Published:Updated:

கரூர்: `தீபாவளிப் பரிசாக ஊதியம் குறைப்பா?' - கொந்தளிப்பில் பேரூராட்சி ஊழியர்கள்

கலந்தாய்வுக் கூட்டம்
கலந்தாய்வுக் கூட்டம்

`இந்த ஊதியக் குறைப்பு நடவடிக்கைதான், அரசு அவர்களுக்குத் தரும் தீபாவளிப் பரிசா?’ - பேரூராட்சிப் பணியாளர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

``பேரூராட்சிகளில் கடைநிலையில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்திருக்கிறார்கள். இந்த ஊதியக் குறைப்புதான், பேரூராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு தரும் பரிசா?" என்று ஊழியர்கள் வேதனையாகக் கேள்வி எழுப்புகிறார்கள்.

கலந்தாய்வுக் கூட்டம்
கலந்தாய்வுக் கூட்டம்
கரூர்: `தி.மு.க பிரமுகர் இறப்புக்கு காரணம் போலீஸ்தான்!’ - செந்தில் பாலாஜி ஆவேசம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட, தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர் சங்கத்தின் மாநில மையத்தின் கலந்தாய்வுக் கூட்டம், கரூரிலுள நகரத்தார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.பழனிவேல் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோர்
கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோர்

அதோடு இந்தக் கூட்டத்தில், டாஸ்மாக் பணியாளர்களின் சங்க மாநிலத் தலைவர் கு.சரவணன், பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வெ.சிவக்குமார், கரூர் மாவட்ட பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டப் பொறுப்பாளர் உதயக்குமார் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் என்று ஏராளமானோர் சமூக இடைவெளி விட்டும், முகக்கவசங்கள் அணிந்தும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், ``பேரூராட்சித்துறையில் பணியாற்றும் குடிநீர் திட்ட பணியாளர்களின் தர ஊதியம் 1,900-லிருந்து ரூ 1,300-ஆகக் குறைத்து கடந்த மாதம் 7-ம் தேதி சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரால் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதனால், பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ, 6,000 முதல் ரூ.7,000 வரை ஊதியக் குறைப்பு ஏற்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக ரத்துசெய்யக் கோரி வரும் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதுமுள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் முன்பாக, மாலை 5 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்பாட்டமும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பேட்டியளிக்கும் பாலசுப்ரமணியன்
பேட்டியளிக்கும் பாலசுப்ரமணியன்

அவர்களின் சம்பளம் இவ்வளவு குறைக்கப்பட்டால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இந்த ஊதியக் குறைப்பு நடவடிக்கைதான், அரசு அவர்களுக்குத் தரும் தீபாவளிப் பரிசா என பேரூராட்சிப் பணியாளர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் தமிழ்நாட்டிலுள்ள 528 பேரூராட்சிகளில், குடிநீர் திட்டத்தில் பணியாற்றும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், இயக்குநர் இந்தச் சம்பளக் குறைப்பு உத்தரவைத் திரும்ப பெற வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு