Published:Updated:

`லாக்டெளன் என் குழந்தைப் பருவத்தில் வந்திருந்தால்..!’ - வேதனைப்பட்ட `ஃப்ளிப்கார்ட்' சச்சின் பன்சால்

சச்சின் பன்சால்
சச்சின் பன்சால்

`என்னுடைய குழந்தைப் பருவத்தில் லாக்டெளன் இருந்திருந்தால் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது' என ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான சச்சின் பன்சால் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி லாக்டெளன் மீண்டும் இருக்கும் என்றும் ஆனால், அது முற்றிலும் வேறுபட்ட வடிவில் இருக்கும் என்றார். மே 18-ம் தேதிக்கு முன்னர் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றார்.

`என்னுடைய குழந்தைப் பருவத்தில் லாக்டெளன் இருந்திருந்தால் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது' என ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான சச்சின் பன்சால் கூறியுள்ளார்.

லாக்டெளன்
லாக்டெளன்

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எழுபதாயிரத்தை கடந்துவிட்டது. இந்தியாவில் லாக்டெளன் கொண்டுவந்ததால்தான் நாம் குறைவான எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறோம் என நிபுணர்கள் கூறுகின்றனர். லாக்டெளன் காலத்தில் வணிக வளாகங்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புகள் இல்லாமல் மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

`லாக்டெளன் 4.0 உண்டு.. ஆனால், அது முற்றிலும் மாறுபட்டது!'- பிரதமர் மோடி அறிவிப்பு

இந்த நிலையில் லாக்டெளன் குறித்து சச்சின் பன்சால் தன் ட்விட்டர் பதிவில், ``என்னுடைய குழந்தைப் பருவத்தில் இந்த லாக்டெளன் இருந்திருந்தால் என் தந்தை அவரது சிறுதொழிலில் தோல்வியடைந்திருப்பார். நான் நடுத்தர குடும்பச் சூழலில் இல்லாமல் ஏழ்மையில் வளர்ந்திருப்பேன். அந்தச் சூழல் இல்லையென்றால் நான் செய்தவற்றில் ஒரு பகுதியைக்கூட என்னால் செய்திருக்க முடியாது. லட்சக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையில் இன்று உண்மையில் இதுதான் நடக்கிறது” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

மோடி
மோடி

`` கொரோனா இன்னும் சில காலம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது. அதனுடன்தான் நாம் வாழ வேண்டும். முகமூடிகளை அணிந்துகொள்வோம். தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவோம். ஆனால், நம் கனவுகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது. லாக்டெளன் 4 முற்றிலும் வேறுபட்ட விதிகளுடன் இருக்கும். இது மாநிலங்களின் பரிந்துரையின் அடிப்படையில் இருக்கும். மே 18 தேதிக்கு முன்னர் இது அறிவிக்கப்படும். விதிகளைப் பின்பற்றி கொரோனாவை எதிர்த்துப் போராடி முன்னேறுவோம்” என நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நேற்று உரையாடினார்.

அடுத்த கட்டுரைக்கு