Published:Updated:

Live Updates: 72-வது குடியரசு தினம்: டெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர்

நாட்டின் 72-வது குடியரசு தின விழா தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!

26 Jan 2021 10 AM
26 Jan 2021 10 AM

தேசியக்கொடியுடன் பறக்கும் ஹெலிகாப்டர்கள்!

Live Updates: 72-வது குடியரசு தினம்: டெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!
26 Jan 2021 10 AM

டெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். முன்னதாக குடியரசுத் தலைவரை பிரதமர் மோடி வரவேற்றார்.

மோடி - ராம்நாத் கோவிந்த்
மோடி - ராம்நாத் கோவிந்த்

டெல்லியில் காலை முதலே பனிப்பொழிவு காரணமாக நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

Live Updates: 72-வது குடியரசு தினம்: டெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

அணிவகுப்பு மற்றும் அலங்கார ஊர்திகளின் தூரமும் குறைக்கப்பட்டிருந்தது. அணிவகுப்பில் முதன்முறையாக வங்கதேச ராணுவமும் பங்கேற்றிருக்கிறது.

26 Jan 2021 10 AM

போர் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி புதிய போர் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மௌன அஞ்சலியும் செலுத்தினார்.

26 Jan 2021 8 AM

ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருது!

ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருது!
ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருது!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் எல்லைப் பகுதியில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில், ராணுவ அதிகாரி உட்பட மூன்று வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனியும் ஒருவர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மத்திய அரசு சார்பில் வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

26 Jan 2021 8 AM

குடியரசு தின விழா பதக்கங்கள்! 

தமிழகத்தில் வீர தீரச் செயல்களைப் புரிந்த மூன்று பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர் பழனிசாமி, தொடர்ந்து சிறந்த காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.

26 Jan 2021 8 AM

நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சென்னை காமராஜர் சாலையிலுள்ள காந்தி சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழா! #HappyRepublicDay2021

நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழா! #HappyRepublicDay2021

Posted by Vikatan EMagazine on Monday, January 25, 2021
26 Jan 2021 8 AM

தேசியக்கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

நாட்டின் 72வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் தேசியக்கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார் ஆளுநர். நிகழ்ச்சியில் முப்படைகளின் சாதனை விளக்க அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

அடுத்த கட்டுரைக்கு