வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்துள்ள காங்குப்பம் கிராமத்தில், மகாதேவமலை கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் என்ற சாமியார்மீது சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. ஆரம்ப காலத்தில், பி.ஜே.பி பின்னணி கொண்டவராகப் பார்க்கப்பட்ட இந்த சாமியார், பின்னாளில் தன்னை ‘திராவிட சாமியார்’ என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். ஜடாமுடியுடன் உடல் முழுவதும் விபூதி மட்டுமே பூசிக்கொண்டு, இடுப்பில் ஒரு சிறிய துண்டை மட்டுமே கட்டியிருப்பவர், ஆண்டுக்கு ஒருமுறை, அதுவும் சித்திரை 1-ம் தேதியன்று மட்டுமே மில்க் பாத் எடுத்துக்கொள்கிறார். அப்போதுதான் இடுப்பில் கட்டியிருக்கும் துணியையும் மாற்றுகிறாராம். தினமும் ஜாதி மல்லிப் பூ அணிவதிலும் அவருக்கு அலாதிப் பிரியம். வாயைத் திறந்தால், வருவதெல்லாம் ஆபாசமான கெட்ட வார்த்தைகள்தானாம். அப்படி அவரிடம் திட்டு வாங்கிச் சென்ற பக்தர்களில் சிலர் செல்வந்தர்களாக உச்சம் தொட்டியிருக்கிறார்களாம். நந்தி மேல் அமர்ந்து காட்சியளிப்பதுதான் மகானந்த சாமியாருக்குப் பிடித்தமானது. மகாதேவமலை கோயில் அமைந்துள்ள காங்குப்பம் கிராமம், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பிறந்துவளர்ந்த ஊர். தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா, துரைமுருகனின் குடும்பம், டி.டி.வி.தினகரன் என பலத் தலைவர்களும் மகானந்த சாமியாரிடம் அடிக்கடி ஆசீர்வாதம் வாங்குவதும் வழக்கம்!

மதுரையைச் சேர்ந்தவர் அன்புராஜன் என்கிற ஊர்வசி. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாகத் தன்னை மாற்றிக்கொண்டவர், தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்திலும் உறுப்பினராக இருக்கிறார். இவர் திருநங்கையாக மாறியதால், இவருடன் பிறந்தவர்கள் குடும்பச் சொத்தை இவருக்குப் பிரித்துத்தர மறுத்திருக்கிறார்கள். வீட்டிலும் சேர்க்க வில்லை என்று கூறப்படுகிறது. பொதுவாக இது போன்ற சூழல்களில் திருநங்கை அல்லது திருநம்பியாக மாறுபவர்கள், மனம் நொந்து பேசாமல் திரும்பி வந்துவிடுவது வழக்கம். ஆனால், ஊர்வசி விடவில்லை. உசிலம்பட்டி ஆர்.டி.ஓ-விடம் இது குறித்துப் புகார் அளித்தார். இதையடுத்து, உறவினர்களை அழைத்துப் பேசிய ஆர்.டி.ஓ., ``சொத்தில் ஊர்வசிக்குரிய பங்கை வழங்க வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்று எச்சரித்திருக்கிறார். மூன்றாம் பாலினத்தவர் என்றாலும், அவருக்கும் சொத்தில் உரிமை உண்டு என்பதை நிரூபித்திருக்கிறது இந்தச் சம்பவம்.

கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் கிராமங்களில் வேலைவாய்ப்புகள் அருகிவிட்டன. விவசாயிகள், விவசாயக் கூலிகள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களுக்கும் உரம் வாங்க வேண்டும், குழந்தைகளின் ஸ்கூல் ஃபீஸ் கட்ட வேண்டும் என்று கவலையென்றால், முழுநேரக் குடிமகன்களுக்கு ‘எப்படித்தான் சரக்கடிப்பது?’ என்று கவலை. அதனால், தேனி மாவட்டம் வடபுதுபட்டி, ஊஞ்சாம்பட்டி, மதுராபுரி சுற்றுவட்டார கிராமங்களில் இவர்கள் புது டெக்னிக்கைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். தனக்குத் தோதான குடிமகன்களுடன் கூட்டணி அமைப்பவர்கள், விவசாய நிலங்களிலுள்ள மின் மோட்டார்களின் ஒயர்களை இரவு நேரங்களில் ஆட்டையைப் போட்டுவிடுகிறார்கள். ஒரு மீட்டர் ஒயரின் விலை சுமார் 100 ரூபாய். 20, 30 மீட்டர் வரை தேறும் ஒயர்களை வெட்டி எடுத்துக்கொண்டு போகிறவர்கள், அதை அவர்களின் காட்டில்வைத்தே எரித்து, உள்ளேயிருக்கும் காப்பரை எடை போட்டு ஆயிரம் ரூபாய் வரை தேற்றிவிடுகிறார்களாம்.

இது பற்றிப் பேசிய விவசாயி ஒருவர், “வேணும்னா தெனமும் ஒரு குவாட்டருகூட வாங்கிக் கொடுத்துடுறேன். ஒயரை வெட்டிட்டானுங்கன்னா ஒயர் காசு நஷ்டமாவறதோட, மோட்டாரைத் திரும்ப வெளியே எடுத்துத்தான் ஒயரிங் வேலை பார்க்க வேண்டியிருக்கு. ரொம்பச் செலவாகுது. எலெக்ட்ரீஷியனுங்களும் கிடைக்குறதில்லை. போலீஸ்கிட்ட புகார் கொடுத்தாலும் ‘ஒயர்தானே போச்சு... சரி விடுங்க’னு அனுப்பிடுறாங்க. கொஞ்சம் நாள் முன்னாடி வடபுதுபட்டி பஞ்சாயத்து மோட்டார்லகூட கைவெச்சுட்டானுங்க… அவனுங்களை ஒண்ணும் பண்ண முடியலை…” என்று புலம்பினார்.

நிவர் புயல் அச்சம் காரணமாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த குமார் என்கிற விவசாயி, முற்றிலுமாக வித்தியாசமாக யோசித்து, தனது வீட்டையே பத்திரப்படுத்தியிருக்கிறார். அவருக்குக் கிடைத்த பழைய அனுபவம் அப்படி... கடந்த ‘கஜா’ புயலின்போது குமாரின் வீட்டுச் சுவர்கள் பெயர்ந்து ஓடுகள் பறந்துபோய்விட்டன. `விரைவில் அரசாங்கம் வீட்டைப் புதுப்பித்துத் தரும்’ என்றார்கள் அதிகாரிகள். ம்ஹூம்... நடக்கவேயில்லை. இடையே நாடாளு மன்றத் தேர்தல் வந்தது. அப்போதும், “எங்களுக்கு ஓட்டைப் போடுங்க... உங்களுக்கும் ஓட்டைப் போடுவோம்” என்றெல்லாம் டைமிங் ரைமிங்காக வாயிலேயே வடை சுட்டார்கள் கரைவேட்டிக்காரர்கள். தேர்தல் முடிந்தும், ஓர் ஓடுகூட வரவில்லை. இவர்களை நம்பினால் வேலைக்காவது என்று சமீபத்தில், புதிதாக ஆயிரம் ஓடுகள் வாங்கி வீட்டைப் புதுப்பித்திருந்தார் குமார். இதோ இப்போது அடுத்த நிவர் புயல் அறிவிப்பும் வர... பதறிப்போனவர், மொத்த ஓடுகளையும் பிரித்து, பாதுகாப்பாகக் கீழே அடுக்கிவைத்துவிட்டு, புயலில் ஒருவழியாக ஓட்டையும் வீட்டை யும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்!