ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து மைசூரு செல்லும் வழியில், 27 கொண்டை ஊசி வளைவுகள்கொண்ட திம்பம் மலைப் பாதை இருக்கிறது. இந்த மலைப்பாதையில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள், அனுமதிக்கப்படக் கூடாத 14 மற்றும் 16 சக்கர லாரிகள் ஆகியவற்றை லஞ்சம் வாங்கிக்கொண்டு வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் அனுப்பிவிடுகிறார்கள். இத்தகைய வாகனங்கள் அதிக பாரத்தால் வளைவுகளில் திரும்ப முடியாமல் கவிழ்ந்துவிடுகின்றன. இப்படியான விபத்துகளின்போது, திம்பம் மலைப்பாதையில் ஐந்து முதல் எட்டு மணி நேரம் வரை டிராஃபிக் ஜாம் உண்டாகிறது. விபத்துகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் ஏற்படுவதால், சிறுத்தையும் புலியும் நடமாடும் காட்டில் தண்ணீர், சாப்பாடு என எதுவும் இல்லாமல், அவசரத்துக்கு ஒதுங்கக்கூட முடியாமல், பயணிகள் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள். கடந்த மாதம் மட்டும் திம்பம் மலைப்பாதையில், இப்படியான 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்திருக்கின்றன.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலிருக்கிறது ‘ஏழுமுறம்’ பகுதி. கேரளாவிலிருந்து அங்கு வந்து புதிதாகக் குடியேறிய தம்பதியர், குடியிருப்புகளுக்கு மத்தியில் ஒரு நிலத்தை வாங்கி, சுற்றிலும் மறைப்பை ஏற்படுத்தி புதிய கட்டுமானம் ஒன்றை எழுப்பிவந்தனர். திடீரென ஒருநாள் அவர்கள் கட்டிவந்த கட்டடத்தின் உச்சியில் கலசம் பொருத்தி, கும்பாபிஷேகம் நடத்தவே, சுற்றியுள்ள மக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். அதன் பின்னரே அந்தத் தம்பதியர் கட்டிவந்தது வீடு அல்ல, கோயில் என்பது தெரியவந்திருக்கிறது. அடுத்தடுத்த நாள்களில் மக்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. ‘‘கேரளாவுலருந்து அந்தக் கோயிலுக்கு யார் யாரோ வர்றாங்க. பரிகாரம்கிற பேர்ல தெனமும் ராத்திரி நேரங்கள்ல மர்ம பூஜைகளை நடத்தி, விசித்திரமான சத்தத்தை எழுப்புறாங்க. திடீர் திடீர்னு நடுராத்திரியில அழுகுரலும் கேக்குறது ரொம்ப அச்சமா இருக்குது. இதையெல்லாம்விட கொடுமையா, ‘உங்க நிலத்தைக் கோயிலுக்கு எழுதித் தாங்க’னு மிரட்டுறாங்க’’ என்று போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்திருக்கிறார்கள் அக்கம் பக்கத்திலுள்ள மக்கள். மாந்திரீகத் தம்பதியர் என மக்களால் குறிப்பிடப்படும் ஸ்ரீதர் - சுதாதேவி இருவரையும் விசாரித்த போலீஸார், ‘‘இனிமேல் இதுபோல் செய்யக் கூடாது’’ என்று எச்சரித்துச் சென்றிருக்கிறார்கள். இருப்பினும், மக்களிடம் இன்னும் அச்சம் விலகவில்லை!

`டாலர் சிட்டி’, `குட்டி ஜப்பான்’ என திருப்பூரின் புகழ் உலக அளவில் பேசப்பட்டாலும், உள்ளூரில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள் திருப்பூர் மக்கள். 10 லட்சம் மக்கள்தொகைகொண்ட திருப்பூர் மாநகராட்சியில், ஏழு நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 137 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்தும் முழு நகரத்துக்கும் தேவையான குடிநீர் கிடைப்பதில்லை. முறையான கட்டமைப்பு, பைப்லைன் வசதி இல்லாததே பிரச்னைக்குக் காரணம். தினமும் கூடுதலாக 280 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் மேட்டுப்பாளையத்திலிருந்து 4-வது திருப்பூர் குடிநீர்த் திட்டப் பணிகள் நடந்துவருகின்றன. வரும் 2022 செப்டம்பரில்தான் இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வருமாம். அதுவரை திருப்பூர் மக்கள் தண்ணீரைத் தங்கம்போல சேமித்துவைத்துதான் பயன்படுத்த வேண்டும்போல!