Published:Updated:

`திருவல்லிக்கேணி'-க்கு `ட்ரிப்ளிகேன்' எப்படி நியாயமாகும்? - மாஃபா பாண்டியராஜன் பேட்டி

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

திருவல்லிக்கேணி' என்ற தமிழ் உச்சரிப்பிலேயே ஆங்கிலத்திலும் படித்து அறிந்துகொள்வதுதானே ஒரு தமிழனுக்குப் பெருமையாகவும், தமிழ் மொழிக்கான வளர்ச்சியாகவும் இருக்க முடியும்

"தமிழ் உச்சரிப்பின்படி பெயர் மாற்றம் செய்வதால் மட்டும் தமிழ் மொழிக்குப் பெரிதாக என்ன வளர்ச்சி கிடைத்துவிடப் போகிறது?''

"ஓர் ஊருக்கு இரண்டு பெயர்கள் இருப்பது எந்தவிதத்தில் நியாயம்... உதாரணமாக, `திருவல்லிக்கேணி' என்ற ஊருக்கு, 'ட்ரிப்ளிகேன்' என்ற ஆங்கிலப் பெயர் எப்படி நியாயமாகும்? `திருவல்லிக்கேணி' என்ற தமிழ் உச்சரிப்பிலேயே ஆங்கிலத்திலும் படித்து அறிந்துகொள்வதுதானே ஒரு தமிழனுக்குப் பெருமையாகவும், தமிழ் மொழிக்கான வளர்ச்சியாகவும் இருக்க முடியும்!

மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களின் உச்சரிப்புகளில்தான் ஆங்கில மொழித் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் 1967-லிருந்தே பல்வேறு அமைப்புகளும் 'ஊரின் பெயர்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்' என்று முயன்றன. கடந்த காலங்களில் அரசுத் தரப்பிலிருந்தே ஆறு முறை இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் 'இந்தப் பெயர் மாற்றம் என்பது பதிவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட மற்ற துறைகளுக்கு கூடுதல் பணிச் சுமையாகவே இருக்கும்.

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

உதாரணமாக, நெடுஞ்சாலைத் துறையினர், மைல் கற்களிலிருந்தே இந்தப் பெயர் மாற்றப் பணிகளையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்ற காரணத்தால், இந்தப் பணிகள் இடையிலேயே கைவிடப்பட்டுள்ளன. 'எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்; என்றும் தமிழ்' என்ற எங்கள் கொள்கையின் அடிப்படையில் நாங்கள் இதைச் செயல்படுத்தியிருக்கிறோம்.''

"வேற்று மொழியில் அமைந்துள்ள ஊர்ப் பெயர்களையும் அப்படியே தமிழ்ப்படுத்தியிருப்பது எவ்வாறு சரியாகும்?"

"தமிழ் மொழியிலுள்ள ஆங்கில மொழி ஊடுருவலை மாற்றுவதுதான் இப்போதைய முதல் பணி. மற்றபடி தெலுங்கு, கன்னடம், மலையாளம், சம்ஸ்கிருதம், உருது ஆகிய ஐந்து மொழிகளின் தாக்கமும் நிறைய ஊர்ப் பெயர்களில் இருக்கிறது. 'இவற்றையெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாக மாற்ற வேண்டும்' என்று இந்தப் பணியின் ஆரம்பத்திலேயே ஒரு குழு பெரிதும் முயன்றது. ஆனால், இப்படி மொழி மாற்றம் செய்யும்போது கூடுதலாகப் பல்வேறு பிரச்னைகள் எழ ஆரம்பித்தன. ஏற்கெனவே இந்த முயற்சி ஆறு முறை தடைப்பட்டுப் போனதற்கு இதுபோன்ற சிக்கல்களும் ஒரு காரணம்.

ஜூ.வி-யில் வாசிக்க க்ளிக் செய்க > "வாழ்த்துகளும் வசவுகளும் எனக்குத்தான்!" - மனம் திறக்கும் மாஃபா பாண்டியராஜன் https://bit.ly/2VgimAa

ஆக, எங்கள் நோக்கத்தையே சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் இந்த மொழி மாற்றப் பிரச்னையையே தள்ளிவைத்துவிட்டோம். இப்போதும்கூட இந்தப் பணி ஆறு மாத காலம் தாமதமானதற்கு இதுவும் ஒரு காரணம்தான்.''

"பாண்டியராஜன் என்ற தங்கள் பெயரையே இனி நீங்கள், 'Paandiya Raajan' என்றுதானே எழுத வேண்டும்?''

"ஆமாம்... இப்போது நாம் தமிழ்ப்படுத்தியிருக்கும் விதத்தில் பார்க்கப்போனால் அப்படித்தான் எழுத வேண்டும். ஆனால், இது என் அப்பா எனக்கு வைத்த பெயர். எனவே, பள்ளிக்கூடத்தில் ஆரம்பித்து இப்போதுவரை என் பெயர் எப்படி இருக்கிறதோ அப்படியே தொடருவதில்தான் எனக்கு விருப்பம். மாற்ற விருப்பம் இல்லை!''

- கொரோனா பதற்றத்துக்கு மத்தியிலும் பெரும் கவனம் குவித்தது ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றப்பட்ட விவகாரம்.

ஆங்கில உச்சரிப்பில் இருந்துவந்த 1,018 ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றபடி மாற்றியமைத்து தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட அரசாணைக்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் ஒருசேர குவிந்துகொண்டிருந்த நிலையில், திடீரென அந்தர் பல்டி அடித்து அரசாணையை வாபஸ் பெற்றுள்ளது தமிழ் வளர்ச்சித்துறை. இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறையின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் பேசினோம்...

> "பெயர் மாற்ற அரசாணை திடீர் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, நீங்கள் 'பல்டி' அடித்துவிட்டதாக விமர்சனம் வைக்கப்படுகிறதே..?''

> "அரசாணை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவரும் முன்னரே ஊடகங்களுக்கு இதன் விவரங்கள் கிடைத்தது எப்படி?''

> "பல்வேறு குழப்பங்கள், தவறுகளுடன் வெளியான இந்தப் பெயர்ப் பட்டியல், இந்தப் பணியிலுள்ள அலட்சியத்தைத்தானே காட்டுகிறது?''

> "மருவிப்போன ஊர்ப் பெயர்களை அதன் வேர்ச்சொல்லிலிருந்து மீட்டெடுக்காமல், உள்ளபடியே தமிழ்ப்படுத்தியிருப்பது எப்படி தமிழ் மொழிக்கான வளர்ச்சியாக இருக்க முடியும்?''

> "நாடு முழுக்கவே `பண்பாட்டு மீட்சி' என்ற பெயரில் நடைபெற்றுவரும் மதரீதியிலான கட்டமைப்பின் பின்னணியிலேயே 'தமிழ்ப்படுத்துதல்' முயற்சியும் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?''

- இந்தக் கேள்விகளுக்கு அவர் அளித்த விரிவான பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஜூ.வி-யில் வாசிக்க க்ளிக் செய்க > "வாழ்த்துகளும் வசவுகளும் எனக்குத்தான்!" - மனம் திறக்கும் மாஃபா பாண்டியராஜன் https://bit.ly/2VgimAa

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு