Published:Updated:

ஏப்ரல் 20... ஊரடங்கு தளர்வு - ஏற்றமா இறக்கமா?

ஊரடங்கு
பிரீமியம் ஸ்டோரி
ஊரடங்கு

கொரோனா விஷயத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், என்ன மாதிரியான விளைவுகளை இந்தியா சந்தித்திருக்கும் என்பதை அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளின் வாயிலாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஏப்ரல் 20... ஊரடங்கு தளர்வு - ஏற்றமா இறக்கமா?

கொரோனா விஷயத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், என்ன மாதிரியான விளைவுகளை இந்தியா சந்தித்திருக்கும் என்பதை அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளின் வாயிலாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

Published:Updated:
ஊரடங்கு
பிரீமியம் ஸ்டோரி
ஊரடங்கு
கடந்த 25 நாள்களுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கும் இந்தியா, ஏப்ரல் 20-ம் தேதியை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அது, ஊரடங்கு தளர்வு அமலுக்கு வரவிருக்கும் நாள்.

இதை மனதில்கொண்டு பெட்டிக்கடை, டீக்கடை, மெக்கானிக்கடை, சிறுதொழில், குறுந்தொழில், பெரும்தொழில் என ஒரு பெரும் தொழிலாளர் கூட்டமே மீண்டும் தொழிலைத் தொடங்கும் நம்பிக்கையோடு அதற்கான வேலைகளைத் துவக்க ஆரம்பித்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையே, ‘ஊரடங்கு தளர்வு என்பது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. இன்னமும் கூட கொரோனா பரவலின் சமூகச் சங்கிலியை நாம் உடைத்தபாடில்லை. இந்நிலையில், இப்படி ஊரடங்கைத் தளர்த்தி னால், அமெரிக்க பாணியில் அது ஆபத்தாகக்கூட முடியலாம்’ என்று கவலைக்குரல்களும் கேட்கின்றன.

ஜோதி சிவஞானம்
ஜோதி சிவஞானம்

கொரோனா விஷயத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், என்ன மாதிரியான விளைவுகளை இந்தியா சந்தித்திருக்கும் என்பதை அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளின் வாயிலாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆக, 21 நாள்கள் ஊரடங்குதான் நம்மை இதுவரை காப்பாற்றியிருக்கிறது.

இந்நிலையில்தான், ‘கொரோனா பாதிப்பு குறைவாகவுள்ள பகுதிகளில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளை கொஞ்சம் தளர்த்தலாம்’ என அறிவித்துள்ளது மத்திய அரசு. பல்வேறு தொழில் பிரிவுகள் முழுமை யாகவும் பகுதியாகவும் திறக்கப்படும் எனத் தெரிகிறது.

இதை வைத்து, ‘‘முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போதே நம் மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அலட்சியம் காட்டிவரும் நிலையில், கட்டுப்பாடு களைத் தளர்த்தினால் நிலைமை மிகவும் மோசமாகக்கூடும். ‘ஊரடங்கு காரண மாக ஏழு லட்சம் கோடி ரூபாய் முதல் எட்டு லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்’ என அக்யூட் மதிப்பீடு மற்றும் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுக்கு இதுவும் ஒரு காரணம்’’ என்றும் கவலையோடு கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள் சிலர்.

இதைப்பற்றி பேசும் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம், ‘‘ஊரடங்கு தளர்வால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதேசமயம், மக்களுக்கான நிவாரணங் களையும் சலுகைகளையும் அளிக்க வேண்டும். பல நாடுகள், மக்களின் நலனைக் கருத்தில்கொண்டே ஊரடங்கை அமல்படுத்தியிருக்கின்றன. ஆனால், நம் அரசாங்கம் முன்பு அமல்படுத்திய முன்தயாரிப்பு இல்லாத ஊரடங்குதான் பிரச்னைக்கு வழிவகுத்துவிட்டது. இதனால்தான் மக்களின் வாழ்வாதாரத்தில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பலர் வேலையை இழந்துள்ளனர். மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் போதுமானதல்ல. நம் அரசாங்கம் இழப்பீடு பற்றியே பேசாமல் இருக்கிறது. மிகச்சிறிய தொகையை நிவாரணமாக வழங்குகிறது. இது பாதிக்கப்படும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா விஷயத்தில் மாபெரும் தவறு இழைத்துள்ள அமெரிக்கா அரசுகூட, தனது உள்நாட்டு உற்பத்தியி லிருந்து 11 சதவிகிதம் பணத்தை கொரோனா பாதிப்புக்குச் செலவழித்திருக் கிறது. நம் மத்திய அரசும் உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவிகிதப் பணமான சுமார் பத்து லட்சம் கோடி ரூபாயை எடுத்து மக்களுக்காகச் செலவு செய்ய வேண்டும்” என்றார்.

 நாகப்பன் - சித்ரா
நாகப்பன் - சித்ரா

பொருளாதார நிபுணர் நாகப்பனோ, ‘‘இந்தியப் பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருப்பதும் மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி போதுமானது இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து போராடுவதையும் மறுக்க முடியாது.

‘தொழிலதிபர்கள் நெருக்கடி கொடுப்பதால் தான் ஊரடங்கை அரசு தளர்த்துகிறது’ என்று சிலர் சொல்கிறார்கள். அது தவறு. முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா ஆகியோருக்கு இந்த ஊரடங்கால் பெரிய பாதிப்பு இல்லை. அவர்கள் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த ஊரடங்கால் குறு, சிறு தொழில் நிறுவனங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அடிமட்டத் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். ஊரடங்கை நீட்டித்தால் அவர்கள் நிலைதான் மேலும் மேலும் சிக்கலாகும். எனவேதான், ஊரடங்கு தளர்வை மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது. இது ஒரு நல்ல முடிவே. அதேசமயம், இந்தத் தளர்வால் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டுவிட முடியாது; மேலும் வீழ்ச்சியடையாமல் தடுக்க மட்டுமே முடியும்’’ என்கிறார்.

ஊரடங்கு
ஊரடங்கு

சரி... மருத்துவ நிபுணர்களின் கருத்து என்னவாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக தொற்று நோயியல் மருத்துவர் சித்ராவிடம் பேசியபோது, ‘‘பயப்பட வேண்டாம். அரசின் இந்தப் படிப்படியான தளர்வு, சரியான வழிமுறைதான். அதேசமயம் கூட்டமாகப் போகக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, நீங்கள் பாதுகாப்பாகத்தான் இருப்பீர்கள், கவலை வேண்டாம். ஊரடங்கைத் தளர்த்தும்போது, அறிகுறிகளே தெரியாத நோயாளிகள் ‘எசிம்ப்டமேட்டிக்’ (Asymptomatic) நோயாளிகள் நோயைப் பரப்புவதற்கான வாய்ப்புள்ளது எனப் பலரும் பயப்படுகின்றனர். இவர்களுக்கு மிதமான பாதிப்புதான் இருக்கும். அதை அவர்களின் உடலே சரிசெய்து, நோய்க்கு எதிரான ஆன்டி பாடியை உடலுக்கு ஏற்படுத்திவிடும். இதனால் 85 சதவிகித ‘எசிம்ப்டமேட்டிக்’ நோயாளிகள் நோயை தீவிரமாகப் பரப்பு வதில்லை. ஆகவே, அவர்களை நினைத்து பயப்பட வேண்டாம்.

இருப்பினும், ‘எசிம்ப்டமேட்டிக்’ நோயாளிகள் விஷயத்தில் அரசு கவனமாக இருக்க வேண்டும். இவர்களைக் கண்டறிய, ‘ரேண்டம் மாஸ் டெஸ்ட்டிங்’ தேவை. தவிர, நோயாளியுடன் தொடர்பில் இருந்தவரைக் கண்டறிந்து அவர்களைச் சோதிக்கும் ‘கான்டாக்ட் ட்ரேஸிங்’கில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்தால், ஊரடங்கு தளர்வால் நோய் பரவல் ஏற்படாது. நம்பிக்கையுடன் இருப்போம்” என்றார்.

இதற்கிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ‘‘தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இரண்டு, மூன்று நாள்களாக நோயின் தாக்கம், வீரியம் குறைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்படும்” என்று நம்பிக்கை அளித்துள்ளார். கணிசமான அளவுக்கு பரிசோதனைக் கருவிகள் வரத் தொடங்கிவிட்டன. பிளாஸ்மா சிகிச்சை உள்ளிட்ட விஷயங்கள் நம்பிக்கை அளிக்கின்றன.

ஊரடங்கு தளர்வு என்பது, பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் வகையில்தான் இருக்கப்போகிறது. அதேசமயம், கொரோனா ஆபத்து முழுமையாக நீங்கிவிடவில்லை. எனவே, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், தவிர்க்க முடியாமல் வெளியே செல்ல வேண்டியவர்களைத் தவிர, மற்றவர்கள் வெளியில் நடமாடுவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். நம் ஒவ்வொருவரின் உயிர் பாதுகாப்பில், நம்மைவிட வேறு யாரும் அதிக அக்கறை காட்டிவிட முடியாது!

வூஹான் எப்படித் தப்பியது?

சீனாவின் வூஹான்தான் கொரோனா வைரஸின் பிறப்பிடம். இந்த நகரில் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் வசிக்கிறார்கள். அவர்களில் 67,000 பேருக்கு கொரோனா தொற்றியது. 2,535 பேர் இறந்துபோனார்கள். பலியானோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கொரோனா பரவலை, தாமதமாகவே சீனா உணர்ந்தது. அவசர அவசரமாக, கடந்த ஜனவரி 23-ம் தேதி ஹூபே மாகாணம் மற்றும் வூஹான் நகரத்தை முற்றிலுமாக அடைத்தது.

சாலைகள் மூடப்பட்டன. பேருந்து, ரயில், விமானம், கப்பல் போக்குவரத்துக்குத் தடை, வீட்டிலிருந்து வாசலுக்கு வரக்கூடத் தடை என முற்றிலுமான முழு அடைப்பு அது. 76 நாள்கள் இது நீடித்தது. அதேசமயம் கொரோனாவுக்கு எதிரான போரில் அரசு இயந்திரங்கள் சுற்றிச்சுழன்றன. முடிந்தவரை அத்தியாவசியப் பொருள்கள வீடு தேடிச் சென்றன. அரசு சொன்னதை மக்கள் பின்பற்றினார்கள். விளைவாக கொரோனாவின் தொடர் சங்கிலி உடைக்கப்பட்டது. தொற்று கட்டுக்குள் வந்ததுடன், புதியதாக ஒருவருக்கும் தொற்று ஏற்படவில்லை. ஏப்ரல் 8-ம் தேதி இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது வூஹான்.

வழிகாட்டும் கேரளா!

இந்தியாவில் கொரோனா தொற்று தோன்றிய முதல் மாநிலம் கேரளா. அந்த நோயை வெற்றி கரமாக எதிர்கொண்ட மாநிலமும் அதுதான். ஆண்டுதோறும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் வந்துசெல்லும் மாநிலம். பெரும்பாலானோர் வெளிநாட்டில் வேலை செய்யக்கூடியவர்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் சீனாவில் படிக்கின்றனர். அதனால் கொரோனா வைரஸால் கேரளா நிலைகுலைந்துபோகும் என்று அச்சம் எழுந்தது. ஆனால், ஏப்ரல் 17 நிலவரப்படி, 394 பேர் மட்டுமே கேரளாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 245 பேர் குணமடைந்து சென்றுவிட, 147 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். 2 பேர் மட்டுமே உயிரிழந்திருக்கிறார்கள். வல்லரசு நாடுகளே கொரோனாவோடு மல்லுக்கட்ட முடியாமல் நிலைகுலைந்து நிற்கும் நிலையில் கேரளா எப்படிக் கட்டுப்படுத்தியது?

ஏப்ரல் 20... ஊரடங்கு தளர்வு - ஏற்றமா இறக்கமா?

ஒருங்கிணைந்த பணி. ஆளும் கட்சியுடன் அத்தனை எதிர்க்கட்சிகளும் கைகோத்து களத்தில் நின்றார்கள். முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாக வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினார்கள். மக்களும் அரசுக்கு முழுமையாக ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். மத்திய அரசு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பாகவே கேரளா விழித்துக்கொண்டு செயலில் இறங்கிவிட்டது. அதேபோல மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே 20,000 கோடி ரூபாய் மதிப்பில் நிவாரணம் அறிவித்தார் கேரள முதல்வர். தேவையான பொருள்கள் கிடைத்தன. செய்திகள் வெளிப்படையாகத் தரப்பட்டன.

சுகாதாரப் பணியாளர்கள்தான் கதாநாயகர்கள். உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, கிருமி நாசினி செலுத்தி, அறிகுறி தெரிந்தவர்களை தனிமைப் படுத்தினார்கள். சுகாதாரத்துறை போர்க்கால வேகத்தில் பணியாற்றியது. மருத்துவர்களுக்கான முகக்கவசங்கள், பரிசோதனை சாதனங்கள், பாதுகாப்பு உடைகள், சிகிச்சைக்கான மருந்துகள் என அனைத்தும் தயார்நிலையில் இருந்தன.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்ட கேரளா, வெகு விரைவிலேயே கொரோனாவை வென்று இயல்புநிலைக்குத் திரும்பி விடும் என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism