம் அங்கு சென்றடைகிறது. கிராமங்களிலும் டிஜிட்டல் தொழில் முனைவோர் தயாராகி வருகின்றனர்.

வரும் ஆண்டுகளில், நாட்டின் சிறு விவசாயிகளின் கூட்டு சக்தியை அதிகரிக்க வேண்டும். நாம் அவர்களுக்கு புதிய வசதிகளை வழங்க வேண்டும். அவர்கள் நாட்டின் பெருமையாக மாற வேண்டும்” என்றார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ANI

தொடர்ந்து ``அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு, உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய கால தொழில்நுட்பம் ஆகியவற்றுக்காக நாம் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். இன்று நாட்டிலே உலக தரம் வாய்ந்த பொருட்கள் உற்பத்தி செய்கிறோம். ரயில்வே துறை வேகமால வளர்ச்சி அடைந்திருக்கிறது” என்றார்.

15 Aug 2021 8 AM

`ஜம்மு -காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன!’

பிரதமர் மோடி, ``கடந்த 7 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட பல திட்டங்களின் நன்மைகள் கோடிக்கணக்கான ஏழைகளின் வீட்டு வாசலை எட்டியுள்ளன. உஜ்வாலா முதல் ஆயுஷ்மான் பாரத் வரை, நாட்டின் ஏழைகளுக்கு அவர்களின் திட்டங்களின் பலம் தெரியும். இன்று, அரசாங்கத் திட்டங்கள் வேகமெடுத்துள்ளன. மேலும் அவற்றின் இலக்குகளை அடைகின்றன.

21 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் உயரங்களை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கு முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம். இதற்காக, நாம் பின்தங்கியிருக்கும் பகுதியின், கைகளைப் பிடிக்க வேண்டும். வளர்ச்சி உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். வடகிழக்கு பகுதி, இமயமலை பகுதி ஜம்மு காஷ்மீர், லடாக், கடலோரப் பகுதி மற்றும் பழங்குடிப் பகுதிகள் எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். ஜம்மு -காஷ்மீரில் எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டு, எதிர்காலத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஒருபுறம், லடாக் நவீன உள்கட்டமைப்பை உருவாக்kஇ வருகிறது. மறுபுறம் சிந்து மத்திய பல்கலைக்கழகம் லடாக்கை உயர்கல்வி மையமாக மாற்றும்.

சுதந்திர தின விழா
சுதந்திர தின விழா

அடிப்படை வசதிகள், பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பொதுப் பிரிவினரின் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றைக் கவனித்துக்கொள்வது முக்கியம். சமீபத்தில் மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், ஓபிசியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாநிலங்கள் தங்கள் சொந்த ஓபிசி பட்டியல்களை உருவாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது”

15 Aug 2021 7 AM

அனைத்து கிராமங்களுக்கும் சாலை!

பிரதமர் மோடி, ``டோக்கியோ ஒலிம்பிக்கில் எங்களை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் இன்று நம்மிடையே இருக்கிறார்கள். இன்று அவர்களின் சாதனையை பாராட்டும்படி நான் தேசத்தை கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் நம் இதயங்களை வென்றது மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினரை ஊக்குவித்தனர். தடகள போட்டியில் மகத்தான சாதனை செய்திருக்கிறோம்.

பிரிவினையின்போது இந்திய மக்கள் சந்தித்த வேதனை மற்றும் துன்பங்களை கெளரவிக்கும் வகையில் ஆகஸ்ட் 14 -ஐ Partition Horrors Remembrance Day ஆக அனுசரிக்க முடிவு செய்துள்ளோம். இன்றும் பிரிவினை காரணமாக ஏற்பட்ட வலியையும் வேதனையும் உணர்கிறேன்.

சுதந்திர தினம்:  `சர்ஜிக்கல் ஸ்டிரைக் முதல் விரைவில் மிகப்பெரிய திட்டம் வரை..!’ பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்

இந்தியர்கள் கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் மிகுந்த பொறுமையுடன் போராடினர். எங்களுக்கு பல சவால்கள் இருந்தன, ஆனால் நாங்கள் ஒவ்வொரு பகுதியிலும் அசாதாரண வேகத்தில் வேலை செய்தோம். இது நமது தொழிலதிபர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பலத்தின் விளைவாக, இன்று இந்தியா தடுப்பூசிகளுக்கு வேறு எந்த நாட்டையும் சார்ந்திருக்கத் தேவையில்லை. இன்று உலகிலே தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது” என்றார்

தொடர்ந்து பேசியவர், ``ஒவ்வொரு நாட்டினதும் வளர்ச்சி பயணத்தில் அந்த நாடு தன்னை ஒரு புதிய முடிவிலிருந்து வரையறுக்கும், புதிய தீர்மானங்களுடன் தன்னை முன்னெடுத்துச் செல்லும் நேரம் வருகிறது. இன்று, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் அந்த நேரம் வந்துவிட்டது. நாட்டில் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவோம். அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி. அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கு. இதுவே நமது நோக்கமாக இருக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கு ஆரோக்கியத்தை வழங்குவது அரசின் கடமை ஆகும்” என்றார்

15 Aug 2021 7 AM

பிரதமர் மோடி உரை: 

தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவர், ``சுதந்திர தினத்தின் இந்த சிறப்பான நிகழ்ச்சியில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது நமது சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூரும் நாள்.

இரதமர் மோடி
இரதமர் மோடி
ANI

கொரோனா காலத்தில், எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தடுப்பூசிகளை உருவாக்கும் விஞ்ஞானிகள், சேவை உணர்வுடன் பணியாற்றும் கோடிக்கணக்கான குடிமக்கள் -இந்த காலகட்டத்தில் மற்றவர்களுக்கு சேவை செய்ய ஒவ்வொரு கணத்தையும் அர்ப்பணித்தவர்கள், என அனைவரும் எங்கள் பாராட்டுக்கு உரியவர்கள்” என்றார்.

15 Aug 2021 7 AM

தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

சுதந்திர தினம்:  `சர்ஜிக்கல் ஸ்டிரைக் முதல் விரைவில் மிகப்பெரிய திட்டம் வரை..!’ பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். இன்றைய சுதந்திர தின விழாவில் அண்மையில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். தேசியக் கொடி ஏற்றிய பின்னர் இரண்டு ஹெலிகாப்டர்கள் மலர்கள் தூவி தேசியக் கொடிக்கு மரியாதை செய்தது

15 Aug 2021 7 AM

செங்கோட்டையில் பிரதமர் மோடி!

செங்கோட்டையில் பிரதமர் மோடி!
செங்கோட்டையில் பிரதமர் மோடி!
ANI

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் இன்னும் சற்று நேரத்தில் தேசியக் கொடியை ஏற்ற இருக்கிறார். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர் தற்போது செங்கோட்டைக்கு வந்திருக்கிறார்.

15 Aug 2021 7 AM

தயார் நிலையில் டெல்லி செங்கோட்டை!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் இன்னும் சற்று நேரத்தில் தேசியக் கொடியை ஏற்ற இருக்கிறார். சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றும்போது ஹெலிகாப்டரில் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமானப்படைக்கு சொந்தமான 2 MI17 ஹெலிகாப்டர்கள் வானில் இருந்தபடி மலர்தூவும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தேசியக் கொடியை ஏற்றும் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவது இதுவே முதல்முறை!

அடுத்த கட்டுரைக்கு