புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் கோயில்பத்தில் அமைந்திருக்கும் பழைமைவாய்ந்த ஆதிதிராவிட மாணவர் தங்கும் விடுதி, பல்வேறு அதிகாரிகளை உருவாக்கிய பெருமை வாய்ந்தது. மாரிமுத்து (எஸ்.பி), பன்னீர்செல்வம் (டெபுடி கலெக்டர்), வடிவேலு (கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட ஓய்வுபெற்ற அதிகாரிகளும், கொம்யூன் பஞ்சாயத்துகளில் தற்போது பணியாற்றும் ஐந்து கமிஷனர்களும் இங்கு தங்கிப் படித்தவர்கள்தான். தற்போது விடுதி பழுதடைந்து, சில ஆண்டுகளாகப் பூட்டிக்கிடக்கிறது. ‘‘அதை உடனடியாகத் திறந்து, மாணவர்கள் வாழ்வில் மீண்டும் வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும்’’ என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகிறார்கள். இந்தநிலையில், அந்த இடத்தில் கிளைச்சிறை அமைக்கலாம் என்று முடிவெடுத்து, அதிகாரிகள் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். ``மாணவர் விடுதியைக் கிளைச் சிறையாக மாற்றுவதற்கான திட்டத்தைக் கைவிட வேண்டும்’’ என்று பொதுமக்களோடு சேர்ந்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்துவருகின்றன.

நீலகிரியில் நிலவிவரும் கடும் குளிருக்கு இதமாக, மாவட்ட மக்கள் தீ மூட்டிக் குளிர்காய்வது வழக்கம். குன்னூரில் வசித்துவரும் கஜபதி குடும்பத்தினரும் இரவு நேரத்தில் தீ மூட்டிக் குளிர்காய்ந்திருக்கிறார்கள். மறுநாள் காலை, நீண்ட நேரமாகியும் அவர்களின் வீடு திறக்கப்படாமல் இருந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார்கள். விரைந்து வந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது, கஜபதி, அவரது மனைவி கலாவதி, மகன் மகேந்திரன் மூவரும் மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார்கள். குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கலாவதி உயிரிழக்க, மற்ற இருவரும் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். நடந்தது என்ன என விசாரித்தால், வீட்டுக்குள் தீ மூட்டிக் குளிர்காய வார்னிஷைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் எனத் தெரியவந்திருக்கிறது. ‘‘வீட்டுக்குள் தீ மூட்டிக் குளிர்காயும்போது வார்னிஷ், அடுப்புக்கரி போன்றவற்றைப் பயன்படுத்திக் குளிர்காய வேண்டாம். இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது’’ என போலீஸார் எச்சரிக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அங்குள்ள சண்டிகேஸ்வரர் சிலையின் கழுத்துப் பகுதி உடைந்துவிட்டது. இதனால், சண்டிகேஸ்வரர் சந்நிதி மூடப்பட்டது. அந்தச் சிலைக்கு பதிலாக, புதிய சிலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால், இன்னும் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. இது பற்றி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், ‘‘சென்னை ஆணையர் அலுவலகத்திலிருந்து இன்னும் உத்தரவு வரவில்லை” என்கிறார்கள். ‘‘சண்டிகேஸ்வரர் இல்லாமல் இருப்பது கோயிலின் சக்தியைக் குறைக்கும். இது ஊருக்கு நல்லதல்ல’’ என்று குமுறும் பக்தர்கள், ‘‘ஒரு சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான அனுமதிக்கு, ஓராண்டுக்கும் மேல் காத்திருந்தும் பதில் கிடைக்கவில்லை!’’ என்று கொதிக்கிறார்கள்.