Published:Updated:

லாக் - டெளன் கதைகள்!

லாக் - டெளன் கதைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
லாக் - டெளன் கதைகள்!

ஊரடங்கு முடிந்து மாஸ்க் கழற்றினால் என்ன செய்யுமோ எனத் தெரியவில்லை.

லாக் - டெளன் கதைகள்!

யூ டியூபைப்

பார்த்துப் பார்த்துச்

செய்த சமையலையெல்லாம்

ஃபேஸ்புக்கில்

பந்தி வைத்துப்

பரிமாறினாள் பவித்ரா..!

லைக்ஸ் அள்ளியது

போஸ்ட்டுக்கு..!

குடும்பமே கதறியது

நிஜ டேஸ்ட்டுக்கு…!

- பழ.அசோக்குமார்

லாக் - டெளன் கதைகள்!

“இப்பிடி லாக் டௌன் ஆகிக்கிடந்தா, எப்பிடி திருடிப் பிழைக்கிறது...” எனப் புலம்பினான் திருடன்.

- த.ஆறுமுகத்தாய்

லாக் - டெளன் கதைகள்!

டௌன் ஆரம்பிச்சு கொஞ்ச நாளா இந்தப் பக்கம் பறந்த பறவைக் கூட்டம் இன்னிக்கு திசை மாறி வேறு பக்கம் போனது. டோல் கேட் மீண்டும் திறக்கப்பட்டது.

- பா.ரமேஷ்

லாக் - டெளன் கதைகள்!

``அம்மா, பசிக்குது டீயும் பிஸ்கட்டும் குடும்மா’’ என்றான். அவள் கோபமாக ”அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடிதான்டா சாப்பாடு கொடுத்தேன். அதுக்குள்ள என்ன டா” என்றாள். “நான் அப்பவே கேட்டிருப்பேன். நீ காண்டாயா யிடுவன்னுதான் அஞ்சு நிமிஷம் கழிச்சி கேட்கிறேன்” என்றான் மகன்.

- தீப்தி

லாக் - டெளன் கதைகள்!

முதல் நாள் மாஸ்க்கோடு என்னைப் பார்த்துக் குரைத்த நாய் இன்று அமைதியாகப் படுத்திருக்கிறது. ஊரடங்கு முடிந்து மாஸ்க் கழற்றினால் என்ன செய்யுமோ எனத் தெரியவில்லை.

- மதன்

லாக் - டெளன் கதைகள்!

மூன்று மணி நேரம்

வியர்க்க விறுவிறுக்க…

மேக்கப் முடித்த

‘லாக்–டௌன்’ கால மணமகள்

லத்திகாஸ்ரீயை

வெளியில் அழைத்து வந்தனர்

ஃபேஸ் மாஸ்க்குடன்…!

- பழ.அசோக்குமார்

லாக் - டெளன் கதைகள்!

ர்க் ஃப்ரம் ஹோமில் லேப் டாப்பை ஆன் பண்ணிய போது, “ஆபீஸுக்குத்தான் தினம் லேட்டா வருவாய். ஒர்க் ஃப்ரம் ஹோமிலும் லாக் இன் பண்ண இவ்வளவு லேட்டா? இப்ப மணி என்ன?” என்று கேட்டு மானேஜர் மெசேஜில் இருந்தார்.

- அம்பை தேவா

லாக் - டெளன் கதைகள்!

டாக்டரின் பிணத்தைப் புதைக்க விடாமல் போராடி போலீஸ் தடியடியில் காயம்பட்டவனுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார் அரசு டாக்டர்!

- வி.சகிதாமுருகன்.

லாக் - டெளன் கதைகள்!

தூய்மைத் தொழிலாளி கதவைத் தட்டவும், ‘பணம் கேட்பாரோ’ என பயந்த சுந்தரம், ஜன்னல் வழியே பார்க்க, ‘உங்க வீட்டுக் குப்பையோடு வந்திருச்சுங்க!’ என்று சொல்லி, பணத்தோடு இருந்த பர்ஸை நீட்டினார்.

- கி.ரவிக்குமார்

லாக் - டெளன் கதைகள்!

முகக்கவசம் வாங்கக் கடை கடையாய் ஏறி, இறங்கி போலீஸிடம் பிரம்படி பட்டதும் வீட்டிலேயே மாஸ்க் தைக்கத் தொடங்கினான் கிஷோர். நாளடைவில் முகமூடிகள் விற்க ஆரம்பித்ததும், அது வெற்றிகரமான வியாபாரம் ஆகவும் திகைத்துப்போனான் கிஷோர்.

- மூ.மோகன், வேலூர்

லாக் - டெளன் கதைகள்!

வ்வொரு நாளும் தனிமையான கொடூரமான நாளே என்று பிறரிடம் கூறினாலும், மனதிற்குள், செலவுகள் பெரிதாக இல்லை என்று தன்னைத்தானே ஆறுதல்படுத்திக் கொண்டான் சூர்யா!

- ஆர் மணிவண்ணன்

லாக் - டெளன் கதைகள்!

‘கேட்ட காசை பேரம் பண்ணாம கொடுத்துடணும். பாவம் எவ்வளவு நாள் சவாரி, பணமில்லை’ என்று நினைத்து “ஆட்டோ, வர்றியா” என்ற மூதாட்டியிடம், “பாவம், டாக்டர் செக்அப் போகாம தவிக்குது, ஆஸ்பத்திரி தானே போவணும், நீங்க கொடுக்கிறதைக் கொடுங்கம்மா” என்றார் ஆட்டோக்காரர்.

- ரமா ஜெயராமன்

லாக் - டெளன் கதைகள்!

லாக் டௌன் முதல் நாள் : இந்த லாக்டௌனை நல்ல முறையில் பயன்படுத்தி, என் ஹெல்த்தைப் பாத்துக்கப் போறேன்.

இரண்டாம் நாள் : சில காரணங்களால், இன்று காலை நூடுல்ஸ் செய்யப்போகிறேன்...

- திவ்யா

லாக் - டெளன் கதைகள்!

னித்து வாழும் பிரம்மச்சாரியான சுந்தரத்தின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது... திறந்தார்.. `சார்... நேத்து நீங்க பார்சல் வாங்கிட்டு வந்த ஓட்டல் கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கு... அதனால உங்களைத் தனிமைப்படுத்திக்கணும்’ என்று, வந்திருந்த கூட்டத்தில் இருந்த அதிகாரி ஒருவர் சொன்னார்.

- வீ.விஷ்ணுகுமார்

லாக் - டெளன் கதைகள்!

“வெயிலையும் பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் சட்டையோடே இருந்தான் மணி. கட்டி அணைத்த குழந்தை காட்டிக்கொடுத்துவிட்டது போலீஸ் அடியை!”

- சிவம், திருச்சி

லாக் - டெளன் கதைகள்!

`என்ன பெரிய அணு விஞ்ஞானியோ ஒரு மிக்ஸிய ஒழுங்கா ரிப்பேர் பண்ணத் தெரியல’ என கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த விஞ்ஞானி கணவரை நொந்து கொண்டாள் மனைவி.

- கமலி

10 செகண்ட் குட்டிக்கதைகளை lockdownstories@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். அதிகபட்சம் 30 வார்த்தைகள்தான். பிரசுரமாகும் கதைகளுக்குத் தகுந்த பரிசு உண்டு.