Published:Updated:

“முடங்கியிருக்கும் சுற்றுலாத்துறை முதலில் மீளும்!” - ‘மதுரா டிராவல்ஸ்’ வி.கே.டி. பாலன்

வி.கே.டி. பாலன்
பிரீமியம் ஸ்டோரி
வி.கே.டி. பாலன்

“நீங்கள் உங்கள் கனவுகளுக்காக ஓட ஆரம்பித்தால் தோல்வி என்பது நிச்சயம் இருக்கவே இருக்காது!”

“முடங்கியிருக்கும் சுற்றுலாத்துறை முதலில் மீளும்!” - ‘மதுரா டிராவல்ஸ்’ வி.கே.டி. பாலன்

“நீங்கள் உங்கள் கனவுகளுக்காக ஓட ஆரம்பித்தால் தோல்வி என்பது நிச்சயம் இருக்கவே இருக்காது!”

Published:Updated:
வி.கே.டி. பாலன்
பிரீமியம் ஸ்டோரி
வி.கே.டி. பாலன்
டந்த ஆறு மாதங்களில் உலக அளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள துறையாக இருக்கிறது சுற்றுலாத்துறை. சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து நிறுத்தம், உள்நாட்டில் ரயில், பஸ் போக்குவரத்து நிறுத்தம், விருந்தினர் விடுதிகளில் தங்குவதற்கு பயம் எனப் பல காரணங்களால் சுற்றுலாத்துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

தற்போது ஊரடங்கு நடவடிக்கைகள் வேகமாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இனி சுற்றுலாத்துறையின் வளர்ச்சி எப்படியிருக்கும், இந்தத் துறை எப்படிப்பட்ட மாற்றங்களைச் சந்திக்கும் என ‘மதுரா டிராவல்ஸ்’ நிறுவனத்தின் அதிபரும் தமிழக சுற்றுலாப் பயணம் மற்றும் விருந்தோம்பல் சங்கத் தலைவருமான வி.கே.டி.பாலனிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

வி.கே.டி. பாலன்
வி.கே.டி. பாலன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி பெரிய தொழில் நிறுவனங்கள் வரை பொருளாதாரச் சரிவு காரணமாக ஆட்டம் கண்டுள்ளன. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இ.எம்.ஐ, இன்ஷூரன்ஸ், கல்விக் கடன் எனப் பல்வேறு நிதிச் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில் வல்லுநர்களும் பொருளாதார நிபுணர்களும், ‘பொது முடக்கத்தால் முதலாவதாக வீழ்ந்த சுற்றுலாத்துறை, கடைசியாகத்தான் மீண்டுவரும்’ என்கிறார்கள். மக்கள் மத்தியில் இப்போது கொரோனா குறித்த பயம் இருக்கிறது. அத்துடன் பொதுமுடக்கமும் தொடர்ந்து இருந்துவந்தது. மற்ற தொழில் செய்பவர்களுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதுகூட, சுற்றுலாத்துறை சார்ந்து தொழில் செய்பவர்களுக்கு எந்தத் தளர்வுகளும் கிடைக்கவில்லை. மற்ற தொழில்கள் மீளத் தொடங்கியுள்ள நேரத்தில் சுற்றுலாத்துறை புதிய தொடக்கமே இல்லாமல் இருப்பதால், இது கடைசியாகத்தான் மீண்டு வரும் என்று சொல்கிறார்கள்.

இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பொதுமுடக்கம் ஏற்பட்டபோது முதலில் பாதிக்கப்பட்டது சுற்றலாத்துறைதான். ஆனால், கொரோனா தளர்வுகளுக்குப் பின் முதலில் மீண்டுவருவதும் சுற்றுலாத் துறையாகவே இருக்கும். இதை என்னுடைய அனுபவத்தின் வாயிலாகச் சொல்கிறேன். இந்தப் பொதுமுடக்கத்தில் சுற்றுலாத்துறை சார்ந்து தொழில் செய்பவர்களுக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இது நிரந்தரமில்லை. இதற்கு முன் இயற்கைச் சீற்றங்களையும் பேரழிவுகளையும் நோய்த் தொற்றுகளையும் உலகம் சந்தித்தபோதுகூட இதே அளவு பயம் மக்களிடம் இருந்தது. உதாரணமாக, சுனாமி வந்தபோது, கடற்கரையையொட்டியுள்ள வீடுகள், மனைகளின் விலை மிகவும் குறைந்தது. எல்லோரும் வந்த விலைக்கு விற்றார்கள். ஆனால், இன்று அந்த பயம் நீங்கி மக்கள் சகஜநிலைக்கு வந்துள்ளனர். கடல் அருகில் வசிப்பதை அழகியல் சார்ந்த ஒன்றாகக் கருதுகின்றனர். அதனால் அந்த இடங்களின் விலை பல கோடிகளைத் தொட்டுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேன்சர், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் வந்தபோதுகூட மக்கள் சுற்றுலா செல்வதற்கு பயந்தனர். அதனால் பொருளாதாரச் சரிவு ஏற்படத்தான் செய்தது. ஆனால், அந்த பயம் நிரந்தரம் இல்லை; நிலைமை மாறும் என்பதற்கு அடுத்தடுத்து நிகழ்ந்த மாற்றங்களையும், அசுர வளர்ச்சிகளையும் நாம் உதாரணமாகச் சொல்லலாம். அதே போன்று கொரோனாவுக்குப் பிறகும்கூட எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியும் மாற்றமும் நிச்சயம் இருக்கும். பயத்தைவிட பொருளாதாரத் தேவைகள் அதிகம் என்பதால், மக்கள் இயல்புநிலைக்கு வந்துவிடுவார்கள்.

வி.கே.டி. பாலன்
வி.கே.டி. பாலன்

என்னைப் பொறுத்தவரை, சுற்றுலாத் துறைக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது. இந்த லாக்டெளனால் ஏற்பட்ட இழப்பை நஷ்டம் என்று சொல்லிவிட முடியாது. இது ஒரு தற்காலிக இடைவெளிதான். அடுத்த சில மாதங்களுக்கு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் செல்வதில் மிகுந்த கட்டுப்பாடுகள் இருக்கும். அதனால் மக்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்க ஆரம்பிப்பார்கள். அதே போன்று வீட்டிலேயே முடங்கிக்கிடந்த மக்கள், அதிலிருந்து தப்பிக்க மீண்டும் பயணங்களை மேற்கொள்வார்கள்.அப்போது சுற்றுலாத்துறை மீண்டும் உயிர்பெறும். இப்போதைய சூழலில் ஒரு பேருந்தில் இவ்வளவு நபர்கள்தாம் ஏற்ற வேண்டும் என்ற அரசின் கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கும்பட்சத்தில், பேருந்துகளைத் தொடர்ந்து இயக்குவதில் சிக்கல்கள் வரலாம். அதிலிருந்து மீள, பாதுகாப்பு உபகரணங்களை அரசாங்கம் எல்லோருக்கும் வழங்க வேண்டும் அல்லது கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்களின் சார்பாக அரசுக்கு வைக்கலாம் என்ற முடிவில் இருக்கிறோம்.

சுற்றுலாத்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள தடைகள் நீங்கி, சூழல் சரியாகும்போது பல மடங்கு முன்னேற்றம் இருக்கும். இந்த சமயத்தில்தான் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். மைதானத்துக்குள் வந்த பிறகு ஒருமுறை காயம் அடைந்ததற்காக, மைதானமே வேண்டாம் என்று ஒதுங்கக்கூடாது. போராடி ஜெயித்துக்காட்ட வேண்டும். அதே போன்றுதான் பிசினஸும். நீங்கள் உங்கள் கனவுகளுக்காக ஓட ஆரம்பித்தால் தோல்வி என்பது நிச்சயம் இருக்கவே இருக்காது” என உற்சாக வார்த்தைகளைச் சொல்லி முடித்தார் வி.கே.டி.பாலன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism