Published:Updated:

மதுரை: `மூதாட்டியின் மனு; தன் காரிலேயே வீட்டுக்கு அழைத்துச் சென்று நடவடிக்கை! - நெகிழவைத்த கலெக்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மூதாட்டியை அழைத்துச் செல்லும் கலெகடர்
மூதாட்டியை அழைத்துச் செல்லும் கலெகடர்

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த 80 வயதான பாத்திமா சுல்தான் உடல்நலம் இல்லாத நிலையிலும், மனு கொடுப்பதற்காக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனு அளிக்க வந்த மூதாட்டியைத் தன் காரில் ஏற்றி, அவர் வீட்டுக்கே சென்று பிரச்னையைக் கேட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மதுரை கலெக்டர் அன்பழகனின் செயல் அனைவரையும் நெகிழவைத்திருக்கிறது.

காரில்...
காரில்...

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த 80 வயதான பாத்திமா சுல்தான் உடல்நலம் இல்லாத நிலையிலும், மனு கொடுப்பதற்காக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தார்.

அலுவலகத்துக்கு வந்த கலெக்டர் அன்பழகன் மனுவுடன் நிற்கும் மூதாட்டியைப் பார்த்து, காரைவிட்டு இறங்கி, அந்த மூதாட்டியிடம் பேசினார். பிறகு அவர் உடல்நலம் பற்றி விசாரித்து தேநீர் கொடுக்க உத்தரவிட்டார்.

மூதாட்டிக்கு ஆறுதல் சொல்லும் கலெக்டர்
மூதாட்டிக்கு ஆறுதல் சொல்லும் கலெக்டர்

என்ன பிரச்னை என்று அவரிடம் விசாரித்தார். `தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளர், வீட்டை காலி செய்ய வைத்துவிட்டு, கொடுத்த பணத்தை தராமல் ஏமாற்றுவதாக' தெரிவித்தார் அந்த மூதாட்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, தனது காரில் மூதாட்டியை ஏற்றி அவர் வசிக்கும் வீட்டுக்குச் சென்றார். அவருக்கு ஆறுதல் கூறி, அவரிடம் தண்ணீர் வாங்கி குடித்த பிறகு மூதாட்டிக்குச் செலவுக்குப் பணம் கொடுத்தார்.

மூதாட்டியை அழைத்துச் செல்லும் கலெகடர்
மூதாட்டியை அழைத்துச் செல்லும் கலெகடர்

அவர் கொடுத்த புகாரை உடனடியாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் மூதாட்டியையும் அந்தப் பகுதி மக்களையும் நெகிழ வைத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு