Published:Updated:

ஸ்டெர்லைட்டுக்குத் தடை! - மக்களின் மகிழ்ச்சி நீடிக்குமா?

ஸ்டெர்லைட்டுக்குத் தடை
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டெர்லைட்டுக்குத் தடை

இந்த வழக்கில் தமிழக அரசு வலுவான வாதங்களை முன்வைத்ததா, ஆலைத்தரப்பில் மேல்முறையீட்டுக்குச் சென்றால் தமிழக அரசின் பக்கமிருக்கும் வலுவற்ற அம்சங்கள் எவை?

ஸ்டெர்லைட்டுக்குத் தடை! - மக்களின் மகிழ்ச்சி நீடிக்குமா?

இந்த வழக்கில் தமிழக அரசு வலுவான வாதங்களை முன்வைத்ததா, ஆலைத்தரப்பில் மேல்முறையீட்டுக்குச் சென்றால் தமிழக அரசின் பக்கமிருக்கும் வலுவற்ற அம்சங்கள் எவை?

Published:Updated:
ஸ்டெர்லைட்டுக்குத் தடை
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டெர்லைட்டுக்குத் தடை
‘ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனுமதி இல்லை. தமிழக அரசின் உத்தரவே தொடரும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தூத்துக்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும், ஆலைத் தரப்பு மேல்முறையீடு செய்யவிருப்பதால் மக்களின் இந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018, மே 22-ம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் 100-வது நாள் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்தனர். மே 28-ம் தேதி ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து ஆலைத்தரப்பில் பசுமை தீர்ப்பாயத்துக்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆலையைத் திறக்க உத்தரவிட்டது தீர்ப்பாயம். இதை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்துசெய்த உச்ச நீதிமன்றம், ‘இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும்’ என்றது. அதன்படி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தற்போது ஆலையைத் திறப்பதற்கு அனுமதி மறுத்துள்ளது.

ஸ்டெர்லைட்டுக்குத் தடை! - மக்களின் மகிழ்ச்சி நீடிக்குமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இந்த வழக்கில் தமிழக அரசு வலுவான வாதங்களை முன்வைத்ததா, ஆலைத்தரப்பில் மேல்முறையீட்டுக்குச் சென்றால் தமிழக அரசின் பக்கமிருக்கும் வலுவற்ற அம்சங்கள் எவை?” என்று மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும், மூத்த வழக்கறிஞருமான ஹென்றி டிஃபேனிடம் கேட்டோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தமிழக அரசு பிறப்பித்த அனைத்து ஆணைகளையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது உயர் நீதிமன்றம். ஆலைத்தரப்பு தாக்கல் செய்த பத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது. இன்னொரு பக்கம் தமிழக அரசு முன்வைத்த வாதங்களைவிட, ஆலையின் எதிர் மனுதாரர்களான ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஃபாத்திமா பாபு, சி.பி.எம்., மக்கள் அதிகாரம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் வைத்த வாதங்கள் வலுவாக இருந்தன.

ஸ்டெர்லைட்டுக்குத் தடை! - மக்களின் மகிழ்ச்சி நீடிக்குமா?

அதேசமயம், கடந்த சில ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட புகை மாசு, நிலத்தடி நீர் பாதிப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடு இவற்றையெல்லாம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முறையாக ஆய்வுசெய்யவில்லை. மக்கள் 100 நாள்கள் போராடியும் அரசுத் தரப்பில் யாருமே பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில், ‘துப்பாக்கிச்சூட்டால் அதிருப்தியிலுள்ள மக்களை திருப்திப்படுத்தவே ஆலையை அவசரமாக மூடினார்கள். துப்பாக்கிச்சூட்டுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்றும் ஆலைத்தரப்பில் வாதிட்டார்கள். இதை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

என்றாலும், மேல்முறையீட்டில் ‘100 நாள்களாக தமிழக அரசு ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை?’, ‘மாசு கட்டுப்பாடு வாரியம் ஏன் முறையாக ஆய்வு செய்யவில்லை?’ ஆகிய கேள்விகள் அரசுத் தரப்பை நோக்கிப் பாயலாம். இவையெல்லாம் இந்த வழக்கின் பலவீனமான அம்சங்கள். எனவே, குறைகளை தமிழக அரசு சரி செய்துகொள்ள வேண்டும்” என்றார் அழுத்தமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கு விசாரணையின்போது ஸ்டெர்லைட் ஆலைக்காக வாதாடிய வழக்கறிஞர், ‘போராட்டக்காரர்கள் ஆலை ஊழியர்களின் குடியிருப்பிலிருந்த வாகனங்களைச் சேதப்படுத்தினர். அதன் மதிப்பு 17 கோடி ரூபாய். அதன் பிறகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’ என்ற வாதத்தை முன்வைத்தார். இது குறித்துப் பேசிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், “இந்தக் கருத்து மனிதத்தன்மையற்றது. அதனால்தான் இதை நீதிபதிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. துப்பாக்கிச்சூடு நடந்த பிறகே ஆலை ஊழியர்களின் குடியிருப்பில் வாகனங்கள் எரிந்தன. ஆலைத்தரப்பேகூட இதைச் செய்திருக்கலாம். அப்படியே மக்கள் சேதப்படுத்தியிருந்தாலும், சொத்துகளைச் சேதப்படுத்தியவர்களைச் சுட்டுக் கொல்லலாம் என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை” என்றார் ஆத்திரத்துடன்!

ஹென்றி டிஃபேன், ஃபாத்திமா பாபு, வாஞ்சிநாதன், பங்கஜ் குமார்
ஹென்றி டிஃபேன், ஃபாத்திமா பாபு, வாஞ்சிநாதன், பங்கஜ் குமார்

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் பேசினோம். “நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது. காக்கைகளைப்போல் சுட்டு வீழ்த்தப்பட்ட எங்கள் உறவுகளின் இறப்புக்குக் கிடைத்த நீதி இது” என்றார்கள்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான பங்கஜ் குமார், “இந்தத் தீர்ப்பால் ஆலையை நம்பியுள்ள ஒரு லட்சம் குடும்பத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர். தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்றார்.

நிரந்தர நீதிக்காகக் காத்திருக்கிறார்கள் மக்கள்!

அருணா ஜெகதீசன் ஆணையம் செலவு சுமார் 2 கோடி ரூபாய்!

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிப்பதற்காக, சம்பவம் நடந்த மறுநாளே ஓய்வுபெற்ற நீதிபதியான அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் செலவுகளை

ஆர்.டி.ஐ-யில் கேட்டுப் பெற்றது விகடன் ஆர்.டி.ஐ குழு. அதன்படி ஆணையம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 29.2.2020 வரை 1,95,71,545 ரூபாய் செலவு செய்துள்ளனர். இதில் நீதிபதியின் சம்பளம் 23,68,355 ரூபாய். அலுவலக மின்கட்டணம் 1,22,131 ரூபாய். தொலைபேசிக் கட்டணம் 66,671 ரூபாய். விளம்பரக் கட்டணம் 18,76,933 ரூபாய் என செலவுப் பட்டியல் நீள்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு கொரோனா ஊரடங்கால் விசாரணை முடங்கியுள்ளது.

- சி.ஆனந்தராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism